Total Pageviews

Wednesday 22 February 2012

இணைய இணைப்பு இல்லாமலே ஜிமெயிலை பயன்படுத்திட

ஒவ்வொரு நாளும் புது புது வசதிகளை ஜிமெயிலில் அறிமுக படுத்துவதால் நம்மில் பெரும்பாலானோர் இந்த ஜிமெயிலை பயன்படுத்துகிறோம். நமக்கு ஏதேனும் முக்கியமான மின்னஞ்சல் வந்துள்ளதா என்றும் அல்லது யாருக்கேனும் முக்கிமாக ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும் என்றும் விரும்பும் நேரம் பார்த்து நம்முடைய கணினியில் இணைய இணைப்பு துண்டிக்க பட்டிருக்கும் அல்லது நாம் வேறு எங்காவது பயனித்து கொண்டிருப்போம் நம்முடைய மடிக்கணினியிலும் இணைய இணைப்பு இருக்காது ஆயினும் உடனடியாக மின்னஞ்சலை கையாளவேண்டும் என எண்ணிடுவோம் அது போன்ற சமயங்களில் நமக்கு உதவி செய்வதற்காக இணைய இணைப்பில்லாத போதும் மின்னஞ்சலை கையாளுவதற்கான கூகுள் ஒரு அருமையான வசதியை வைத்துள்ளது.
இதற்காக நம்முடைய கணினியில் கூகுள் குரோம் உலாவியை பயன்படுத்திடுக. அடுத்துhttps://chrome.google.com/webstore/detail/ejidjjhkpiempkbhmpbfngldlkglhimk என்ற தளத்திற்கு சென்று Offline Google Mail என்ற நீட்சியை அந்த உலாவியில் நிறுவுகை செய்திடுக.
1.
உடன் உலாவியில் ஒரு புதிய தாவி(tab) உருவாகும் அல்லது முயற்சிசெய்து புதிய தாவி (New tab) ஒன்றை உருவாக்கிடுக.
பின்னர் தற்பொழுது நாம் இணைத்த Offline Google Mail என்ற குறும்படத்தை தெரிவு செய்து சொடுக்குக.
உடன்தோன்றிடும் திரையில் Allow Offline Mail என்ற வாய்ப்பை தேர்வு செய்திடுக.
2.
இதே திரையின் கீழ் பகுதியில் நம்முடைய மின்னஞ்சலின் பெயரை சுட்டிகாட்டிடும் அதனை தேர்வு செய்து கொண்டு Continue என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.
உடன் நம்முடைய மின்னஞ்சல் பெட்டியானது திரையில் தோன்றி நமக்கு இதுவரையிலும் வந்த அனைத்து மின்னஞ்சல்களையும் பட்டியலாக காட்டும்.
3
இதில் வழக்கமாக மின்னஞ்சல்களை கையாளுவதுபோன்று அனைத்து பணிகளையும் செயல்படுத்தலாம் மேலும் இதிலுள்ள Menu என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கினால் பின்வரும் படத்திலுள்ளவாறு இணைய இணைப்பில்லாதபோது கூட மேலும் ஏராளமான பணிகளை ஆற்றுவதற்கான வசதியை வழங்குகின்றது.
4
இவ்வாறு எண்ணற்ற வசதிகளையும் இணைய இணைப்பு இல்லாமேலேயே நம்முடைய ஜிமெயில் கணக்கை நம்முடைய கணினியை பயன்படுத்தி செயல்படுத்திடமுடியும்.
 
 
 
நீங்க‌ள் விரும்புவ‌து ஒருவேளை உங்க‌ளுக்கு கிடைக்காம‌ல் போக‌லாம். ஆனால் உங்க‌ளுக்கு த‌குதியான‌து உங்க‌ளுக்கு க‌ண்டிப்பாக‌ கிடைத்தே தீரும்.
 

0 comments:

Post a Comment

Popular Posts