Total Pageviews

Monday, 10 October 2011

சிக்கிய சிடியை வெளியே எடுப்பது எப்படி?

|0 comments
 


நீங்கள் அடிக்கடி சிடி பயன் படுத்துபவராக இருந்தால் இந்த சூழ்நிலையில் நீங்கள் என்றாவது சிக்கி இருப்பீர்கள். ஆம், உங்கள் சிடி கம்ப்யூட்டரின் சிடி டிரைவில் இருந்து வெளியே வராமல் உங்களை மோசமான நிலையில் சிக்க வைக்கும். எத்தனை முறை சிடி டிரைவின் எஜெக்ட் பட்டனை அழுத்தினாலும் அப்படியே டிரைவ் வெளியே வராமல் இருக்கும். இந்த சூழ்நிலையில் என்ன செய்தால் சிடி டிரைவ் திறக்கப்பட்டு சிடி வெளியே எடுக்கும்படி கிடைக்கும் என்பதனைப் பார்க்கலாம்.

முதலில் சிடி டிரைவ் திறக்கப்பட்டு சிடி இருக்கும் அந்த பிளாஸ்டிக் ட்ரே வெளியே நீண்டு வரவில்லை என்றால் கலவரப் படாதீர்கள். இந்த சூழ்நிலையை சமாளித்து சிடியை கீழ்க்காணும் வழிகளைக் கையாண்டு வெளியே எடுக்கலாம்.

வழி 1: மை கம்ப்யூட்டர் ஐகானில் கிளிக் செய்திடுங்கள். உங்கள் டெஸ்க்டாப்பில் இந்த ஐகான் இல்லை என்றால் நிச்சயம் ஸ்டார்ட் மெனுவில் இருக்கும். இதனைத் திறந்தவுடன் உங்கள் கம்ப்யூட்டரின் டிரைவ்கள் அனைத்தும் காட்டப்படும். இதில் Devices with removable stroage என்ற பிரிவில் சிடியின் படத்துடன் ஒரு ஐகான் இருக்கும். அல்லது சிக்கிக் கொண்ட சிடி ஏதேனும் ஒரு நிறுவனம் தந்துள்ள பேக்கேஜ் என்றால் நிறுவனம் தந்துள்ள ஐகானுடன் அந்த டிரைவ் காட்டப்படும். இதன் மீது ரைட் கிளிக் செய்திடுங்கள். கிடைக்கும் மெனுவில் Eject என்ற பிரிவில் கிளிக் செய்திடுங்கள். உங்கள் சிடி டிரைவில் உள்ள எஜெக்ட் பட்டன் தேய்ந்து போய் நீங்கள் அழுத்துகையில் அதன் செயல்பாடு மேற்கொள்ளப்படாத சூழ்நிலையில் இந்த வழி செயல்படும். இதற்கும் சிடி டிரைவ் திறக்கவில்லை என்றால் அடுத்த வழியைப் பார்க்கலாம்.

வழி 2: பேப்பர் கிளிப் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். (ஜெம் கிளிப் என்றும் சிலர் இதனை அழைக்கின்றனர்) அதன் ஒரு முனையை பிரித்து நீட்டுங்கள். சிடி டிரைவின் எஜெக்ட் பட்டன் அருகே சிறிய துளை இருப்பதைக் காணுங்கள். நிச்சயம் இதுவரை நீங்கள் இதனைக் கண்டு கொள்ளாமல் இருந்திருப்பீர்கள். இப்போது நிச்சயம் இதன் உதவி வேண்டியதிருக்கிறது. இந்த துளையில் மெதுவாக பிரித்த பேப்பர் கிளிப்பின் சிறிய கம்பியை உள்ளே செலுத்தவும். சிறிது உள்ளே செலுத்தியவுடன் அது ஒரு இடத்திற்கு மேல் செல்லாது. இந்த இடத்தில் சிறிய அளவில், மிகச் சிறிய அளவில் அழுத்தம் கொடுக்கவும். எஜெக்ட் செய்யும் போது இயங்கும் இன்டர்னல் லாக் உள்ள இடத்தில் இந்த அழுத்தம் கிடைப்பதால் டிரைவின் கதவு திறக்கும். உடனே சிடியை எடுத்துவிட்டு மீண்டும் டிரைவின் கதவினை மூடவும். மறக்காமல் பேப்பர் கிளிப் பின்னை எடுத்துவிடவும். ஏனென்றால் பலர் சிடி வெளியே வந்த சந்தோஷத்தில் பேப்பர் கிளிப்பைச் செருகியபடியே வைத்துவிடுவார்கள். இதற்கும் திறக்கவில்லை என்றால் அடுத்த வழிக்குச் செல்வோம்.

வழி 3: உங்கள் கம்ப்யூட்டரை ஷட் டவுண் செய்திடுங்கள். மின்சாரம் வரும் வயர்களை கம்ப்யூட்டர் சிபியுவில் இருந்து நீக்கிவிடுங்கள். இல்லை என்றால் இந்த வழியில் உங்கள் கம்ப்யூட்டர் சிபியு மற்றும் உங்களையே நீங்கள் காயப்படுத்திக் கொள்ளும் சூழ்நிலை உருவாகும். ஷட் டவுண் செய்து மின் இணைப்பை எடுத்துவிட்டீர்களா! இனி தட்டையாக உள்ள ஒரு ஸ்குரூ டிரைவரை எடுங்கள். சிடி டிரைவின் கதவின் அடிப்பாகத்தில் உள்ள சிறிய நீள இடைவெளியில் மெதுவாக அதனை வைத்து கொஞ்சம் மிகக் கொஞ்சம் தள்ளவும். ஸ்குரூ டிரைவரின் தட்டை முனையின் பகுதி சிறிய அளவில் உள்ளே சென்று விட்டால் அப்படியே டிரைவின் கதவை இழுக்கவும். டிரைவ் முழுவதும் பிளாஸ்டிக்கால் ஆன சிறிய சக்கரங்கள் மற்றும் கியர்கள் இயங்குவதால் நீங்கள் இழுப்பது தானாக வர வேண்டும். பலத்தை உபயோகிக்கக் கூடாது. மின்சக்தி மூலம் இயங்குவதை நீங்கள் இப்போது பலத்தை உபயோகித்து செயல்படுத்துகிறீர்கள் என்பதை மனதில் கொள்ள வேண்டும். இனி மெதுவாக இழுத்தால் டிரைவ் கதவு திறக்கப்படும். சிடியை எடுத்துவிட்டு டிரைவை ஒரு சோதனைப் பார்வை பார்க்கவும். நிச்சயம் அதில் ஏகப்பட்ட தூசு, ஏன் சிறிய முடி கூட இருக்கலாம். இதனை எல்லாம் ஒரு சிறிய மெல்லிதான் பிரஷ் கொண்டு சுத்தப்படுத்துங்கள். போகாத பிடிவாத அழுக்கு என்றால் கொஞ்சம் ஈரம் கலந்த துணி கொண்டும் சுத்தப்படுத்தலாம். இனி மீண்டும் கம்ப்யூட்டருக்கு மின் சக்தி கொடுத்து இயக்குங்கள். கம்ப்யூட்டர் பூட் ஆகி நிலைக்கு வந்தவுடன் சிடி டிரைவின் எஜக்ட் பட்டனை அழுத்தி கதவு திறந்து மூடுவதனை உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள்.

சரி, இந்த ஸ்குரூ டிரைவர் வைத்தியத்திற்கும் கதவு திறக்கவில்லை என்றால் என்ன செய்வது? என்ற கேள்வி உங்கள் மனதில் எழும். என்ன செய்யலாம்? மின் இணைப்பைத் துண்டித்து சிபியு உள்ளாக டிரைவை இணைத்திருக்கும் கேபிள்களை நீக்கி பின் டிரைவ் இணைக்கப்பட்டிருக்கும் ஸ்குரூகளை எடுத்துவிட்டு டிரைவைத் தனியாக எடுத்து டிரைவின் கதவைத் திறக்கலாம். அல்லது டிரைவை மட்டும் தனியே எடுத்து இவற்றை ரிப்பேர் செய்திடும் இடத்திற்குக் கொண்டு சென்றால் அவர்கள் சரியான முறையில் சிடியை எடுத்துத் தருவார்கள். அதன்பின் புதிய டிரைவ் ஒன்றை வாங்கி இணைப்பது இது போன்ற சூழ்நிலையைத் தவிர்க்கும்.





------------------- நன்றி -------------------

இந்த பதிவிற்கு ஓட்டு போட்டுவிட்டிர்களா? உங்கள் ஓட்டால் இந்த தகவல் அனைவருக்கும் சென்றடையும் ! ! !


Sunday, 9 October 2011

கம்ப்யூட்டர் கதாநாயகன் ஸ்டீவ் ஜாப்ஸ்……

|0 comments
 

சிகரம் தொட்ட ஸ்டீவ்:
"கம்ப்யூட்டர் இன்றி ஒரு அணுவும் அசையாது' என்றதற்போதைய அறிவியல் வளர்ச்சிக்கு, முக்கிய காரணகர்த்தாவாக இருந்தவர்களில் ஒருவர் ஸ்டீவ் ஜாப்ஸ்.ஆரம்ப கால கம்ப்யூட்டர் முதல் இக்கால "ஐபேட்' வரை உள்ள முக்கிய கண்டுபிடிப்புகள், இவரது மூளை "ஒர்க்ஷாப்'பில் உருவானவை. சிறு வயதில் சாப்பாடுக்கே வழியின்றி இருந்து, பிற்காலத்தில் சாதனையாளராக வளர்ந்தவர். அனைத்துக்கும் காரணம், இவரது கடின உழைப்புமட்டுமே. திறமையும் லட்சியமும் இருந்தால் எந்தசிகரத்தையும் எட்ட முடியும் என உலகுக்கு காட்டியவர்.ஒரு சாதாரண குடிமகனின் மறைவுக்கு, பல நாட்டு அதிபர்களும் பிரதமர்களும் இரங்கல் தெரிவிக்கின்றனர் என்றால், இவரது முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ளலாம். வாழ்க்கையில்பள்ளத்தையும் பார்த்தவர், உயரத்தையும் தொட்டவர் ஸ்டீவ் ஜாப்ஸ். இந்தக் கால இளைஞர்களுக்கு இவரது வாழ்க்கையே ஒரு பாடம் தான்.

ஆசையான ஆப்பிள் தோட்டம்:
ஸ்டீவ் ஜாப்ஸ், பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும்போது, தனது இருப்பிடத்திற்கு அருகிலுள்ள ஆப்பிள் தோட்டத்திற்கு செல்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார். அவருடைய சந்தோஷம், துக்கம் அனைத்தையும் அந்த தோட்டம் பார்த்திருக்கிறது. பிரென்னன் என்ற பெண்ணுடன் இவருக்கு கல்லூரியில் பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் காதலிக்கும் இடமும் இந்த தோட்டம் தான். அந்த வசந்த காலத்தை நினைவு கூறும்விதமாக, தனது நிறுவனத்திற்கு "ஆப்பிள்' என பெயர் சூட்டினார். நிறுவனம் ஆரம்பித்த பின்னரும், அந்த தோட்டத்திற்கு செல்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார் ஜாப்ஸ்.

வாழ்க்கைப் படிகள்:
1955 பிப்.,24.ல் ஸ்டீவ், அமெரிக்காவில் சான்பிரான்சிஸ்கோ நகரில் பிறந்தார்.
1970 படிப்பை முடித்த பிறகு இந்தியாவிற்கு வந்து புத்த மதத்தில் இணைந்தார்.
1974 மீண்டும் கலிபோர்னியாவிற்கு சென்று, பள்ளி நண்பர் ஸ்டீவ் உஜைன்க் என்பவருடன்இணைந்து "கோம்ப் பிரிவிவ் கிளப்' என்றகம்ப்யூட்டர் நிறுவனத்தை ஆரம்பித்தார்.
1976 இரண்டு பேரும் இணைந்து ஆப்பிள் 1 என்ற கம்ப்யூட்டரை உருவாக்கினர்.
1977 அதிக எடை கொண்ட ஆப்பிள் 2 என்றகம்ப்யூட்டரை உருவாக்கினர்.
1983 ஆண்டு, வணிக ரீதியாக ஆப்பிள் உருவாக்கப்படும் போது, கிராபிக்கல் யூசர் இன்டர்பேசுடன் (ஜி.யூ.ஐ.,) வடிமைக்கப்பட்டு, அதுதோல்வியடைந்தது.
* மகிண்டோஷ் விற்பனைக்கு வந்தது.
1984 ஜனவரியில் மகிண்டோஷ் என்ற கம்ப்யூட்டர், வெற்றிகரமாக ஜி.யூ.ஐ., மற்றும் மவுசுடன்வடிவமைத்து வெளியிடப்பட்டது
1985 நன்பருடன் ஏற்பட்ட மன வருத்தத்தின்காரணமாக ஜாப்ஸ், அந்நிறுவனத்தில் இருந்து வெளியேறினார்.
1986 ஜாப்ஸ், "நெக்ஸ்ட்' என்ற நிறுவனத்தைஆரம்பித்தார்.
1989 ஆப்பிள் நிறுவனத்திற்கு, 188 மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டது
1997 "ஐமேக்' என்ற புதிய டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் பெரிய வெற்றி பெற்றது.
2001 முதல் "ஐபேடு' விற்பனை செய்யப்பட்ட போது ஆப்பிள் நிறுவனம் "ஐடியூன்' சாப்ட்வேரை வெளியிட்டது.
2004 ஜாப்ஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுஅறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
2009 ஜாப்ஸ் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டார்.
2011 ஜன .,17 ஜாப்ஸ், உடல்நலக்குறைவால் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
* அக்.5 – புற்றுநோய், ஜாப்ஸ் உயிரைப் பறித்தது.

ஸ்டான்போர்டு பல்கலையை நெகிழ வைத்த சொற்பொழிவு:"ஒவ்வொரு நாளும் இறுதி நாள் தான்':
கம்ப்யூட்டர் வல்லுநர் என அறியப்பட்ட ஸ்டீவ் ஜாப்ஸ், சிறந்த பேச்சாளரும் கூட. 2005ஆம் ஆண்டு ஜூன்12ம் தேதி கலிபோர்னியாமாகாணத்தில் உள்ளஸ்டான்போர்டு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் அவரது பேச்சு பலராலும் பாராட்டப்பட்டது.

அந்த உரையின் தொகுப்பு:நான் கல்லூரியில் பட்டப்படிப்பை முழுமையாக முடிக்கவில்லை. நான் என் வாழ்வில் தொடர்புடைய மூன்றுகதைகளை உங்களுடன்பகிர்ந்தளிக்க விரும்புகிறேன். முதல் கதைபுள்ளிகளை இணைப்பது. நான் பிறக்கும் போது எனது தாய், தந்தை படித்துக் கொண்டிருந்தனர். என்னை மற்றொருவருக்கு தத்துக் கொடுத்தனர். அவர்கள் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், என்னை குறையின்றி வளர்த்தனர். அப்போது படிப்பை தொடர வேண்டாம் என முடிவெடுத்தேன். நண்பர்கள் உதவியுடன் அவர்கள் வீட்டின் தரையில் படுத்தேன். கோவில்களில் சாப்பிட்டேன். கஷ்டங்கள் தான் என்னுள் இருந்த உள்ளுணர்வையும் தன்னம்பிக்கையும் வளர்த்தன. பத்து ஆண்டு உழைப்பின்பயனாக, "மெகின்டோஷ்' கம்ப்யூட்டரை வடிவமைத்தேன். எனது முதல் கம்ப்யூட்டர், "டைப்போகிராபி'(அச்சுக் கலை) கொண்டது. 2வது கதை : "லவ் அண்ட் லாஸ்' நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. 20 வயதில் என் வீட்டில்ஆப்பிள் நிறுவனத்தைதுவக்கினேன். 10 ஆண்டு உழைப்பிற்கு பின் 2 பில்லியன் டாலர்களுடன் 4,000 பேரை வேலையில் அமர்த்தியது என் நிறுவனம். 30 வயதில் என்னுள் எழுந்த வெறிக்கு அளவே இல்லை. அப்போது என்நிறுவனத்திலிருந்து நான்வெளியேற்றப்பட்டேன். அடுத்த ஐந்து ஆண்டுகளில் "நெக்ஸ்ட்' மற்றும் "பிக்ஸர்' ஆகிய நிறுவனங்களை துவக்கினேன். அப்போது தான் என் வாழ்வில் காதல் மலர்ந்தது. "பிக்ஸரில்' முதல் கம்ப்யூட்டர் அனிமேஷன் சினிமாவான "டாய் ஸ்டோரி' உருவானது. சில காலம் கழித்து ஆப்பிள்நிறுவனம், "நெக்ஸ்ட்டை' வாங்கியது. நான் மறுபடியும் புதிய உத்வேகத்துடன்ஆப்பிளில் இணைந்தேன். மூன்றாவது கதை: இறப்புசிறு வயதில் ஒரு வாசகம் எனக்கு ரொம்ப பிடிக்கும்."உங்கள் வாழ்வின் ஒவ்வொரு நாளையும் இறுதி நாளாக நினைத்து வாழ்ந்தால், ஒரு நாள் அது நிறைவேறும்' என்பதே அந்த வாசகம். இதை நான்எப்போதும் கடைபிடிப்பேன். தினமும் காலையில் எழுந்து கண்ணாடியில் முகம் பார்க்கையில் இன்றே நமக்கு இறுதி நாள் என்று நினைத்துக் கொண்டு வேலைகளை துவக்குவேன். கடந்த ஆண்டு எனக்கு கணையத்தில் புற்றுநோய் இருப்பது, பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது நான் நலமாக உள்ளேன். ஆனால், எனது வாழ்நாள்இறுதிக் கட்டத்தை நோக்கி செல்வது எனக்கு தெரியும். உங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் குறைவு. அதை வீணாக்காதீர்கள். மற்றவர்கள் கூறிய கருத்துகளை வேதவாக்காக கொண்டு, வாழ்க்கையை நிர்ணயிக்காதீர்கள். உள்ளுணர்விற்கு மதிப்பளியுங்கள். "பசியோடு இருங்கள்; புதிய சிந்தனைகளோடு வாழுங்கள்'. இந்த வாசகத்துடன் உரையை முடித்தார் ஜாப்ஸ்

எது புதுமை:மற்ற மேதைகளை விட, வாழ்க்கையை வித்தியாசமான கோணத்தில், தத்துவார்த்தமாக பார்ப்பவர் ஸ்டீவ் ஜாப். பல்வேறு சந்தர்ப்பங்களில் அவர் கூறிய சில கருத்துகள்:
1. புதுமை என்பது, ஆயிரம் பொருட்களை, புதிய முறையில் உற்றுநோக்கி சிந்திக்கும் போது உருவாகிறது.
2. நீங்கள் பிறரிடம் எந்தவடிவத்தில் பொருள்வேண்டும் என்று கேட்கும் போதே, அவர்களின் பதிலே ஒரு புதிய பொருளைஉருவாக்க வழிவகுக்கும்.
3.உலகத்திற்கு கேடு விளைவிக்காமல், புதிய தொழில் நுட்பத்தைக் கொண்டு, பொருட்களை உருவாக்கி, மனிதர்களின் வாழ்வை செழிப்பாக்க வேண்டும்.

பலருக்கும் பாடமாக இருக்கும் ஸ்டீவ் ஜாப்ஸ் வாழ்க்கை :கஷ்டப்பட்ட காலம் முதல் கம்ப்யூட்டர் காலம் வரை…:
மறைந்த ஆப்பிள் நிறுவன தலைவரின் முழுப் பெயர்,ஸ்டீவன் பால் ஜாப்ஸ். 1955ம் ஆண்டு பிப்.24ம் தேதி அமெரிக்காவில் சான்பிரான்சிஸ்கோநகரில் பிறந்தார். இவரது பெற்றோர் அப்துல்பாட்டா ஜான் ஜன்டாலி, ஜோன் சிப்பெல். ஜாப்ஸ் பிறந்த போது அவரது பெற்றோருக்கு திருமணம் ஆகவில்லை. பிறந்த ஒரு வாரத்தில் பால் ஜாப்ஸ் மற்றும் கிளாரா ஜாப்ஸ் என்ற தம்பதிக்கு தத்துக் கொடுக்கப்பட்டார். 1972ம் ஆண்டு கலிபோர்னியாவில் உள்ள ஹோம்ஸ்டெட் மேல் நிலை பள்ளியில் படிப்பை முடித்தார். பின் அமெரிக்காவின் ஓரிகன் மாநிலத்தின் போர்ட்லாண்டு நகரில் உள்ள ரீட் கல்லூரியில் பட்டப்படிப்பில் சேர்ந்தார். ஏழ்மையான நிலையால் கல்லூரி படிப்பை பாதியிலேயே கைவிட்டார். நண்பர்கள் அறையில் தங்கியும், உணவிற்காக பழைய பாட்டில்கள், பேப்பர்கள் விற்றும், வார இறுதியில் "ஹரே கிருஷ்ணா' கோவிலில் இலவச உணவை பெற்றும் நாட்களை கழித்தார். 1991ம் ஆண்டு மார்ச் 18ம் தேதி, லாரின் பவல் என்பவரை மணந்தார். இவர்களது திருமணம், ஒரு புத்த துறவியின் முன் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர். இவர் தவிர, பே எரியாபிரென்னன் என்ற பெண்ணின் மூலமாக ஒரு பெண் குழந்தையும் உள்ளது. நிறுவனம் தொடங்கியது எப்படி: ஸ்டீவ் ஜாப்ஸ், ரொனால்டு வாய்ன் மற்றும் ஸ்டீவ் வோஸ்னியாக் ஆகிய நண்பர்களுடன் இணைந்து ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனத்தை 1976 ஏப்.,1ல் தொடங்கினர்.இந்நிறுவனம் பர்சனல் கம்ப்யூட்டர், எலக்ட்ரானிக்ஸ்,"ஐ-பேட்', "ஐ-போன்'," ஐ-பாட்' உள்ளிட்ட தயாரிப்புகளில் தனிச்சிறப்பு பெற்றது. 1985ல் ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து விலகிய ஸ்டீவ் ஜாப்ஸ், "நெக்ஸ்ட்' எனும் கம்ப்யூட்டர் நிறுவனத்தை தொடங்கினார். 1996ல் ஆப்பிள்நிறுவனம், ஸ்டீவ் ஜாப்சை திரும்ப அழைத்துக் கொண்டது. இந்நிலையில், அவருக்கு கணைய புற்றுநோய் என்றஅரிதான நோய் ஏற்பட்டது. வேலை செய்யாத "எஸ்கேப்': கம்ப்யூட்டரில் அந்த நேரத்தில் செய்துகொண்டு இருந்த பணியில் இருந்து தப்பிக்க "எஸ்கேப்' என்ற பட்டன் இருக்கிறது. ஆனால் உலகிற்கே கம்ப்யூட்டர் கற்றுக் கொடுத்த ஸ்டீவ் ஜாப்ஸ், புற்றுநோயிடம் இருந்து "எஸ்கேப்' ஆக முடியாமல் அக்.5ம் தேதி பலியானார்.

எட்டு அதிசயங்கள்:

ஸ்டீவ் ஜாப்சின் கண்டுபிடிப்புகள், உலக தொலைதொடர்பு உலகில் புரட்சியை ஏற்படுத்தின.

ஆப்பிள் 2:
"ஆப்பிள் 2′ கம்ப்யூட்டர்,"பெர்சனல் கம்ப்யூட்டர்களில்'முதன்மையானது.

"மெகின்டோஷ்' :
"மெகின்டோஷ்' கம்ப்யூட்டர்,என்பது கிராபிக்கல் யூசர் இன்டர்பேஷ்' கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் சிறப்பம்சம், கம்ப்யூட்டர் பயன்படுத்துவோருக்குபடங்கள், கட்டங்கள், சின்னங்கள் மூலமாக கட்டளைகளை விளக்கலாம். உதாரணமாக, "மெனு',"பட்டன்' போன்றவற்றை கூறலாம்.

நெக்ஸ்ட்:
ஆப்பிளிலிருந்து வெளியேறிய பின் ஜாப்ஸ் உருவாக்கிய சக்தி வாய்ந்த கம்ப்யூட்டர், "நெக்ஸ்ட்'.

ஐமேக்:
இந்த கம்ப்யூட்டரின் சிறப்பம்சம், இதன் தோற்றம். கம்ப்யூட்டரின் மானிட்டர், பிளாஸ்டிக்கால் ஆனது. இந்த வடிவம் கம்ப்யூட்டர் உலகில் புத்துணர்ச்சியை அளித்தது. ஐபாட்இது முதல் டிஜிட்டல் மியூசிக்பிளேயர். சாமானியர்களும் பயன்படுத்தும் வகையில் எளிதாக இருந்ததே இதன் வெற்றிக்கு காரணம்.

ஐடியூன்ஸ்:
இந்த முறையில், டிஜிட்டல் ஒலியில் பாடல்களை "டவுண்லோடு' செய்யலாம். காப்புரிமை பிரச்னை கிடையாது. இணையதளங்கள்வாயிலாக, பாடல்கள் திருடப்பட்டது ஒழிக்கப்பட்டது.

ஐபோன்:
மொபைல் போன் உலகில் பெரும் புரட்சியை கொண்டு வந்தது ஐபோன்கள். எத்தனையோ மாடல்களில் மொபைல் போன்கள் வந்தாலும், இதன் விற்பனை இன்றும் சாதனை படைக்கிறது.

ஐபேடு:
சில நிறுவனங்கள் ஐபேடுக்குநிகராக "டேப்லட் கம்ப்யூட்டரை'வடிவமைத்து வருகின்றன. ஆனால், ஐபேடுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. சிறிய கையடக்ககம்ப்யூட்டர் போன்று செயல்படுவதே, இதன் சிறப்பம்சம்.

(dm)


Filed under: Hot News Tagged: உலக செய்திகள், வரலாறுகள்

Saturday, 8 October 2011

பிரச்னைக்குத் தீர்வு தரும் விண்டோஸ் 7

|0 comments
 
 

விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் உள்ள கம்ப்யூட்டரில் இயங்கும் புரோகிராம் ஒன்று சரியாக இயங்காமல் முடங்குகிறதா? இதற்கான தீர்வு தரும் வழியினை விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் தன்னுள்ளே கொண்டுள்ளது. ஸ்டார்ட் அழுத்திக் கிடைக்கும் சர்ச் பாக்ஸில், Troubleshoot என டைப் செய்து என்டர் அழுத்தவும். அதன் பின்னர் கிடைக்கும் பட்டியலில் Troubleshooting என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது விண்டோஸ் 7 சிஸ்டத்தில் உள்ள Troubleshooter என்னும் பிரிவினை இயக்கும். இதில் பலவகையான பிரச்னைகள் குறித்த பட்டியல் கிடைக்கும். இங்கு உங்கள் பிரச்னையே பட்டியலிடப் பட்டிருக்கலாம். அல்லது சார்ந்த பிரிவினைத் தேர்ந்தெடுத்து, மேலும் உள்ளாகச் சென்று உங்களுடைய பிரச்னை குறிக்கப்பட்டிருப் பதனைக் காணலாம். சில புரோகிராம்கள் தரும் பிரச்னை எனில், அவை இதற்கு முந்தைய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் நன்றாக இயங்கி, தற்போது சரியாக இயங்கவில்லை என்றால், இங்கு கிடைக்கும் Program Compatibility என்ற விண்டோவில் அதற்கான தீர்வினைப் பெறலாம்.

இந்த விண்டோ சென்றவுடன், நம் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ள அனைத்து புரோகிராம் களின் பட்டியல் காட்டப்பட்டு எந்த புரோகிராமில் பிரச்னை உள்ளது என நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் Troubleshoot program என்ற பிரிவில், அந்த புரோகிராமில் ஏற்படக் கூடிய அனைத்து பிரச்னைகளும் பட்டியலிடப்படும். நம் பிரச்னையைத் தேர்ந்தெடுத்தால், தீர்வு காட்டப்படும்.

இதற்கு முந்தைய ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலும் இந்த வசதி இருந்தாலும், பெரும்பாலும் "This device is working properly" என்ற விடையே கிடைத்து வந்தது. ஆனாலும் பிரச்னை தீர்க்கப் படவில்லை. ஆனால் விண்டோஸ் 7 சிஸ்டத்தில், இந்த வசதி நன்றாகவே இயங்குகிறது.





------------------- நன்றி -------------------

இந்த பதிவிற்கு ஓட்டு போட்டுவிட்டிர்களா? உங்கள் ஓட்டால் இந்த தகவல் அனைவருக்கும் சென்றடையும் ! ! !


XP சிஸ்டத்திற்கு இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 8

|0 comments
 
 

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பு 9, எக்ஸ்பி சிஸ்டத்தில் வேலை செய்யாது என மைக்ரோசாப்ட் அறிவித்து, அந்நிலையிலிருந்து மாறாமல் உள்ளது. எக்ஸ்பி சிஸ்டத்துடன் இணைந்து தரப்படும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 6 ஆபத்தானது. அதனை வைத்து இயக்குபவர் களுக்குப் பாதுகாப்பில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இன்னும் எக்ஸ்பி சிஸ்டம் உள்ளவர்கள், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8 ஐத் தாங்களாக டவுண்லோட் செய்து இயக்கலாம்.

இந்த தொகுப்பினை டவுண்லோட் செய்திட விரும்புபவர்கள், ஏதேனும் ஒரு பிரவுசர் மூலம் கூகுள் தேடுதளம் சென்று, 'internet explorer 8' என அதன் தேடு தளத்தில் டைப் செய்து என்டர் செய்தால், எந்த தளத்தில் கிடைக்கும் என்ற தகவல் கிடைக்கும். இல்லை என்றால், www.microsoft.com/download/en/details.aspx?id=43 என்ற முகவரியில் உள்ள தளம் சென்று டவுண்லோட் செய்து கொள்ளலாம்.

டவுண்லோட் செய்த பைலை உடன் இயக்கினால், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 8 உங்கள் கம்ப்யூட்டரில் பதியப்படும். இன்ஸ்டால் செய்திடுகையில் மறக்காமல் 'Install Updates' என்ற பீல்டில் டிக் செய்து இசைவைத் தெரிவிக்க வேண்டும். அப்போதுதான், தொடர்ந்து இன்டர்நெட் எக்ஸ்புளோரர் அப்டேட் செய்யப்பட்டு பாதுகாப்பாக இயங்கும். இன்ஸ்டலேஷன் முடிந்தவுடன், விண்டோஸ் சிஸ்டத்தினை மீண்டும் இயக்க வேண்டியதிருக்கும்.

நீங்கள் இதுவரை இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 6னைப் பயன்படுத்தி வந்திருந்தால், நிறைய மாற்றங்களை, நவீன வசதிகளை இதில் காணலாம். இணைய தளங்களை, இடையே நிறுத்தாமல் நிலையாக இறக்கிடும் தன்மை, பிரவுசிங் டேப்களில் மாற்றம், கிராஷ் ஆனால் மீண்டும் இயங்க வசதி, கெடுதல் விளைவிக்கும் இணைய தளங்கள் அல்லது பைல்களைத் தடுக்கும் ஸ்மார்ட் ஸ்கிரீன் பில்டர் ஆகியவற்றைக் காணலாம்.

இதில் 'InPrivate' வகை பிரவுசிங் தரப்பட்டுள்ளது. இதில் இயங்குகையில், ஹிஸ்டரி, தற்காலிகமாக இறக்கம் செய்யப்பட்ட பைல்கள், தகவல் படிவங்கள், குக்கீஸ், யூசர் ஐ.டி., மற்றும் பாஸ்வேர்ட்கள் ஆகியவை, பிரவுசரால் பாதுகாக்கப்படுகிறது. இதனால், வேறு ஒருவர், மற்றொருவர் தேடிய தளங்களைப் பற்றிய குறிப்பு, தகவல்களைப் பற்றிய குறிப்புகளை அறிந்து கொள்ள இயலாது. அத்துடன், நாம் பார்க்கும் தளங்கள், நம்மைப் பற்றிய தகவல்களை எந்த அளவிற்குத் தெரிந்து கொள்ளலாம் என்பதனையும் நம்மால் வரையறை செய்திட முடியும்.

மேலும், பேவரிட்ஸ் பட்டியலில் தரப்படும் பட்டையில், இணையதளங்களுக்கான தொடர்பு மட்டும் இல்லாமல், அந்த தளங்களுக்கான வெப் ஸ்லைஸ், வெப் பீட் மற்றும் டாகுமெண்ட்கள் காட்டப்படுகின்றன. பிரவுசிங் ஹிஸ்டரியின் அடிப்படையில், எந்த எந்த தளங்களைக் கூடுதலாகப் பார்க்கலாம் என்ற பட்டியலும் தரப்படுகிறது. இணைய தளங்களில் நாம் சில சொல் கொண்டு தேடும் Find ஆப்ஷனுக்குப் பதிலாக, இன்லைன் பைண்ட் டூல் பார் (Inline Find Tool bar) ஒன்று தரப்பட்டுள்ளது. இதனை கண்ட்ரோல்+ எப் கீகளை அழுத்திப் பெறலாம்.

சிறப்பான செயல்பாடு, எளிதாக பக்கங்களில் தேடிச் செல்லும் வசதி, தரவிறக்கத்தில் புதிய வசதி, எச்.டி.எம்.எல்.5 க்கான சப்போர்ட், கூடுதல் வேகம் என, ஒரு பிரவுசரில் நாம் விரும்பும் அனைத்து அம்சங்களும் இருப்பதால், எக்ஸ்பி பயன்படுத்துபவர்கள், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர் தான் வேண்டும் என எண்ணினால், பதிப்பு 8 ஐ தரவிறக்கம் செய்து பயன்படுத்துவது நல்லது.




------------------- நன்றி -------------------

இந்த பதிவிற்கு ஓட்டு போட்டுவிட்டிர்களா? உங்கள் ஓட்டால் இந்த தகவல் அனைவருக்கும் சென்றடையும் ! ! !


Popular Posts