Total Pageviews

Tuesday, 1 November 2011

இந்தியாவில் மைக்ரோசாப்ட் மாங்கோ

|0 comments

விண்டோஸ் மொபைல் போனுக்கான ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை மைக்ரோசாப்ட் நிறுவனம் அண்மையில் இந்தியாவில் அறிமுகப் படுத்தியது. இதற்கு குறியீட்டுப் பெயராக "மாங்கோ' என மைக்ரோசாப்ட் பெயரிட்டி ருந்தது. இந்த சிஸ்டம் வெளிநாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டு ஏறத்தாழ ஓராண்டுக்குப் பின்னர் இந்தியாவிற்கு வந்துள்ளது.

விண்டோஸ் மொபைல் போன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் "மாங்கோ' தரும் இன்டர்பேஸ் மிக எளிதானதாகவும், பயனாளர் விரைவாகப் பயன்படுத்தக் கூடியதாகவும் அமைந்துள்ளது. இதனை ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தலாம். இதில் வழக்கமான ஐகான்களுக்குப் பதிலாக, ஓடுகள் போல அப்ளிகேஷன்கள் காட்டப் படும். போனில் புதியதாக இணைக்கப் படும் அப்ளிகேஷன் புரோகிராம்கள் மற்றும் இசை பைல்களுக்கும் இதே போல ஓடுகள் பாணியில் ஐகான்களை உருவாக்கலாம்.

இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், மொபைல் போனுக்கான இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9 தரப்பட்டுள்ளது. எனவே, பயனாளர்கள், பெர்சனல் கம்ப்யூட்டரில் பெறும் இணைய தேடல் அனுபவத்தினை இதில் பெறலாம். அத்துடன் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட அப்ளிகேஷன்களை இயக்கலாம். வேர்ட், எக்ஸெல், ஒன் நோட் மற்றும் பவர்பாய்ண்ட் அப்ளிகேஷன்களின் மொபைல் பதிப்பு இதில் தரப்பட்டுள்ளது.

இந்த சிஸ்டம் மூலம் விண்டோஸ் லைவ் ஸ்கை ட்ரைவினை பயனாளர்கள் எளிதாக அணுக முடியும். இதனால், தங்கள் பைல்களை ஸ்கை ட்ரைவில் சேவ் செய்து வைக்க முடியும். மேலும் ஆபீஸ் 365 மற்றும் ஷேர் பாய்ண்ட் தளங்களுடன் இணைக்கவும் இயலும்.

சமூக இணைய வலைத் தளங்களுக்கு நேரடி இணைப்பு தரப்பட்டுள்ளது. டெக்ஸ்ட் மற்றும் இந்த தளங்களுடன் ஒரே நேரத்தில் இயங்க முடியும். ஒன்றுக்கு மேற்பட்ட இமெயில் இன் பாக்ஸ்களை அமைத்து இயக்க முடியும். வாய்ஸ் டு டெக்ஸ்ட் மற்றும் டெக்ஸ்ட் டு வாய்ஸ் இருப்பதால், கரங்களைப் பயன்படுத்தாமல் செயல்பட முடியும்.

பிங் தொடர்பு கொண்டு ஒரு முகவரியைத் தேட முடியும். நாம் செல்ல வேண்டிய திசைகளை அறிய முடியும். இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கென ஏறத்தாழ 33,000 அப்ளிகேஷன்கள் தயாரிக்கப்பட்டு இணைய தளத்தில் கிடைத்து வருகின்றன.

ஸ்மார்ட் போன் சந்தையில் தன் பங்கினை இழந்து வரும் நோக்கியா நிறுவனம், விண்டோஸ் சிஸ்டம் மூலம் அதனைப் பெற்றுவிடத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. ஆனால் அதற்கான ஸ்மார்ட் போனை இன்னும் முடிவு செய்யவில்லை.

இந்நிலையில், எச்.டி.சி. (ரேடார் மொபைல் போன் - விலை ரூ.23,990) மற்றும் ஏசர் (அல்லக்ரோ மொபைல் - விலைரூ.16,000 என்ற அளவில் இருக்கலாம்.)நிறுவனங்கள், விண்டோஸ் மாங்கோ ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் கூடிய மொபைல் போன்களை, இந்த சிஸ்டம் அறிமுகப் படுத்தும்போதே விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளனர் என்பது குறிப் பிடத்தக்கது. சாம்சங் தன் ஆம்னியா டபிள்யூ ஸ்மார்ட் போனை விண்டோஸ் சிஸ்டத்துடன் ஏற்கனவே கொண்டு வந்துள்ளது.

இந்தியாவில் ஆண்டுதோறும் 80 லட்சம் ஸ்மார்ட் போன்கள் விற்பனையாகி வருகின்றன. இதற்கான ஆப்பரேட்டிங் சிஸ்டம் என எடுத்துக் கொண்டால், நோக்கியாவின் சிம்பியன் 68% பங்கினைக் கொண்டுள்ளது. சாம்சங் நிறுவனத்தின் படா 15%, ஆண்ட்ராய்ட் 10% கொண்டுள்ளன. மாங்கோ சிஸ்டத்தினால், இந்நிலை தலை கீழாக மாறும் வாய்ப்புகள் உள்ளன.

------------------- நன்றி -------------------

இந்த பதிவிற்கு ஓட்டு போட்டுவிட்டிர்களா? உங்கள் ஓட்டால் இந்த தகவல் அனைவருக்கும் சென்றடையும் ! ! !

டாஸ்க் மேனேஜர் : பயனுள்ள ஒரு பார்வை

|0 comments
விண்டோஸ் புரோகிராம் தரும் டாஸ்க் மேனேஜர் நமக்கு நல்ல சமயத்தில் உதவிடும் நண்பனாகும். புரோகிராம்களை இயக்குவதற்கும் நிறுத்து வதற்கும் இதில் வழி உண்டு. கம்ப்யூட்டரின் செயல்பாடு குறித்த புள்ளி விபரங்களையும் தகவல்களையும் சரியாக இதிலிருந்து பெறலாம். இதனை எப்படிப் பயன்படுத்துவது என இங்கு பார்க்கலாம்.

டாஸ்க் மேனேஜரை இயக்க, அதனைத் திறக்கக் கீழே கொடுத்துள்ள வழிகளில் ஒன்றைப் பயன்படுத்துங்கள்.

1. Ctrl Shift Esc கீகளை அழுத்துங்கள்.

2. டாஸ்க் பாரில் காலியாக உள்ள இடத்தில், ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில், Task Manager என்பதில் கிளிக் செய்திடுக.

3. Ctrl Alt Delete கீகளை அழுத்தி பெறுக.
டாஸ்க் மேனேஜர் விண்டோவில் ஐந்து டேப்கள் இருப்பதைக் காணலாம். இவற்றின் பயன்பாட்டினை இங்கு காணலாம்.

1. அப்ளிகேஷன்கள் (Applications): இதன் கீழ் உங்கள் கம்ப்யூட்டரில் அப்போது இயங்கிக் கொண்டிருக்கும் புரோகிராம்கள் (பணிகள்) காட்டப்படும். இதில் சிஸ்டம் ட்ரேயில் மினிமைஸ் செய்யப்பட்டிருக்கும், ஆண்ட்டி வைரஸ் போன்ற புரோகிராம்கள் காட்டப்பட மாட்டாது. இந்த டேப்பினைப் பயன்படுத்தி, இயங்கிக் கொண்டிருக்கும் இடைப் பொழுதில், உறைந்து செயலற்று நின்று போன, புரோகிராம்களை மூடலாம். அந்த புரோகிராமினைத் தேர்ந்தெடுத்து, End Task பட்டனை அழுத்தினால் போதும். நம் கட்டளைகளுக்கு எந்தவித செயல்பாடும் காட்டாமல் அப்படியே நின்று போன புரோகிராம்களை மூட இது மிகவும் உதவும். ஆனால், அந்த புரோகிராம் மூலம் சேவ் செய்யப்படாத டேட்டா, பின்னர் நமக்குக் கிடைக்காது. எடுத்துக்காட்டாக, வேர்ட் புரோகிராமில் டெக்ஸ்ட் டாகுமெண்ட் பைல் ஒன்றை உருவாக்கிக் கொண்டிருக்கையில், வேர்ட் இயங்காமல் போனால், அதன் இயக்கத்தினை டாஸ்க் மேனேஜர் மூலமாக முடிவிற்குக் கொண்டு வந்தால், இறுதியாக எப்போது சேவ் செய்தோமோ, அல்லது வேர்ட் செட் செய்தபடி எப்போது சேவ் செய்ததோ, அதுவரை மட்டுமே பைல் கிடைக்கும்.

1 a. இயங்கிக் கொண்டிருக்கும் புரோகிராம் ஒன்றினை முன்னுக்குக் கொண்டு வர, அதனைத் தேர்ந்தெடுத்துவிட்டு, பின்னர், Switch To என்பதில் கிளிக் செய்திடவும்.

1 b. புதிய புரோகிராம் ஒன்றை இயக்க, முதலில் New Task. என்பதில் கிளிக் செய்திடவும். அடுத்து புரோகிராமிற்கான கட்டளை வரியைத் தரவும். அல்லது Browse பட்டனில் கிளிக் செய்து, புரோகிராமினைத் தேர்ந்தெடுத்து இயக்கவும். இது ஸ்டார்ட் மெனுவில் ரன் (Run) கட்டம் மூலம் இயக்குவதற்கு இணையானது.

2. ப்ராசெஸ்ஸஸ் (Processes): இங்கு இயங்கிக் கொண்டிருக்கும் அனைத்து இயக்க பைல்களையும் காணலாம். ஏதேனும் ஒன்றை மூடினால், சேவ் செய்யப்படாத டேட்டா தொலையலாம். உறைந்து போன புரோகிராமின் செயல்பாட்டினையும் இதன் வழியாகவும் நிறுத்தலாம். ஆனால், நாம் எதனை நிறுத்த முயற்சிக்கிறோம் என்பதனைச் சரியாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதற்கான கோப்பு எது என்று உணர்ந்திருக்க வேண்டும். சில வேளைகளில், இதனைச் சரியாக அறியாதோர், சிஸ்டம் பைல்களில் ஏதேனும் ஒன்றை நிறுத்தி விடுவார்கள். இதனால் சிஸ்டம் இயங்கு வதில் பிரச்னை ஏற்படலாம். எனவே, இதனைச் சரியாக அணுகுவது எப்படி எனப் பார்க்கலாம்.

2 a. அப்போது இயங்கிக் கொண்டிருக்கும் புரோகிராமின் இயக்கத்தினை நிறுத்த, அப்ளிகேஷன்ஸ் டேப் கிளிக் செய்து, அதில் அந்த புரோகிராமின் மீது ரைட் கிளிக் செய்திடவும். பின்னர், கிடைக்கும் மெனுவில், Go To Process என்பதில் கிளிக் செய்திடவும். உடனே Process டேப் திறக்கப்பட்டு, அந்த புரோகிராமிற்கான இயக்க பைல் ஹைலைட் செய்து காட்டப்படும். இதன் இயக்கத்தினை நிறுத்த, End Process என்பதில் கிளிக் செய்திடவும். அப்ளிகேஷன்ஸ் டேப் அழுத்தி, ஒரு புரோகிராமின் இயக்கத்தினை நிறுத்த முடியாத போது, இந்த வழியைப் பின்பற்றலாம். Process ஒன்றில் ரைட் கிளிக் செய்து, பின்னர் End Process Tree என்பதில் கிளிக் செய்தால், அந்த இயக்கம் சார்ந்த அனைத்து பைல் இயக்கங்களும் முடிவிற்குக் கொண்டு வரப்படும்.

3. சர்வீசஸ் (Services): சர்வீசஸ் என்பவை, பின்னணியில் இயங்கும் சப்போர்ட் புரோகிராம்களாகும். இதில் பெரும் பாலானவை, கம்ப்யூட்டர் இயங்கத் தொடங்கும்போதே, இயங்கி பின்னணியில் செயல்படும்.

3 a.ஒரு சர்வீஸ் புரோகிராமினை இயக்க, நிறுத்தப்பட்ட சர்வீஸ் மீது ரைட் கிளிக் செய்து, பின்னர், Start Service என்பதில் கிளிக் செய்திடவும்.

3 b. ஒரு சர்வீஸை நிறுத்திட, இயங்கிக் கொண்டிருக்கும் சர்வீஸில் ரைட் கிளிக் செய்து, Stop Service என்பதில் கிளிக் செய்திடவும்.

3 c. சர்வீஸ் ஒன்றுடன் சார்ந்த இயக்கங்களைக் காண, அதன் மீது ரைட் கிளிக் செய்து, Go To Process என்பதில் கிளிக் செய்திடவும். இதன் மூலம், ஒரு சர்வீஸ், கம்ப்யூட்டரின் பிற திறன் செயல்களை இயங்கவிடாமல் அழுத்திக் கொண்டுள்ளதா எனத் தெரியவரும்.

4. பெர்பார்மன்ஸ் (Performance): இந்த டேப் சிஸ்டம் இயக்கத்தின் பல்வேறு பிரிவுகளைக் காட்டும்.

4 a. மேலாக, சிபியு பயன்பாட்டினைக் காட்டும் மீட்டர் ஒன்று இயங்கியவாறு இருக்கும். அருகிலேயே CPU usage history line கிராப் ஒன்று காட்டப்படும். ஒன்றுக்கு மேற்பட்ட வரைபட வரிகள் இருப்பின், அது சிபியுவின் பல செயல்பாடுகளைக் காட்டும்.

4 b. சிபியு பயன்பாடு மீட்டர் மற்றும் சிபியு பயன்பாடு லைன் கிராப் கீழாக, அதே போன்ற மெமரி பயன்பாட்டிற்கான அளவீடுகள் காட்டப்படும்.

4 c. இன்னும் கீழாகப் பார்த்தால், கம்ப்யூட்டர் இயக்கிக் கொண்டிருக்கும் பைல்கள் மற்றும் மெமரி பயன்பாடு ஆகியவை காட்டப்படும்.

5. நெட்வொர்க்கிங் (Networking): நெட்வொர்க் இயக்கத்திற்கான லைன் கிராப் இதில் காட்டப்படும். வரை வரிகள் கீழாக கூடுதல் புள்ளி விபரங்கள் காட்டப்படும்.

6. யூசர்ஸ் (Users): இந்த டேப்பில், கம்ப்யூட்டர் சிஸ்டத்தினைப் பயன்படுத்துவோர் அனைவரின் பட்டியல் காட்டப்படும்.

6 a . இதில் ஒரு யூசரை ஹைலைட் செய்து, Log off என்பதில் கிளிக் செய்தால், அந்த யூசரின் பயன்பாட்டு காலம் முடிக்கப்படும்.

6 b. ஏதேனும் ஒரு யூசரை கிளிக் செய்து, Disconnect என்பதில் கிளிக் செய்தால், பயனாளரின் பணிக்காலம் முடிக்கப் படும். ஆனால் அது மெமரியில் காத்து வைக்கப்படும். இதனால், பின்னர், அந்த பயனாளர், மீண்டும் லாக் ஆன் செய்து, தான் விட்ட பணியினைத் தொடரலாம்.

7. டாஸ்க் மேனேஜர் டிப்ஸ்: ப்ராசசஸ், சிபியு பயன்பாடு, மெமரி அளவு ஆகிய அனைத்தும் டாஸ்க் மேனேஜரின் கீழாகக் காட்டப்படும் தகவல்களாகும். இந்த மிக அடிப்படையான தகவல்கள், உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டர் எவ்வளவு கடினமாகப் பணியாற்றிக் கொண்டிருக் கிறது அல்லது பணியே ஆற்றாமல் இருக்கிறது என்பதனை அறிந்து கொள்ளலாம். இதில் செயல்திறன் சார்ந்த எண்கள் அதிகமாக இருந்தால், பிரச்னைகளை அறியும் செயல்பாட்டினை மேற்கொள்ளலாம்.

7 a. கட்டளைக்குச் செயல்படாத அப்ளிகேஷன்களைக் கண்டறிய அப்ளிகேஷன்ஸ் டேப்பினைக் கிளிக் செய்திட வேண்டும்.

7 b. கம்ப்யூட்டரின் திறனை அதிகம் எடுத்துக் கொள்கிறதா என்பதனை அறிய ப்ராசசஸ் டேப்பினை செக் செய்திடலாம். ப்ராசஸ் ஒன்றினை முடிவிற்குக் கொண்டு வரும் முன், அது குறித்துத் தீவிரமாக அறியவும். இந்த வகையில் மெனு பாரில் உள்ள வியூ மெனு மூலமும் தகவல்களை அறியலாம். மேலதிகத் தகவல்களுக்கு அல்லது டாஸ்க் மானேஜர் மூலம் பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கவில்லை என்றால், டாஸ்க் மேனேஜரைத் திறந்து மெனு பாரில் Help என்பதில் கிளிக் செய்து, பின்னர் கிடைக்கும் விண்டோவில் Task Manager Help Topics என்பதில் கிளிக் செய்து, கிடைக்கும் தகவல்களைப் பிரித்தறிந்து படிக்கவும்.

------------------- நன்றி -------------------

இந்த பதிவிற்கு ஓட்டு போட்டுவிட்டிர்களா? உங்கள் ஓட்டால் இந்த தகவல் அனைவருக்கும் சென்றடையும் ! ! !

Monday, 31 October 2011

இந்தியாவில் மைக்ரோசாப்ட் மாங்கோ

|0 comments
 
விண்டோஸ் மொபைல் போனுக்கான ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை மைக்ரோசாப்ட் நிறுவனம் அண்மையில் இந்தியாவில் அறிமுகப் படுத்தியது. இதற்கு குறியீட்டுப் பெயராக "மாங்கோ' என மைக்ரோசாப்ட் பெயரிட்டி ருந்தது. இந்த சிஸ்டம் வெளிநாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டு ஏறத்தாழ ஓராண்டுக்குப் பின்னர் இந்தியாவிற்கு வந்துள்ளது.

விண்டோஸ் மொபைல் போன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் "மாங்கோ' தரும் இன்டர்பேஸ் மிக எளிதானதாகவும், பயனாளர் விரைவாகப் பயன்படுத்தக் கூடியதாகவும் அமைந்துள்ளது. இதனை ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தலாம். இதில் வழக்கமான ஐகான்களுக்குப் பதிலாக, ஓடுகள் போல அப்ளிகேஷன்கள் காட்டப் படும். போனில் புதியதாக இணைக்கப் படும் அப்ளிகேஷன் புரோகிராம்கள் மற்றும் இசை பைல்களுக்கும் இதே போல ஓடுகள் பாணியில் ஐகான்களை உருவாக்கலாம்.

இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், மொபைல் போனுக்கான இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9 தரப்பட்டுள்ளது. எனவே, பயனாளர்கள், பெர்சனல் கம்ப்யூட்டரில் பெறும் இணைய தேடல் அனுபவத்தினை இதில் பெறலாம். அத்துடன் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட அப்ளிகேஷன்களை இயக்கலாம். வேர்ட், எக்ஸெல், ஒன் நோட் மற்றும் பவர்பாய்ண்ட் அப்ளிகேஷன்களின் மொபைல் பதிப்பு இதில் தரப்பட்டுள்ளது.

இந்த சிஸ்டம் மூலம் விண்டோஸ் லைவ் ஸ்கை ட்ரைவினை பயனாளர்கள் எளிதாக அணுக முடியும். இதனால், தங்கள் பைல்களை ஸ்கை ட்ரைவில் சேவ் செய்து வைக்க முடியும். மேலும் ஆபீஸ் 365 மற்றும் ஷேர் பாய்ண்ட் தளங்களுடன் இணைக்கவும் இயலும்.

சமூக இணைய வலைத் தளங்களுக்கு நேரடி இணைப்பு தரப்பட்டுள்ளது. டெக்ஸ்ட் மற்றும் இந்த தளங்களுடன் ஒரே நேரத்தில் இயங்க முடியும். ஒன்றுக்கு மேற்பட்ட இமெயில் இன் பாக்ஸ்களை அமைத்து இயக்க முடியும். வாய்ஸ் டு டெக்ஸ்ட் மற்றும் டெக்ஸ்ட் டு வாய்ஸ் இருப்பதால், கரங்களைப் பயன்படுத்தாமல் செயல்பட முடியும்.

பிங் தொடர்பு கொண்டு ஒரு முகவரியைத் தேட முடியும். நாம் செல்ல வேண்டிய திசைகளை அறிய முடியும். இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கென ஏறத்தாழ 33,000 அப்ளிகேஷன்கள் தயாரிக்கப்பட்டு இணைய தளத்தில் கிடைத்து வருகின்றன.

ஸ்மார்ட் போன் சந்தையில் தன் பங்கினை இழந்து வரும் நோக்கியா நிறுவனம், விண்டோஸ் சிஸ்டம் மூலம் அதனைப் பெற்றுவிடத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. ஆனால் அதற்கான ஸ்மார்ட் போனை இன்னும் முடிவு செய்யவில்லை.

இந்நிலையில், எச்.டி.சி. (ரேடார் மொபைல் போன் - விலை ரூ.23,990) மற்றும் ஏசர் (அல்லக்ரோ மொபைல் - விலைரூ.16,000 என்ற அளவில் இருக்கலாம்.)நிறுவனங்கள், விண்டோஸ் மாங்கோ ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் கூடிய மொபைல் போன்களை, இந்த சிஸ்டம் அறிமுகப் படுத்தும்போதே விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளனர் என்பது குறிப் பிடத்தக்கது. சாம்சங் தன் ஆம்னியா டபிள்யூ ஸ்மார்ட் போனை விண்டோஸ் சிஸ்டத்துடன் ஏற்கனவே கொண்டு வந்துள்ளது.

இந்தியாவில் ஆண்டுதோறும் 80 லட்சம் ஸ்மார்ட் போன்கள் விற்பனையாகி வருகின்றன. இதற்கான ஆப்பரேட்டிங் சிஸ்டம் என எடுத்துக் கொண்டால், நோக்கியாவின் சிம்பியன் 68% பங்கினைக் கொண்டுள்ளது. சாம்சங் நிறுவனத்தின் படா 15%, ஆண்ட்ராய்ட் 10% கொண்டுள்ளன. மாங்கோ சிஸ்டத்தினால், இந்நிலை தலை கீழாக மாறும் வாய்ப்புகள் உள்ளன.

------------------- நன்றி -------------------

இந்த பதிவிற்கு ஓட்டு போட்டுவிட்டிர்களா? உங்கள் ஓட்டால் இந்த தகவல் அனைவருக்கும் சென்றடையும் ! ! !

Saturday, 29 October 2011

Three Sites For The Google+ Addict

|0 comments
 
If you're a big fan of Google+, take a look at these sites that'll help you discover new users and create a short profile URL for your Google+ profile.

See Top 100 Google+ Users

google-plus-statistics

Google+ Statistics is a neat site that lists the top 100 people on Google+ with their follower count. You can use it to find profiles of the most interesting people on Google+. In addition, you can sign in with using your Google ID or type in your unique profile ID to have yourself included in the tracking. Visit Google+ Statistics

Get a short URL for your Google+ Profile

google-plus-short-username

Google+ profile URLs are pretty long and it's hard to remember them. On Plus.ly/GPlus.to, you can key in your profile ID and create a short URL of the form plus.ly/username or gplus.to/username that redirects to your Google Plus Profile page. Visit Plus.ly or GPlus.to

Find new, relevant people to add to your circles

google-plus-recommended-users

Think of RecommendedUsers.com like the WeFollow directory, but for Google+ instead of Twitter. You go to recommendedusers.com and click on one of your interests. The site will show you a list of Google+ users that you can add to your circle. You can also narrow down the list of users by using the left panel. It's an easy way to find interesting and popular people to follow on Google+. Visit RecommededUsers.com

Post from: Killer Tech Tips

Three Sites For The Google+ Addict

No related posts.

Popular Posts