Total Pageviews

Saturday 24 March 2012

Far cry ஒரு அட்டகாசமான ஆக்‌ஷன் கேம்

|0 comments
 
 



ஆக்‌ஷன் வீடியோ கேம் பிரியர்களை மிகவும் கவர்ந்த விளையாட்டு என்றால் அது Far Cry தான். System requirements மிகவும் குறைவாக உள்ள அதேவேளை அதி உச்ச கிராபிக்ஸ் நுட்பத்தையும் கொண்டது இந்த கேம்.

ஜாக் என பெயர் கொண்ட மாலுமி ஒருவன் ஊடகத்தை சேர்ந்த பெண் ஒருவரை தென் பசுபிக் இல் அமைந்துள்ள Micronesia என்னும் தீவுக்கு அழைத்து செல்கிறான். அந்த தீவின் அருகே தரித்து நிற்கும்போது அங்குள்ள ஆயுதக்குழுவினரால் அவனது படகு தாக்கி அழிக்கப்படுகிறது. ஊடகத்தை சேர்ந்த பெண் அக்குழுவினரால் கைது செய்யப்படுகிறாள். அதில் இருந்து தப்பும் ஜாக், அந்த தீவினுள் நுழைந்து அந்த பெண்ணை தேட ஆரம்பிக்கிறான்.
அதன் பின்னர் அந்த ஆயுதக்குழுவினருக்கும் ஜாக்கிற்கும் இடையில் நடக்கும் மோதலே இந்த Game இன் கதை.
2004 ஆம் ஆண்டு வெளியாகிய இந்த Game இல் வரும் கிராபிக்ஸ் காட்சிகள் எல்லாமே மிகச்சிறந்தவை. பசுபிக் பிரதேசத்தில் உள்ள காடுகள் மூடிய தீவின் இயற்கை காட்சிகள், வித்தியாசமான குரங்குகள், காடுகளுக்குள் இடம்பெறும் மோதல்கள், படகு மோதல்கள், திடீர் திடீர் என பாய்ந்துவரும் சிறிய குரங்குகள், கைகளில் பாரிய ஆயுதங்களை தாங்கிய குரங்கு போன்ற விகாரமடைந்த மனிதர்கள் என ஏனைய ஆக்‌ஷன் Game களில் இருந்து இது முற்றிலும் மாறுபட்டிருந்தது.

இந்த Game 2004 ஆம் ஆண்டு Crytek நிறுவனத்தினரால் வடிவமைக்கப்பட்டு Ubisoft இனால் வெளியிடப்பட்டிருந்தது. வெளியிட்டு 4 மாதங்களுக்குள் 730,000 பிரதிகளை விற்பனை செய்து சாதனை படைத்திருந்தது. இந்த Game இன் கதை 2008 ஆம் ஆண்டு திரைப்படமாக எடுக்கப்பட்டிருந்தது. ஆனால் எதிர்பார்த்தளவு ஓடவில்லை.

அதன் பின்னர் இதன் இரண்டாம் பாகம் Far Cry 2 2008 ஆம் ஆண்டு Ubisoft நிறுவனத்தினரால் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டிருந்தது. ஆனால் முன்னைய பாகத்தை போல் இரண்டாம் பாகம் சிறப்பாக அமையவில்லை. இருந்த போதிலும் 2009 ஆண்டு முடிவின் போது 2.9 மில்லியன் பிரதிகள் விற்பனையாகியிருந்தது.

இதன் அடுத்த பாகமான Far Cry 3 இந்த வருடத்தில் வெளியாகியுள்ளது. ஏற்கனவே வெளியாகியிருந்த ட்ரெயிலரும், ஸ்கிரீன் சாட் களும் எதிர்பார்ப்பை எகிற வைத்திருந்தது. இன்னும் எங்கள் நாட்டிற்கு இதன் பிரதிகள் விற்பனைக்கு வரவில்லை. ஏற்கனவே 2011 ஆம் ஆண்டு வெளியாகியிருந்த டெமோ வின் படி இதன் கதை, தீவு ஒன்றிற்கு சுற்றுலா வரும் ஜேசன் மற்றும் அவரது காதலியும் உள்ளூர் மோதலால் பிரிக்கப்படுகிறார்கள். இவ்வாறு பிரிக்கப்பட்ட ஜேசன் தன் காதலியை தேடிச்செல்கிறார். இங்கு Players ஜேசன் இன் காதாபாத்திரத்தை ஏற்று விளையாடுகிறார்கள்..

எங்கள் நாட்டிற்கு இன்னமும் இதன் பிரதிகள் வரவில்லை. டொரன்ரில் கூட பெற்றுக்கொள்ளமுடியவில்லை.

Far Cry தளம் செல்ல Far Cry
பேஸ்புக் பக்கம் Far Cry

கூகுள் தேடுபொறியின் அடுத்த பரிணாமம்

|0 comments



எத்தனை தேடுபொறிகள் வந்தாலும் முதலிடத்தை எப்போதும் தக்கவைத்துக் கொள்வது கூகுள் தளம். அதற்கு காரணம் தனது தேடல் முடிவுகளில் புதுப்புது நுட்பங்களை அறிமுகப்படுத்துவது தான். தேடல் முடிவுகளில் பதிவுகளை தனித்துக் காட்டும் Rich Snippets மூலம் அடுத்த பரிணாமத்தை எட்டியுள்ளது கூகுள் தளம்.
Snippets:


நாம் தேடுபொறியில் ஏதாவது ஒன்றை தேடும் போது அது தொடர்புடைய முடிவுகள் வரும் அல்லவா? அப்படி வரும் பதிவின் கீழே உள்ள விளக்கம்(Description) தான் Snippets எனப்படும்.
Rich Snippets:

Recipes Snippet

கடந்த 2009-ஆம் ஆண்டு தேடல் முடிவுகளில் Rich Snippets என்னும் முறையைக் கொண்டு வந்தது கூகுள். பதிவின் உள்ளடக்கத்தை தேடுபவர்களுக்கு முன்னிலைப்படுத்திக் காட்டுவது தான் Rich Snippets ஆகும். மேலே உள்ள படத்தில் உள்ளது "சிக்கன் பிரியாணி" பற்றிய கூகுள் தேடலில் வந்த சமையல்(???) முடிவாகும். அதில் "பிரியாணியின் படம், சமையல் செய்ய ஆகும் நேரம், உணவில் உள்ள கலோரி" ஆகியவற்றை முன்னிலைப்படுத்திக் காட்டுகிறது. இது Recipes Snippet ஆகும்.

எப்படி சமைப்பது? கூகிளில் தேடலாம்! என்ற பதிவில் பார்த்ததும் இந்த Recipes Rich Snippets முறை தான்.
Rich Snippets வகைகள்:

Rich Snippets முறையில் கீழ்வரும் பதிவுகளை கூகுள் எடுத்துக் கொள்கிறது.
  • Reviews
  • People
  • Products
  • Businesses and organizations
  • Recipes
  • Events
  • Music
  • Video
  • Application

நம்முடைய பதிவுகள் இது போன்ற Rich Snippets முறையில் தானாக வராது. அதற்காக சில நிரல்களை சேர்க்க வேண்டும். இதற்கென்று சில நிரல் முறைகள் உள்ளன. அவைகள்,

இதனால் என்ன பயன்?

கூகிளில் நமது முடிவுகள் வரும் போது இது போல் தனித்து தெரிந்தால் அதிக நபர்கள் அதனை க்ளிக் செய்வார்கள். இதனால் தேடுபொறிகள் மூலம் அதிக வாசகர்கள் கிடைப்பார்கள்.

இந்த முறை Google.com முகவரியில் மட்டுமே வரும். மற்ற கூகுள் முகவரிகளில் வராது.

இறைவன் நாடினால், இந்த Rich Snippets-ஐ நமது பதிவில் எப்படி சேர்ப்பது? என்பது பற்றி அடுத்தடுத்து பார்ப்போம்.

அதுவரை சிக்கன் பிரியாணி செய்வது எப்படி? என்று தெரிந்துக் கொண்டு உங்கள் நண்பர்களையும், உறவினர்களையும் சமைத்து அசத்துங்கள்!!!

தேவையில்லாத மின்னஞ்சல்களை தடை செய்வதற்கு

|0 comments
 
 
email ,lockerஇணையத்தில் உலாவுகையில் மின்னஞ்சல் முகவரியை பகிர்ந்து கொள்ளும் விடயத்தில் கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
 
இதன் மூலம் ஸ்பேம் என்று சொல்லப்படும் தேவையில்லாத மின்னஞ்சல்களை தவிர்க்கலாம்.
 
ஆனால் இணையத்தில் உலாவும் போது ஏதாவது ஒரு காரணத்திற்காக மின்னஞ்சல் முகவரியை சம்ர்பிப்பது தவிர்க்க இயலாததாக இருக்கிறது.
 
இது போன்ற நேரங்களில் தயக்கமில்லாமல் பயன்படுத்துவதற்காக என்றே தற்காலிக மின்னஞ்சல் சேவைகளும் உருவாக்கப்பட்டுள்ளன.
 
டட்மெயில், நாட் ஷேரிங் மை இன்போ என்று பல இணையத்தளங்கள் வேண்டாத மின்னஞ்சல்களில் இருந்தும், விளம்பர மின்னஞ்சல்களில் இருந்தும் பாதுகாப்பு அளிக்கின்றன.
 
இந்த வரிசையில் பவுன்சர் என்ற தளம் புதிதாக அறிமுகமாகி உள்ளது. மின்னஞ்சல்களை தடை செய்வதில் இது கொஞ்சம் புதுமையான வழியை பின்பற்றுகிற‌து.
 
பவுன்சர் புதிதாக ஒரு மாற்று மின்னஞ்சலை உருவாக்கித் தாராமல் உங்கள் மின்னஞ்சல் முகவரியையே மாற்றித் தருகிறது. அதாவது பிட்.லே போன்ற மின்னஞ்சல் சுருக்க சேவையை போல இதுவும் மின்னஞ்சல் முகவ‌ரியை சுருக்கி தருகிற‌து.
 
இதற்காக இந்த தளத்தில் மின்னஞ்சல் முகவ‌ரியை சமர்பித்தவுடன் அதனை அழகாக சுருக்கி தருகிறது. தேவைப்பட்டால் இந்த முகவரியை விருப்பத்திற்கு ஏற்ப மாற்றிக் கொள்ளலாம்.
 
அதன் பிறகு எந்த தளத்தில் மின்னஞ்சல் முகவரியை சம‌ர்பிக்க வேண்டியிருந்தாலும் இந்த சுருக்கமான முகவரியை அளித்தால் போதும்.
 
பதில் மின்னஞ்சல்கள் பவுன்சர் முகவரி வழியே உங்கள் இன்பாக்சை வந்தடைந்து விடும். ஆனால் உங்கள் உண்மையான மின்னஞ்சல் முகவரி யாருக்கும் தெரியாது. பாதுகாப்பாகவே இருக்கும்.
 
இந்த தளம் சுருக்கப்பட்ட மின்னஞ்சல் முகவ‌ரியை அதிலிருந்தே டிவிட்டர் அல்லது பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளலாம். பவுன்சர் முகவரியை எப்போது வேண்டுமானாலும் ரத்து செய்து விடலாம்.அதே போல எத்தனை முகவரிகளை வேண்டுமானாலும் உருவாக்கி கொள்ளலாம்.
 

Popular Posts