கடந்த செப்டம்பர் இறுதி வாரத்தில் நோக்கியா தன் மூன்று ஸ்மார்ட் போன்களை இந்தியச் சந்தையில் அறிமுகப் படுத்தியது. இவை நோக்கியா 600, 700 மற்றும் 701. இந்த மூன்று மொபைல்களிலும் 1 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ப்ராசசர், அண்மை கள தொடர்பு வசதி (NFC – Near Field Communication), புளுடூத் 3.0 மற்றும் டபிள்யூ லேன் சப்போர்ட் ஆகிய நவீன தொழில் நுட்ப வசதிகளைக் கொண்டிருக்கின்றன.
இவற்றில் நோக்கியா 700, உலகிலேயே மிகச் சிறிய ஸ்மார்ட் போன் எனப் பெயர் பெற்றது. இதனை வடிவமைக்கையில், ஸீட்டா என்ற பெயர் கொண்டிருந்தது. இதன் திரை கொரில்லா கிளாஸ் கொண்டு 3.2 அங்குல அகலத்தில் அமைக்கப்பட்டது. 320 x 640 என்ற அளவில் பிக்ஸெல் திறன் கொண்டது. இந்த மொபைல் மறு சுழற்சி செய்யப்பட்ட உலோகங்கள் மற்றும் பயோ பிளாஸ்டிக்ஸ் கொண்டு அமைக்கப்பட்டது. இதன் கேமரா 5 மெகா பிக்ஸெல் திறன் கொண்டது. நொடிக்கு 30 பிரேம் கொண்ட எச்.டி. தன்மை கொண்ட வீடியோவினை எடுக்கும் திறன் கொண்டது. இதில் உள்ள புளுடூத் 3.0 பதிப்பைச் சேர்ந்தது. இதனால், கூடுதல் வேகத்தில், நொடிக்கு 24 எம்.பி. டேட்டா பரிமாறப்படும். 1080 mAh திறன் கொண்ட பேட்டரி, 2ஜி அழைப்பு எனில் 7 மணி நேரம் பேசுவதற்கும், 3ஜி அழைப்பில் 4.5 மணி நேரம் பேசுவதற்கும் சக்தி தருகிறது. இவற்று டன் ஒருங்கிணைந்த ஜி.பி.எஸ்., காம்பஸ், அக்ஸிலரோமீட்டர், வை-பி நெட்வொர்க் இணைப்பிற்கான சப்போர்ட் ஆகியவற்றைக் கொண்டது. ஐந்து வண்ணங்களில் இது கிடைக்கின்றன.
நோக்கியா 701, முதலில் ஹெலன் என அழைக்கப்பட்டது. மிகவும் பிரகாசமான அழகுடன் வடிவமைக்கப் பட்டுள்ளது. இதிலும் கொரில்லா கிளாஸ் திரை 3.5 அங்குல அகலத்தில் உள்ளது. 360x640 பிக்ஸெல் ரெசல்யூசன் கொண்டது. இதன் கேமரா 8 மெகா பிக்ஸெல் திறனுடன், இரண்டு எல்.இ.டி.பிளாஷ் கொண்டதாக அமைக்கப் பட்டுள்ளது. வீடியோ அழைப்புகளில் பயன்படுத்த முன்பக்கமாக ஒரு கேமரா தரப்பட்டுள்ளது. ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ, புளுடூத் 3.0., 3ஜி மற்றும் வை-பி நெட்வொர்க் இணைப்பு ஆகிய வசதிகளும் கிடைக்கின்றன. இதன் 1300 mAh திறன் கொண்ட பேட்டரி, 7 மணி நேரம் (2ஜி) மற்றும் 6.5 மணி நேரம் (3ஜி) பேசும் திறனைத் தருகிறது. மூன்று வண்ணங்களில் நோக்கியா இதனைத் தருகிறது.
மூன்றாவதான நோக்கியா 600 அதிக சத்தமுள்ள ஸ்மார்ட் போனாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உருவாக்குகையில் சிண்டி என இதனை நோக்கியா பெயரிட்டிருந்தது. திரை 3.2 டி.எப்.டி. எல்சிடி திரையாகும். 360x640 பிக்ஸெல் ரெசல்யூசன் கொண்டது. இதன் கேமரா 5 மெகா பிக்ஸெல் திறன் கொண்டது. நொடிக்கு 30 பிரேம் கொண்ட எச்.டி. தன்மை கொண்ட வீடியோ வினை எடுக்கும் திறன் கொண்டது. குறைந்த மின்சக்தி செலவில், கூடுதல் வேகத்தில் டேட்டா பரிமாறும் திறன் கொண்ட யு.எஸ்.பி. 3.0 இதில் கொடுக்கப்பட்டுள்ளது.
வை-பி நெட்வொர்க், எப்.எம். ட்ரான்ஸ் மீட்டர், 3ஜி நெட்வொர்க் இணைப்பு கிடைக்கிறது. இதன் 1200 mAh திறன் கொண்ட பேட்டரி, 15மணி நேரம் (2ஜி) மற்றும் 6.5 மணி நேரம் (3ஜி) பேசும் திறனைத் தருகிறது.
மேலே குறிப்பிட்ட அனைத்திலும் அண்மைக் கள தொலை தொடர்பு (NFC – Near Field Communication) கொண்டுள்ளதால், இந்தியா வில் தற்போது தொடங்கப்பட்டிருக்கும், மொபைல் வழி நிதி பரிமாற்றத்தில் இந்த போன்கள் மிகவும் உதவும். நோக்கியா 600 ரூ.12,000, நோக்கியா 700 ரூ. 18,000 மற்றும் நோக்கியா 701 ரூ.12,000 என அதிக பட்ச விலையைக் கொண்டுள்ளன.
------------------- நன்றி -------------------
இந்த பதிவிற்கு ஓட்டு போட்டுவிட்டிர்களா? உங்கள் ஓட்டால் இந்த தகவல் அனைவருக்கும் சென்றடையும் ! ! !
0 comments:
Post a Comment