Total Pageviews

Monday, 5 March 2012

விண்டோ 8 மெட்ரோ பயன்பாடு

|0 comments
 
விண்டோ8 என்ற இயக்க முறைமையில் மேற்கண்ட விண்டோ 8 மெட்ரோ என்ற பயன்பாட்டினை செயல்படுத்துவதற்காக Visual Studio 11 Express என்பது அடிப்படைத் தேவையாகும் இது Windows 8 Dev Preview x64 என்ற பதிப்பில் முன்கூட்டியே கட்டமைக்கபட்டுதான் இருக்கின்றது இதனை மைக்ரோசாப்ட நிறுவனத்தின் வலைதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து நிறுவிகொள்க
முதலில் இந்த பயன்பாட்டினை விண்டோ8 இயக்கமுறைமையில் செயல்படுத்துக பின்னர் தோன்றிடும் திரையில் JavaScript, VB, C# ,C++ ஆகிய மொழிகளில் ஒன்றையும் blank "Application", rich "Grid", master-child "Split" ஆகிய வார்ப்புருக்களில் நமக்கு தேவையான ஒன்றையும் தெரிவுசெய்து கொள்க இவை புதிய திட்டத்தை(New Project) உருவாக்க பயன்படுகின்றன.இதன்பின்னர் மேலேகூறிய மொழிகளை பின்புலமாக கொண்ட விண்டோ 8 மெட்ரோ பயன்பாட்டிற்கேயுரிய Metro-XAML என்ற மொழியில் நம்முடைய குறிமுறையை எழுத ஆரம்பிக்கவும் இதிலுள்ள Grid ,Split ஆகிய வார்ப்புருக்களில் ஏராளமான வாய்ப்புகள் உள்கட்டமைக்கபட்டுள்ளன அவற்றுள் நமக்குத்தேவையானவாறு தெரிவுசெய்து அமைத்துகொள்க.இதற்காக பின்வருவனவற்றை தேவைக்கேற்ப பயன்படுத்திகொள்க






Application Icons என்பது , 150×150 என்ற சிறிய அளவுகுறும்படம் முதல் Live Tile என்ற பெயருடைய 310×150 என்ற பெரியஅளவுகுறும்படம் வரை கொண்டதாகும் இதன்மூலம் பயனாளர் ஒருவர் இந்த பயன்பாட்டினை இயக்காமலேயே தாம் கூறவிரும்பும் செய்திகளை ட்விட்டர் ஃபேஸ்புக் ஆகிய சமூகதளங்களில் உள்ள தம்முடைய நண்பர்கள் நேரடியாக பெறுமாறு செய்யமுடியும் மேலும் ஒரு பயனாளர் இந்த குறும்பட வகைகளில் ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு உடனடியாக மாறிகொள்ளும் வசதியுள்ளது
Splash Screen முதன்முதலில் தோன்றிடும் போது திரையின் உருவபடங்கள் விட்டுவிட்டு மின்னுவதற்கு இந்த வார்ப்புரு வசதி பயன்படுகின்றது
Data: இந்த வார்ப்புரு உள்ளூர் மற்றும் தூரத்திலிருக்கும் தரவுகளை கையாளத்தக்க வகையில் முன்கூட்டியே கட்டமைக்கபட்டுள்ளன அவற்றுள் வாடிக்கையாளர் விரும்பியவாறு தெரிவுசெய்து கொண்டு கட்டமைக்கமுடியும்
Application Bar என்ற புதிய வகை கட்டளைபட்டை, தகவல்களை வெட்டி ஒட்டும் தொல்லைக்கு பதிலாக தகவல்களை தேவைப்படும் மற்றவர்களுக்கு சுலபமாக வழங்குதல் பெறுதல் ஆகிய செயலை செய்வதற்கு உதவுகின்ற Contracts ஆகிய வசதிகள் இதில் உள்ளன அதுமட்டு மல்லாது இந்த பயன்பாட்டிலிருந்தே தேவைப்படும் உலாவிக்கு செல்லாமல் தேடிடும் வசதியும் இந்த பயன்பாட்டில் உள்ளத.எந்த இயக்கமுறைமையிலும் எந்த சூழலிலும் இந்த பயன்பாடு இயங்குவதற்கேற்ப தகவமைக்கபட்டுள்ளதாவென அவ்வப்போது பரிசோதித்திடும் வசதியும் இதில்உள்ளது மேலும் தற்போதைய டேப்லெட் பிஸியிலும் இது இயங்கிடுமாறு அமைக்கபட்டுள்ளது எனபதே இதன் சிறப்பம்சமாகும்


முன்னேற்றமே புவி வாழ்வின் நோக்கம். உனது முன்னேற்றம் நின்றுவிட்டால் நீ இறந்துவிடுவாய். முன்னேறாத ஒவ்வொரு கணமும் நீ புதைகுழியை நோக்கி ஓர் அடி எடுத்து வைக்கிறாய்.

Popular Posts