மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தன் மொபைல் போன்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு உதவி தரும் வகையில் ஓர் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த போன்களை வாங்கிய ஒரு வார காலத்திற்குள், அதில் பிரச்னை அல்லது பழுது ஏற்பட்டால், அந்த போனுக்குப் பதிலாக அதே மாடல் புதிய போன் ஒன்று தரப்படும். வாடிக்கையாளர்கள் பழுது குறித்து தொடர்பு கொள்ள, கட்டணம் இல்லாத போன் எண் ஒன்றை மைக்ரோமேக்ஸ் தந்துள்ளது. அந்த எண் 1860 500 8286. அல்லது வழக்கமான லேண்ட்லைன் எண் 011-44770000 என்ற போனையும் தொடர்பு கொள்ளலாம்.
மைக்ரோமேக்ஸ் வாடிக்கையாளர்களிடம் மேற்கொண்ட ஆய்வின் முடிவில் இந்த ஏற்பாட்டினை மேற்கொண்டுள்ளதாக, மைக்ரோமேக்ஸ் நிறுவன வர்த்தகப் பிரிவு இயக்குநர் விகாஸ் ஜெயின் இதனைத் தெரிவித்துள்ளார்.
குற்றச்சாட்டுகள் உடனடியாக தீர்க்கப்பட குழு மைய அலுவலகர்கள் மற்றும் மேல் முறையீட்டு அதிகாரிகளையும் நியமித்துள்ளதாக இவர் தெரிவித்தார். மேலே சொல்லப்பட்ட தொலைபேசி எண்களில், மைக்ரோமேக்ஸ் மொபைல் போன்கள் தொடர்பான தொழில் நுட்ப உதவிகளும் வழங்கப்படுகின்றன.
பீடெல் வழங்கும் விலை குறைந்த டச் ஸ்கிரீன் மொபைல்
பீடெல் டெலிடெக் நிறுவனம் ஜி.டி. 470 என்ற பெயரில், குறைவான விலையில் டச் ஸ்கிரீன் மொபைல் போன் ஒன்றை விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. இரண்டு சிம்களை இயக்கக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த மொபைல் போனில், 2.8 அங்குல அகலத்திலான தொடு திரை தரப்பட்டுள்ளது. இந்த திரை 240x320 பிக்ஸெல்கள் கொண்டதாக உள்ளது. இதன் முனைகள் அழகான வளைவுகளுடன் அமைக்கப்பட்டுள்ளன. இதன் எடை 93 கிராம். 1.3 மெகா பிக்ஸெல் கேமரா, எப்.எம். ரேடியோ, மெமரி கார்ட் மூலம் 8 ஜிபி வரை மெமரி அமைத்துக் கொள்ளும் வசதி, புளுடூத், பலவகை வீடியோ பார்மட்களின் இயக்கம், மியூசிக் பிளேயர் ஆகியவை இதன் சிறப்பு அம்சங்களாகும். இந்திய பண்டிகைகளைக் காட்டும் வசதியுடன் கூடிய காலண்டர் இயங்குகிறது. 1000 mAh திறன் கொண்ட பேட்டரி தொடர்ந்து 4 மணி நேரம் பேச மின்சக்தி அளிக்கிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால், 200 மணி நேரம் மின்சக்தியைத் தேக்கி வைக்கிறது. இதன் அதிக பட்ச விலை ரூ. 3,300 எனக் குறிப்பிட்டி ருந்தாலும், சந்தையில் இந்த மொபைல் ரூ.2,850க்குக் கிடைக்கிறது. தொடு திரையுடன் கூடிய விலை குறைந்த போனாக இது கருதப்படுகிறது.
------------------- நன்றி -------------------
இந்த பதிவிற்கு ஓட்டு போட்டுவிட்டிர்களா? உங்கள் ஓட்டால் இந்த தகவல் அனைவருக்கும் சென்றடையும் ! ! !