Total Pageviews

Sunday, 12 February 2012

கூகுள் பிளசில் Translate வசதி

 

கூகுளால் உருவாக்கப்பட்ட கூகுள் பிளஸ் இணையத்தளம் பேஸ்புக்கிற்கு போட்டியாக அபரிமிதமாக வளர்ந்து கொண்டு வருகிறது. மேலும் பயனாளர்களை அதிகமாக கவர்வதற்காக கூகுள் பல்வேறு புதிய வசதிகளை அறிமுகப்படுத்திக் கொண்டே வருகின்றது. அந்த வரிசையில் கூகுளின் மிகச் சிறந்த சேவையான Google Translate வசதியை கூகுள் பிளஸ் தளத்தில் கொண்டு வரலாம்.

கூகுள் பிளசில் Translator வசதியை கொண்டு வர:

இதற்கு முதலில் Google Translate for Google+ இந்த லிங்கில் கிளிக் செய்து நீட்சியை குரோம் உலவியில் நிறுவிக் கொள்ளுங்கள்.

இதன் பிறகு கூகுள் பிளஸ் தளத்தை ஓபன் செய்து பாருங்கள், ஒவ்வொரு பதிவிற்கும் முடிவில் Translate என்ற லிங்க் வந்திருக்கும்.

அதனை கிளிக் செய்தால் அந்த பதிவு Default Language-ஆக எதை தெரிவு செய்துள்ளோமோ அதற்கு மாறிவிடும்.

Default Language மாற்ற:

நீட்சியின் மேல் மவுஸ் கர்சரை வைத்து ரைட் கிளிக் செய்து Options என்பதை கிளிக் செய்யவும்.

அடுத்து வரும் விண்டோவில் உள்ள Language என்ற பகுதியில் உள்ள மொழியை உங்களுக்கு தேவையான மொழியை தெரிவு செய்து கொள்ளவும் மற்றும் மொழி மாற்றத்தின் பின்புற நிறத்தையும் இதில் தெரிவு செய்து கொள்ளலாம்.

0 comments:

Post a Comment

Popular Posts