Total Pageviews

Wednesday 22 February 2012

இணைய வசதியின்றிய செல்போன்களிலும் பொக்கட் விக்கிபீடியா


அறிவுத்தேடலின் பிரமாண்டமான பொக்கிஸமாகவும், திறந்த வெளியாகவும் காணப்படும் விக்கிபீடியா தளமானது உலகில் அறிவுத்தேடலுடன் பரந்து வாழும் மக்கள் மத்தியில் மிக பிரபல்யம் வாய்ந்ததாக காணப்படுகின்றது. இதனால் அலெக்ஸா வரிசைப்படுத்தலிலும் மிகச்சிறந்த இடத்தில் காணப்படுகின்றது.

இத்தளத்தில் ஆங்கிலத்தில் மட்டும் 3.8 மில்லியனுக்கும் அதிகமான கட்டுரைகள் காணப்படுவதும் ஒரு சிறப்பம்சமாகும். எனினும் இப்பயனுள்ள தளத்தை இணைய இணைப்பு காணப்படுகின்ற சந்தர்ப்பங்களிலேயே பயன்படுத்தக்கூடியவாறு காணப்பட்டமை ஒரு எதிர் விளைவாகவே காணப்பட்டது. இதனால் இணைய வசதியற்ற பல லட்சக்கணக்கான மக்கள் பயனடைய முடியாத சூழ்நிலை காணப்பட்டது.

ஆனால் தற்போது அதற்கும் தீர்வு கிடைத்துவிட்து. அதாவது இணைய இணைப்பு அற்ற நிலையில் விண்டோஸ் இயங்குதளத்தை கொண்ட உங்கள் செல்போன்களிலும் இதற்கான மென்பொருளை நிறுவி பயன்படுத்த முடியும்.

'பொக்கட் விக்கிபீடியா' என அழைக்கப்படும் இந்த மென்பொருளில் 24,000 படங்கள் காணப்படுவதுடன் 14 மில்லியன் வரையிலான கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. 175MB அளவைக்கொண்ட இந்த மென்பொருளானது விண்டோஸ், லினக்ஸ் இயங்குதளங்களிலும் செயற்படக்கூடியது.

0 comments:

Post a Comment

Popular Posts