Total Pageviews

Tuesday 14 February 2012

வேர்ட்டின் போர்மட்டை மாற்றுவதற்கு

|0 comments
 


வேர்ட் டெக்ஸ்ட்டில் சில குறிப்பிட்ட சொற்களை மற்ற சொற்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்ட அழுத்தமாக(Bold), அடிக்கோடு(Underlined), சாய்வு(Italic) மற்றும் வேறு சில போர்மட்களில் அவற்றை அமைத்திருப்போம்.
இவ்வாறு அமைத்த பின்னர் இந்த போர்மட்டிங் தேவை இல்லை என எண்ணினால், இவற்றை மொத்தமாக நீக்க வேண்டுமென்றால் இதனைத் தெரிவு செய்து மெனு பார் சென்று ஒவ்வொரு ஐகானாகக் கிளிக் செய்வோம்.
இதற்குப் பதிலாக இரண்டு ஷார்ட்கட் கீகளைப் பயன்படுத்தலாம். போர்மட்டிங் நீக்கி எளிமையான டெக்ஸ்ட் மட்டுமே தேவைப்படும் சொற்களைத் தெரிவு செய்து கொள்ளுங்கள்.
பின் Ctrl+Shft+Z அழுத்துங்கள். மொத்தமாக போர்மட்டிங் அனைத்தும் நீக்கப்படும். Word உள்ளாக ResetChar என்ற கட்டளையை அமல்படுத்துகிறது. இதனை Ctrl+Space Bar அழுத்தியும் மேற்கொள்ளலாம்.
இதே போல ஏதேனும் பாரா(Para) போர்மட்டிங் செய்திருந்தால், அந்த போர்மட்டினை நீக்க பாராவினை செலக்ட் செய்து Ctrl+Q அழுத்துங்கள்.
டெக்ஸ்ட் ஒன்றுக்கு சாதாரண நார்மல் ஸ்டைல் இருந்தால் போதும் என்று எண்ணினால், உடனே அதனைத் தெரிவு செய்து Ctrl+Shift+N அழுத்தவும்.

Popular Posts