Total Pageviews

Wednesday 19 October 2011

வந்துவிட்டது 4ஜி மொபைல்

 
 
உலக அளவில், மொபைல் போன்களைத் தயாரிப்பதில் இரண்டாவது இடத்தைக் கொண்டுள்ள சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், சென்ற வாரம் தென் கொரியாவில் சீயோல் நகரில், 4ஜி ஸ்மார்ட் போன் ஒன்றை வடிவமைத்து விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. காலக்ஸி எஸ்2 எல்.டி.இ., காலக்ஸி எஸ்2 எச்.டி. எல்.டி.இ. என அழைக்கப்படும் இவை நவீன தொழில் நுட்பத்தின் அடிப்படையில் இயங்குபவை. தற்போதைய 3ஜி தொழில் நுட்பத்தினைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிக வேகத்தில் டேட்டாவினைப் பரிமாறும் திறன் கொண்டவை.

எஸ்2 எல்.டி.இ. ஸ்மார்ட் போனில், ஆண்ட்ராய்ட் 2.3 சிஸ்டம் இயங்குகிறது. இதன் திரை 4.5 அங்குல அகலம் உடையது. இதில் இயங்குவது 1.5 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் செயல்படும் ப்ராசசர் ஆகும். எச்.டி. எல்.டி.இ. மொபைல் போனின் திரை 4.65 அங்குல அகலம் உடையது. இந்த திரை வெளிப்பாடு ஹை டெபனிஷன் அமோலெட் தொழில் நுட்பத்தினை அடிப்படையாகக் கொண்ட தாக இருக்கிறது. 110 சதவிகித இயற்கை வண்ண வெளிப்பாடு இருக்கும். 180 டிகிரி கோணத்தில் காணும் வாய்ப்பு இதில் உண்டு. இதில் இயங்கும் ப்ராசசர் வேகமும் 1.5 கிகா ஹெர்ட்ஸ் வேகம் உடையது.

4ஜி எல்.டி.இ. தொழில் நுட்பம் மூலம் மிக அதிக வேகமான டிஜிட்டல் செயல்பாட்டி னைப் பெறுவதுடன், அதிக ரெசல்யூ சனுடன் கூடிய வயர்லெஸ் சேவையும் கிடைக்கும். சாம்சங் நிறுவனத்தின் காலக்ஸி எஸ் 2 ஸ்மார்ட் போன்கள், ஏப்ரலில் வெளியானது முதல், பன்னாடெங்கும் இதன் விற்பனை ஒரு கோடியைத் தாண்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.





------------------- நன்றி -------------------

இந்த பதிவிற்கு ஓட்டு போட்டுவிட்டிர்களா? உங்கள் ஓட்டால் இந்த தகவல் அனைவருக்கும் சென்றடையும் ! ! !


0 comments:

Post a Comment

Popular Posts