Total Pageviews

Wednesday 22 February 2012

பேஸ்புக்கின் சவால் – மைக்ரோசொப்டின் புதிய சமூக வலைத்தளம் வருகிறது

 


மென்பொருள் துறையில் முதன்மையான மைக்ரோசாப்ட் தற்போது புதிய சமூக வலைத்தளம் ஒன்றை கட்டமைத்து வருகின்றனர். மைக்ரோசாப்டின் புதிய சமூக வலைத்தளத்திற்கு Socl என்று பெயரிடப்பட்டுள்ளது.
இதன் (User Interface) மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இடது புறத்தில் Navigation வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. செய்திகள் Feed என வகைப்படுத்தப்பட்டுள்ளன. நமது செய்திகளைப் பகிர்ந்து கொள்ளும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. (Update Status).
Social Search: இதில் சமூக வலைத்தளத்திலிருந்தே தேடிக் கொள்ளும் வசதியும் தரப்பட்டுள்ளது. நீங்கள் தேடும் போது வழக்கமான தேடல், நண்பர்களின் செய்திகள், ஒத்த சேவைகள் போன்றவற்றிலும் தேடி முடிவுகள் தரப்படும்.
எதாவது தேடிப் பெறப்பட்ட விடயத்தை அப்படியே உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ள முடியும். நண்பர்களின் தேடல்களையும் உங்கள் பக்கத்தில் பார்த்துக் கொள்ள முடியும். இது கூகிள்+1 பட்டன்களின் மூலம் பெறப்படும் Recommendation களை கூகிள் பிளஸ் தளத்தில் தேடுதலுக்குப் பயன்படுத்துவதைப் போல ஆகும்.
தேடுதலுக்கு பிங் சேவை(Bing) பயன்படுத்தப்படும். நண்பர்கள் உங்களின் தேடல்களுக்கு கருத்துரை அளிக்கலாம், Like செய்யலாம், Tag செய்யலாம்.
Tagging: நீங்கள் ஒருவரின் செய்தியை Tag செய்யும் போது சம்பந்தப்பட்ட விடயம் உங்களின் Interest Tags பிரிவில் இடதுபுறத்தில் தோன்றும். இதனால் விரைவில் குறிப்பிட்ட விடயம் சார்ந்தவற்றைப் பார்த்துக் கொள்ள முடியும். உதாரணத்திற்கு Photography, Cinema, Arts.
வலதுபுறத்தில் Video Party வசதி தரப்பட்டுள்ளது. இதில் நண்பர்களிடம் சாதாரண மற்றும் வீடியோ சாட்டிங் செய்து கொள்ள முடியும். மேலும் Youtube வீடியோக்களையும் பார்த்துக் கொள்ளலாம். இது முற்றிலும் HTML5 தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளதால் அடோப் பிளாஷ் மென்பொருளின் உதவி தேவைப்படாது.
இதில் குறைபாடுகளாக மற்ற சமுக வலைத்தளங்களில் இருக்கும் சில வசதிகள் இல்லை. அதாவது செய்திகளை குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் பகிர்தல், கூகிள் பிளசில் இருக்கும் வட்டங்கள் போல Groups போன்றவை இல்லை. இதன் பரிசோதனை செயல்பாடுகள் முடிந்து மைக்ரோசாப்ட் விரைவில் வெளியிட ஆயத்தமாகி வருகிறது.

இணைய முகவரி-: http://www.so.cl/
 
 
"காதலிக்கலாமா என்று சிந்திப்பவர்கள்,
சன்யாசம் வாங்கிக் கொள்ளலாமா என்று யோசிப்பவர்கள்,
தற்கொலை செய்து கொள்ளலாமா என்று ஆராய்பவர்கள் எல்லாரும் ஒரே ரகம். நினைப்போடு சரி"

0 comments:

Post a Comment

Popular Posts