Total Pageviews

Friday 17 February 2012

கூகுளின் அனைத்து வசதிகளும் ஒரே இடத்தில் பெற….

|0 comments

கூகுள் பல பயனுள்ள சேவைகளை பயனாளர்களுக்கு வழங்கி வருகின்றது. பிளாக்கர், ஜிமெயில், யூடியுப், பீட்பர்னர் என இதன் பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது.

இந்த சேவைகளுக்கு செல்ல அந்தந்த தளத்தின் சரியான URL கொடுத்து தான் ஓபன் செய்ய வேண்டும். இதற்கு பதில் ஒரே கிளிக்கில் கூகுளின் அனைத்து சேவைகளையும் பயன்படுத்த முடியும்.

இந்த செயலை சுலபமாக செய்ய ஒரு பயனுள்ள குரோம் நீட்சி உள்ளது. இந்த நீட்சியை குரோமில் இணைத்து கொண்டால் போதும். கூகுளின் அனைத்து சேவைகளுக்கும் ஒரு நொடியில் சென்றுவிடலாம். ஒவ்வொரு முறையும் URL டைப் செய்ய வேண்டிய அவசியமில்லை.

நீட்சியின் பயன்கள்:

1. ஒவ்வொரு முறையும் URL கொடுத்து தளத்தை ஓபன் செய்ய வேண்டிய அவசியம் இல்லை, அடிக்கடி உபயோகிக்கும் கூகுள் சேவைகளில் முதலில் வைத்து கொண்டும் ஒரே கிளிக்கில் அந்த தளத்திற்கு சென்று விடலாம்.

2. உங்களுக்கு எத்தனை கூகுள் சேவைகள் தெரிய வேண்டும் என்பதை நீங்களே தெரிவு செய்து கொள்ளலாம்.

3. எந்த இணையத்தளத்தின் இணைய பக்கத்தையும் ஜிமெயில் மற்றும் பிளாக்கரில் share செய்யும் வசதி.

4. கூகுள் சேவைகளை icon மட்டும் உங்களுக்கு தெரியும் படி தெரிவு செய்து கொள்ளலாம்.

5. ஜிமெயில் மற்றும் ரீடர்களில் இன்னும் படிக்காத பதிவுகளின் எண்ணிக்கையை காட்டுவது இதன் கூடுதல் சிறப்பு.

உபயோகிக்கும் முறை: இந்த Terminal for Google நீட்சியை தரவிறக்கம் செய்து குரோம் உலாவியில் நிறுவிய பிறகு குரோமில் தோன்றும் அந்த ஐகானை கிளிக் செய்தால் கூகுள் சேவைகள் வரும்.

தோன்றும் சேவைகளில் இது வேண்டாம் குறிப்பிட்ட சேவைகள் மட்டும் தெரிந்தால் போதும் என்று எண்ணினால் அங்கு உள்ள Options Page என்பதை கிளிக் செய்யுங்கள்.

அதன் பின் தோன்றும் விண்டோவில் Services என்பதை கிளிக் செய்யுங்கள். அதில் Enabled Services என்பதில் உள்ள சேவைகள் நீட்சியை கிளிக் செய்தால் வரும், Disabled Services என்பதில் உள்ள சேவைகள் உங்களுக்கு தெரியாது. இதில் உங்கள் விருப்பம் சேவைகளை நகர்த்தி கொள்ளலாம்.

இனி அனைத்து சேவைகளின் URL ஞாபகம் வைத்து கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. ஒரே கிளிக்கில் எந்த சேவைக்கும் சுலபமாக செல்லலாம்.

MP4 Player மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கு

|0 comments
 


கணணியில் பணியாற்றிக் கொண்டிருக்கையில் சிறிது நேரம் ஓய்வு தேவைப்படின் பாடல்களை கேட்டு ரசிப்போம்.
இசை பிரியர்களுக்கு உதவும் வகையில் புதிய நுட்பங்களுடன் கூடிய MP4 மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து உங்கள் கணணியில் நிறுவிக் கொள்ளவும். இந்த மென்பொருளானது உங்கள் கணணியில் YouTube இலிருந்து பதிவிறக்கபட்ட MP4 மற்றும் FLV வீடியோக்களை எளிதாக இயக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தரவிறக்க சுட்டி

Popular Posts