இணைய உலகின் ஜாம்பவானான கூகுள் பல்வேறு திட்டங்களின் முன்னோடியாகவும் திகழ்கின்றது. தற்போது தனது புதிய திட்டமொன்று தொடர்பில் கூகுள் அறிவித்துள்ளது. இத்திட்டம் இணையமூலமான செயற்பாடுகளைக் கண்ணாடியில் (கூளிங் கிளாஸ்) இணைத்தலாகும்.
அதிநவீன வசதிகளுடன் கூடிய இக் கண்ணாடியின் மூலம் பிடித்த பாடல்களைக் கேட்கலாம். இக்கண்ணாடியானது கூகுள் மேப் உதவியுடன் சரியான வழியைக் காட்டக்கூடியது. இந்த கண்ணாடி மூலம் படம் பிடித்து அந்த போட்டோவை அப்படியே கூகுள் பிளஸ் தளத்தில் பகிரவும் முடியும். கூகுள் பிளஸ் நண்பர்களுடன் வீடியோ அழைப்பினையும் மேற்கொள்ளலாம். அதுமட்டுமன்றி காலநிலையையும் அறிந்துகொள்ளலாம். குரல்கட்டளைகளின் மூலமாக தகவல்களை அனுப்பவும், பெறவும் முடியும்.
இக்கண்ணாடி தொடர்பில் வெளியாகியுள்ள காணொளியானது இத்தொடர்பான ஓர் அறிவிப்பு மட்டுமே என கூகுள் தெரிவிக்கின்றது. எனினும் காணொளியில் காட்டப்பட்டுள்ள வடிவிலேயே இக்கண்ணாடி காணப்படும் என்பதில் நிச்சயமில்லை. இதைவிட முற்றிலும் மாறுபட்ட வடிவில் அக்கண்ணாடி காணப்படலாம் என தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
இத்தகையதொரு திட்டத்தினை அதாவது அணியக்கூடிய கணனித்தொழில்நுட்பம் ( Wearable computing Technology) கூகுள் முயன்று வருவதாக பலநாட்களாகவே தகவல் கசிந்து வந்த நிலையிலேயே தற்போது கூகுள் இது தொடர்பான அறிவிப்பினை மேற்கொண்டுள்ளது. இன்னும் வெளியாகா இக் கண்டுபிடிப்பு எவ்வளவு தூரத்திற்கு சாத்தியப்படும் என்பதனைப் பொறுத்திருந்து பார்ப்போம். __
0 comments:
Post a Comment