Total Pageviews

Wednesday, 11 April 2012

Desktop-இல் Right Click செய்தால் Safely Remove Hardware வசதி

|0 comments
 
 



இன்றைய காலகட்டத்தில் கம்ப்யூட்டர் உபயோகபடுத்தாதவர்கள் இருப்பது கடினம் என்றாகிவிட்டது, கல்லூரியிலோ , கம்ப்யூட்டர் சென்டரிலோ , அலுவலகத்திலோ நாம் கணினியை பயன்படுத்துகிறோம் , அதே சமயம் நம்மில் பலர் பென்டிரைவ் உபயோகித்துதான் கோப்புகளை எடுத்து செல்கிறோம் , ஆனால் பென்டிரைவை கணினியை விட்டு நீக்கும் போது "Safely Remove Hardware" என்பதை கிளிக் செய்து விட்டு தான் நீக்க வேண்டும் , ஆனால் நாம் சில முறை இதை மறந்து விடுவோம் இதனால் பென்டிரைவ் பழுதடைவதற்கான வாய்ப்பு அதிகம். அதுமட்டுமில்லாமல் முக்கியமான சில கோப்புகளை இழக்கவும் வாய்ப்பு உள்ளது .

இதற்கான காரணம் என்று பார்த்தால் , அந்த "Safely Remove Hardware" Option ஆனது டாஸ்க் பாரின் வலது மூலையில் ஒளிந்திருக்கும் எனவே நாம் அதை கவனிப்பதில்லை .

அது உங்கள் Desktop-இல் நீங்கள் ரைட் கிளிக் செய்யும் போது வந்தால் நன்றாக இருக்கும் அல்லவா, நீங்களும் பாதுகாப்பாக உங்களது பென் டிரைவை கணினியை விட்டு நீக்கலாம். இது அதாவது கீழே உள்ளது போல.



விண்டோஸ் 7 க்கானது என்பதை நினைவில் வைத்துகொள்ளுங்கள் .

எப்படி இதை செய்வது?

Win Button +R கொடுத்து வரும் Run விண்டோவில் "regedit" என்பதை கொடுத்து ok கொடுக்கவும்.


பின்பு அதில் உள்ள HKEY_CLASSES_ROOT என்பதை கண்டுபிடித்து கிளிக் செய்து பின் அதில் வரும் DesktopBackground Option - இல் Shell என்பதை கிளிக் செய்யவும், (அதாவது HKEY_CLASSES_ROOT\DesktopBackground\Shell\ )

உங்களுக்கு இப்போது கீழ்கண்ட திரை கிடைக்கும்


இப்பொழுது Shell ஐ ரைட் கிளிக் செய்யுங்கள் , அதில் New--> Key என்பதை கொடுத்து Safely Remove Hardware என்ற தலைப்பில் ஒரு புதிய கீ உருவாக்கி கொள்ளுங்கள் .



தற்பொழுது Safely Remove Hardware -இல் Right Click செய்தால் புதிதாக ஒரு string value உருவாக்கி கொள்ள Option வரும். அதற்கு தலைப்பு icon என கொடுங்கள் .


icon ஐ டபிள் கிளிக் செய்யுங்கள் அதற்கு Value Data: hotplug.dll,-100 என்று கொடுங்கள் .



தற்பொழுது Safely Remove Hardware -இல் மறுபடி Right Click செய்து புதிதாக ஒரு Key உருவாக்கி கொள்ளுங்கள் . அதற்கு தலைப்பு command என கொடுங்கள் .



அதன் உள்ளே வால்யு டாட்டா ஒன்று default என்ற பெயரில் இருக்கும், இதை டபுள் கிளிக் செய்து நீங்கள் அதற்கு இந்த Value கொடுக்கவேண்டும் C:\\Windows\\System32\\control.exe hotplug.dll


அட போங்கப்பா ரொம்ப நேரமா எவ்ளோ செட்டிங்க்ஸ் Change பண்ண சொல்றனு நினைக்கிறீங்களா ? டோன்ட் வொர்ரி இப்ப டெஸ்க்டாப் ல போயிடு ஒரு வாட்டி செக் பண்ணி பாருங்க



இப்படி வந்துருச்சா! வாழ்த்துக்கள்

நீங்கள் வெற்றிகரமாக முடித்து விட்டீர்கள்!!

ஏதேனும் சந்தேகம் இருப்பின் கீழே கேட்கவும்.

புதிய வகையில் உலகைக் காண கூகுளின் கூளிங் கிளாஸ்த் திட்டம் !!

|0 comments
 
 


இணைய உலகின் ஜாம்பவானான கூகுள் பல்வேறு திட்டங்களின் முன்னோடியாகவும் திகழ்கின்றது. தற்போது தனது புதிய திட்டமொன்று தொடர்பில் கூகுள் அறிவித்துள்ளது. இத்திட்டம் இணையமூலமான செயற்பாடுகளைக் கண்ணாடியில் (கூளிங் கிளாஸ்) இணைத்தலாகும்.

அதிநவீன வசதிகளுடன் கூடிய இக் கண்ணாடியின் மூலம் பிடித்த பாடல்களைக் கேட்கலாம். இக்கண்ணாடியானது கூகுள் மேப் உதவியுடன் சரியான வழியைக் காட்டக்கூடியது. இந்த கண்ணாடி மூலம் படம் பிடித்து அந்த போட்டோவை அப்படியே கூகுள் பிளஸ் தளத்தில் பகிரவும் முடியும். கூகுள் பிளஸ் நண்பர்களுடன் வீடியோ அழைப்பினையும் மேற்கொள்ளலாம். அதுமட்டுமன்றி காலநிலையையும் அறிந்துகொள்ளலாம். குரல்கட்டளைகளின் மூலமாக தகவல்களை அனுப்பவும், பெறவும் முடியும்.


இக்கண்ணாடி தொடர்பில் வெளியாகியுள்ள காணொளியானது இத்தொடர்பான ஓர் அறிவிப்பு மட்டுமே என கூகுள் தெரிவிக்கின்றது. எனினும் காணொளியில் காட்டப்பட்டுள்ள வடிவிலேயே இக்கண்ணாடி காணப்படும் என்பதில் நிச்சயமில்லை. இதைவிட முற்றிலும் மாறுபட்ட வடிவில் அக்கண்ணாடி காணப்படலாம் என தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
இத்தகையதொரு திட்டத்தினை அதாவது அணியக்கூடிய கணனித்தொழில்நுட்பம் ( Wearable computing Technology) கூகுள் முயன்று வருவதாக பலநாட்களாகவே தகவல் கசிந்து வந்த நிலையிலேயே தற்போது கூகுள் இது தொடர்பான அறிவிப்பினை மேற்கொண்டுள்ளது. இன்னும் வெளியாகா இக் கண்டுபிடிப்பு எவ்வளவு தூரத்திற்கு சாத்தியப்படும் என்பதனைப் பொறுத்திருந்து பார்ப்போம். __

அதிசயிக்க வைக்கப்போகும் ஐ போன் ஐந்து

|0 comments
 
 
 




அமெரிக்காவிலுள்ள சான்பிரான்சிஸ்கோ நகரில் வரும் ஜூன் 11 முதல் ஜூன் 15 வரை நடைபெற இருக்கும் உலகளாவிய வன்பொருள் மற்றும் மென்பொருள் வடிவமைப்பாளர்கள் மாநாட்டில் (WWDC) இந்த ஐந்தாம் தலைமுறை ஐ-போனை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்த இருக்கிறது.

ஜூன் மாதத்திற்குள் ஐந்தாம் தலைமுறை ஐ-போனை வெளியிடும் வகையில் சுமார் 18,000 பணியாளர்களை நியமிக்க இருப்பதாகவும் அத்தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த ஐ-போன் 4.6 இன்ச் அளவு கொண்டதாகவும், துல்லியமான படங்களுக்காக, ரெட்டினா திரையைக் கொண்டதாகவும் இது இருக்கும் என தெரிகிறது.


இதன் விலையும், இன்ன பிற சிறப்பம்சங்கள் குறித்த தகவல்களும் விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிறது.

ஐ-போன்கள் வரலாற்றில் மகத்தான இடத்தைப் பிடித்துள்ள ஆப்பிள் நிறுவனம் வரும் ஜூனில் ஐந்தாம் தலைமுறை ஐ-போனை (Iphone 5) அறிமுகப்படுத்த இருக்கிறது.

கூகுள் தளத்தில் உங்கள் புகைப்படம்

|0 comments
 
 

கூகுள் தேடல் முடிவுகளில் காட்டப்படும் Rich Snippets பற்றி கடந்த பகுதியில் பார்த்தோம் அல்லவா? அதில் முதலும், முக்கியமானதுமான பதிவர்களாகிய உங்கள் புகைப்படத்தை கூகிள் தேடல் முடிவுகளில் பதிவின் பக்கத்தில் காட்டும் Authorship Markup பற்றி பார்ப்போம். இதன் மூலம் உங்கள் படத்தை கூகிளில் தெரியவைக்கலாம்.

கூகிளில் உங்கள் புகைப்படம் தெரிய வேண்டுமானால் உங்களுக்கு புகைப்படத்துடன் கூகிள் ப்ளஸ் சுயவிவரப்பக்கம் (Google+ Profile Page) இருத்தல் வேண்டும். அதாவது நீங்கள் கூகுள் ப்ளஸ் தளத்தை பயன்படுத்த வேண்டும். பிறகு பின்வரும் இரண்டு காரியங்களை செய்ய வேண்டும்.


பதிவின் பக்கத்தில் இருந்து உங்கள் கூகிள்+ பக்கத்திற்கு இணைப்பு கொடுக்கவேண்டும். உங்கள் கூகிள்+ பக்கத்தில் இருந்து உங்கள் பிளாக்கிற்கு இணைப்பு கொடுக்க வேண்டும்.

செய்முறை:



1. உங்கள் கூகுள் ப்ளஸ் சுயவிவரப்பக்கத்தில் (Google+ Profile) Contributor to என்ற பகுதியில் உங்கள் ப்ளாக்கின் முகவரியைக் கொடுக்க வேண்டும்.

2. அ. உங்கள் ப்ளாக்கர் சுயவிவரப் பக்கத்தை கூகிள் ப்ளஸ் சுயவிவரப் பக்கத்திற்கு மாற்ற வேண்டும். இது பற்றி கூகிள் ப்ளஸ்ஸில் இணைகிறது ப்ளாக்கர் என்ற பதிவில் பார்க்கவும்.

இதில் இரண்டாவது உள்ள முறை சில டெம்ப்ளேட்களில் வேலை செய்யாது. அதற்கு மாற்றாக,

ஆ. உங்கள் தளத்தில் இருந்து உங்கள் கூகிள்+ தளத்திற்கு பின்வருமாறு இணைப்பு கொடுக்க வேண்டும்.

<a href="https://plus.google.com/109412257237874861202?rel=author">Google+</a>

இதில் சிவப்பு நிறத்தில் உள்ள எண்களை நீக்கிவிட்டு உங்கள் Profile ID எண்களைக் கொடுங்கள்.
கூகுள் ப்ளஸ் தளத்தில் என்பதை க்ளிக் செய்து Address Bar-ஐ பார்த்தால் அங்கு இந்த எண்கள் இருக்கும்.

இ. இணைப்பு கொடுப்பதற்கு பதிலாக Widget-ஆகவும் வைக்கலாம்.

Blogger Dashboard =>Layout பகுதிக்கு சென்று Add a Gadget என்பதை க்ளிக் செய்து Google+ Badge என்னும் (புதிய) Gadget-ஐ வைக்கவும். அதில் உங்கள் Profile ID-ஐ கொடுக்கவும்.

பிறகு உங்கள் படம் தேடுபொறியில் தெரியுமா? என்பதை http://www.google.com/webmasters/tools/richsnippets என்ற முகவரியில் சென்று உங்கள் ப்ளாக் முகவரியைக் கொடுத்து சரி பார்க்க வேண்டும். அனைத்து Rich Snippets முறையையும் நாம் இந்த முகவரியில் தான் சரி பார்க்க வேண்டும்.


அதில் உங்கள் புகைப்படம் தெரிந்தால் போதும். உங்கள் படம் கூகிள் தேடல் பக்கத்தில் தெரியும். கூகிள் தேடல் முடிவுகளில் உங்கள் பதிவு வந்தால் அது பின்வருமாறு தெரியும்.


உங்கள் புகைப்படம், உங்கள் பெயர் (கூகிள் ப்ளஸ் இணைப்புடன்), எத்தனை நபர்கள் உங்களை கூகிள் ப்ளஸ்ஸில் பின்தொடர்கிறார்கள்? ஆகிய விவரங்களைக் காட்டும்.

அதில் உங்கள் பெயருக்கு மேலே கர்சரை கொண்டு சென்றால் Follow என்ற பட்டனை காட்டும். இதன் மூலம் வாசகர்கள் தேடுபொறியில் இருந்தே நம்மை பின்தொடரலாம்.



உங்களை கூகிள்+ தளத்தில் குறைந்தது 500 நபர்கள் உங்களை பின்தொடர்ந்தால் மட்டுமே அந்த எண்ணிக்கையை கூகிள் காட்டும். ஐநூறுக்கும் குறைவாக இருந்தால் பின்வருமாறு மட்டுமே காட்டும்.


கூகிள் தளத்தில் உங்கள் படம் தெரிவதற்கு சில மணி நேரங்களோ, சில நாட்களோ ஆகலாம். அதுவரை காத்திருக்கவும.

இறைவன் நாடினால், மற்ற Rich Snippets-கலைப் பற்றி விரைவில் பார்ப்போம்.



Popular Posts