Total Pageviews

Thursday 12 April 2012

ட்விட்டரில் பரவும் வைரஸ் - எச்சரிக்கை

 
 
இணையதளங்களை அதிலும் குறிப்பாக சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும் போது அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். "இணைய பாதுகாப்பு" பற்றி ஏற்கனவே தொடர் பதிவுகளில் குறிப்பிட்டுள்ளேன். தற்போது ட்விட்டரில் பரவிவரும் வைரஸ் அல்லது எரிதங்கள் (Spam) பற்றி பார்ப்போம்.

சமூக வலைத்தளங்களில் அதிக எரிதங்கள் உலாவுவது ட்விட்டர் தளத்தில் தான் என்பது என் கணிப்பு. எரிதங்கள் பலவிதமான செய்திகளாக சுட்டியுடன் (Links) வரும். உதாரணத்திற்கு சில,


  • Hey some person is making terrible rumors about you... tinyurl.com/83zexxf
  • This video with you in it had me dying lol t.co/xxxxx
  • when did you make this video? its hilarious, cant stop laughing lol bit.ly/xxxx
  • I saw a real bad blog about you, you seen this? tinyurl.com/xxxx
  • Someone is posting nasty updates on their twitter about you, heres the posts they've been making tinyurl.com/xxxx

இது போன்ற பல செய்திகள் வரும். அந்த சுட்டிகளை நீங்கள் க்ளிக் செய்யும் போது உங்கள் கணினியில் நல்ல ஆன்டி-வைரஸ் மென்பொருள் இருந்தால் அந்த தளத்தை திறக்காது. வைரஸ் எச்சரிக்கையை காட்டும்.

நீங்கள் ஃபயர்பாக்ஸ் உலாவியை பயன்படுத்தினால் பின்வருமாறு காட்டும்.


அதாவது நீங்கள் க்ளிக் செய்த அந்த தளம் Phishing எனப்படும் இணைய மோசடி தளம் என்று எச்சரிக்கும். Phishing பற்றி அறிந்துக் கொள்ள இணைய பாதுகாப்பு #4 - Phishing

இந்த பக்கம் வந்தால் அதில் Get me out of here! என்பதை க்ளிக் செய்யுங்கள் அல்லது அந்த பக்கத்தை விட்டு வேறு தளத்திற்கு சென்றுவிடுங்கள்.

ஒருவேளை உங்களிடம் ஆன்டி-வைரஸ் இல்லையென்றாலோ அல்லது அது அப்டேட் செய்யப்படாமல் இருந்தாலோ பின்வருவது போன்ற தளத்திற்கு செல்லும்.


ட்விட்டர் (போன்ற) தளத்திற்கு சென்று அதில் "Your seession has timed out. Please re-login" என்று சொல்லும். இதனை பார்த்ததும் நீங்கள் என்ன செய்வீர்கள்? உடனே உங்கள் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லைக் கொடுத்து உள்நுழைவீர்கள். அப்படி கொடுத்தால் அவ்வளவுதான்! காரணம் படத்தை நன்றாக கவனியுங்கள். பார்ப்பதற்கு ட்விட்டர் தளம் போன்றே இருந்தாலும் நீங்கள் கவனிக்க வேண்டியது அதன் முகவரியை தான். படத்தில் உள்ள முகவரி itvvitter.com. இது ஒரு Phishing தளமாகும்.

அப்படி பயனர்பெயர், கடவுச்சொல்லைக் கொடுத்தப்பின் உங்கள் கணக்கிலிருந்து உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் ட்வீட் ஆகவோ அல்லது நேரடி செய்தியாகவோ (Direct Message) இதே செய்தியை அனுப்பும். உங்கள் நண்பர்களும் நீங்கள் தான் அனுப்பியதாக நம்பி அதனை க்ளிக் செய்வார்கள். அப்படி க்ளிக் செய்தால்..... (மேலே படிக்கவும்)

இப்படியே இது போன்ற எரிதங்கள் ட்விட்டர் முழுவதும் பரவும். இது போன்ற எரிதங்கள் தீம்பொருள் (Malware), நச்சுக்கிருமிகளை (Virus) உங்கள் கணினியில் நிறுவும் அபாயம் அதிகம். அதனால் கவனத்துடன் செயல்பட்டு பாதுகாப்பாக இருங்கள்.

மேலும் ட்விட்டரில் பயன்படுத்துவதற்காக பல்வேறு அப்ளிகேசன்கள் இணையத்தில் உள்ளன. அவற்றில் பல இது போன்ற எரிதங்களை அனுப்பும் வாய்ப்புகளும் அதிகம். அதனால் Google, Facebook போன்ற அதிகாரப்பூர்வ அப்ளிகேசன்களை மட்டும் பயன்படுத்தவும். தேவையில்லாதவற்றை பயன்படுத்த வேண்டாம்.

ட்விட்டரில் அப்ளிகேசன்களை நீக்குவதற்கு Twitter => Settings =>Apps பக்கத்திற்கு செல்லுங்கள்.

நீங்கள் பயன்படுத்தும் அப்ளிகேசன்களுக்கு பக்கத்தில் உள்ள Revoke access என்பதை க்ளிக் செய்து தேவையற்றவைகளை நீக்கிவிடுங்கள்.
இது போன்ற அப்ளிகேசன்கள் நமக்கு அதிக வசதிகளைத் தந்தாலும் அதைவிட நம் பாதுகாப்பு முக்கியமானது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

0 comments:

Post a Comment

Popular Posts