Total Pageviews

Saturday, 17 March 2012

என்சைக்ளோபீடியாவின் இணையப் பதிப்பை ஒரு வாரத்திற்கு இலவசமாக பயன்படுத்தலாம்

|0 comments
 
1766 முதல் 2010 வரை 244 வருடங்களாக தனது அச்சுப்பதிப்பை வெளியிட்டு
வந்த என்சைக்ளோபீடியா நிறுவனம் தற்போது அதை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
உலகின் பழமையானதும் தொடர்ச்சியாக 244 வருடங்களாக ஆங்கில மொழியில் என்சைக்ளோபீடியாவை வெளியிடும் ஒரே நிறுவனம் பிரிட்டானிக்கா.

இனிமேல் டிஜிட்டல் பதிப்பில் இணையத்தில் மட்டுமே வெளிவரவிருக்கும் என்சைக்ளோபீடியா
ஒரு வாரங்களுக்கு ஆன்லைனில் இலவசமாக பயன்படுத்தலாம் என தெரிவித்துள்ளது.

இணைப்பு - http://www.britannica.com/EBchecked/topic/186618/Encyclopaedia-Britannica

முதியோர் சொல்லும்
முதுநெல்லியும்
ஒரே மாதிரி.
முன்பு கசக்கும், பின்பு இனிக்கும்.

உங்கள் பாஸ்வேர்டை நினைவில் கொள்ள புதிய மென்பொருள் அறிமுகம்!

|0 comments
 
இன்றைய உலகில் மின்னஞ்சலை(இ-மெயில்) பயன்படுத்தாக நபர்கள் யாரும் இல்லை எனலாம். ஒவ்வொரு நபரும் ஒன்றுக்கு மேற்பட்ட மின்னஞ்சல்களை பயன்படுத்துகின்றனர். எனவே ஒவ்வொரு கணக்கிருக்கும் வெவ்வேறான பாஸ்வேர்ட் கொடுத்து இருப்பதால் அதை அனைத்தையும் ஞாபகம் வைத்து கொள்வது என்பது இயலாத காரியம். இச்சூழ்நிலையில் உங்களது பாஸ்வேர்ட்டை ஞாபகத்தில் வைத்துக் கொள்வதற்கு ஒரு சிறிய மென்பொருள்(சாஃப்ட்வேர்) உதவி புரிகிறது. இந்த சாப்ட்வேர்ரில் உங்களின் அனைத்து பாஸ்வேர்ட் ஐயும் சேமித்து அனைத்திற்கும் சேர்த்து ஒரே ஒரு பாஸ்வேர்ட் கொடுத்து கொள்ளலாம். அதை மட்டும் ஞாபகம் வைத்துக் கொண்டால் போதும்.

மென்பொருளின் சிறப்பம்சங்கள்: எந்தவொரு நபரும் உங்களது பாஸ்வேர்ட்டை திருடாத படி கடினமான பாஸ்வேர்ட் இந்த மென்பொருள் மூலம் உருவாக்கலாம். குறிப்பிட்ட ஒரு கோப்பை ஒட்டுமொத்த பாஸ்வேர்ட் ஆக தெரிவு செய்யும் வசதி. மின்னஞ்சல், இயங்குதளம் மற்றும் இணையம் என அனைத்திற்கும் தனித்தனியான பாஸ்வேர்ட்டை சேமித்து வைத்துக் கொள்ளும் வசதி. போர்ட்டபிள் மென்பொருள் என்பதால் கணணியில் நிறுவி செய்ய வேண்டிய அவசியமும் இல்லை மற்றும் ஏராளமான வசதிகள் உள்ளது.

இதற்கு முதலில் இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்தால் வரும் ZIP கோப்பை Extract செய்து Key pass என்ற கோப்பை ஓபன் செய்யுங்கள்.அதன் பின் தோன்றும் விண்டோவில் அதில் உள்ள New என்ற பட்டனை அழுத்தவும். அதன் பின் தோன்றும் விண்டோவில் உங்களின் Master pass word தெரிவு செய்து கொள்ளுங்கள் அதன்பின் தோன்றும் விண்டோவில் உங்களின் pass word வகையை தெரிவு செய்து கொண்டு Add Entry என்ற பட்டனை அழுத்தி உங்கள் pass word சேமித்து கொள்ளலாம்.

இதே முறையில் உங்களையுடைய அனைத்து பாஸ்வேர்ட்களையும் இந்த மென்பொருளில் சேமித்து கொள்ளுங்கள். மேலும் இந்த மென்பொருள் மூலம் மிக கடினமான பாஸ்வேர்ட் களை உருவாக்கலாம். இதற்கு Tools - pass word generate சென்று கடினமான பாஸ்வேர்ட்களை உருவாக்கி கொள்ளலாம். இதன் மூலம் உருவாகும் பாஸ்வேர்ட் தானாகவே இந்த மென்பொருளில் சேமிக்கப்படும்.

Read more: http://www.anbuthil.com/2012/03/blog-post_14.html#ixzz1pNEWpd87\

ஒன்றுக்குச் சான்றுகள் இல்லாமை என்பது
அது இல்லாமைக்குச் சான்றில்லை

கூகுள் சேமித்து வைத்திருக்கும் உங்களது தகவல்களை நீக்குவதற்கு

|0 comments
 
கூகுள் நிறுவனம் கடந்த 1ம் திகதி முதல் புதிய Privacy Policy ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் உங்களின் தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும், நீங்கள் பயன்படுத்தும் கூகுள் சாதனங்கள் அனைத்திலும் பகிர்ந்து கொள்ளப்படும்.
அதாவது உங்களுக்கு ஒரு ஜிமெயில் கணக்கு இருந்தால், அதில் நீங்கள் புதியதொரு கணக்கினை உருவாக்கும் போது தரப்பட்ட தகவல்கள் அனைத்தும், நீங்கள் பயன்படுத்தும் ஜிப்ளஸ், ஆர்குட், குரோம் பிரவுசர், யு-ட்யூப் என கூகுள் நிறுவனத்தின் அனைத்து சாதனங்களிலும் பயன்படுத்தப்படும்.

கூகுள் நாம் மேற்கொள்ளும் இணையத்தளங்கள் குறித்த அனைத்து தகவல்களையும் குறித்து வைத்துப் பயன்படுத்தும். உங்கள் தேடல்கள் மற்றும் பார்க்கும் தளங்கள் ஆகிய அனைத்தும் அதன் தகவல் தளத்தில் பதிவாகும். தேவைப்படும் நேரத்தில் இவை பயன்படுத்தப்படும்.
கூகுள் இது போல நம் இணைய வேலைகளைப் பின்பற்றாமல் இருக்க வேண்டும் எனில், அதற்கான எதிர் வேலைகளையும் நாம் மேற்கொள்ளலாம். இதனை ஒரு பட்டன் அழுத்தி மேற்கொள்ளலாம் என்பது இன்னும் ஆர்வமூட்டும் ஒரு தகவலாகும். இதனை எப்படி மேற்கொள்வது எனப் பார்க்கலாம்.
உங்கள் கூகுள் கணக்கில், பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் கொடுத்து நுழைந்த பின்னர், https://www.google.com/history என உங்கள் உலாவியின் முகவரி விண்டோவில் டைப் செய்திடவும் அல்லது கூகுள் சாதனங்களான கூகுள் ப்ளஸ் அல்லது கூகுள் தேடல் தளத்தில் மேலாக வலது மூலையில் உள்ள கீழ்விரி மெனுவில் Account Settings என்பதனைத் தேர்ந்தெடுக்கலாம்.

இந்த அக்கவுண்ட் செட்டிங்ஸ் பக்கத்தில், Services என்ற இடத்திற்குச் செல்லவும். அடுத்து Go to web history என்ற லிங்க்கில் கிளிக் செய்திடவும்.

இதில் டிக் அடையாளம் ஏற்படுத்தப்பட்டிருந்தால் நீங்கள் அண்மையில் சென்ற தளங்களின் முகவரிகள் மேற்கொண்ட தேடல்கள் அனைத்தும் அங்கு பட்டியலாக இருப்பதனைக் காணலாம்.

இங்கு உள்ள Remove all Web History என்ற கிரே கலர் பட்டனில் கிளிக் செய்திடவும். தொடர்ந்து ஓகே பட்டன்களைக் கிளிக் செய்து வெளியேறவும். இதனைத் தொடர்ந்து, உங்களின் இணைய தேடல் பக்கங்கள், தகவல் தேடல் கேள்விகள் அனைத்தும் கூகுளின் கரங்களுக்குள் சிக்காது.
 
வெற்றி என்பது என்ன?
உங்கள் கையொப்பம், ஆட்டோ கிராப் ஆனால் அதுவே வெற்றி.

வேண்டப்படாத இணைய தளங்களை உங்கள் கணினியில் தடுக்க

|0 comments
 
எமது கணினிக்கு அடிக்கடி வேண்டப்படாத தளங்கள் பல பார்க்கப்படுகின்றன அல்லது பயன்படுத்தக்கூடாது என்று நினைப்பவை பயன்படுத்தப்படுகிறது என்று நினைகிறீர்களா? கவலையை விடுங்க, உங்கள் பிள்ளைகளின் கணினியில் பாலியல் தளங்கள் உலா வருகின்றனவா? விட்டொழியுங்கள் உங்கள் கவலையை அதை தடுக்க ஒரு வழி இருக்கு பண்ணி பார்ப்போமா?
மாபெரும் தகவல் களஞ்சியமாக விளங்கும் இணையமானது பல்வேறு வழிகளில் நன்மை பயக்குகின்றபோதும் சில சந்தர்ப்பங்களில் பாதகமான விளைவுகளையும் ஏற்படுத்துவதுண்டு இதனால் அவ்வாறான இணையத்தளங்களை நாம் நிரந்தரமாக எமது கணினியில் முடக்குவதற்கு வசதி உண்டு. அதேபோல சில இணையத்தளங்களை குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் முடக்கவேண்டிய சந்தர்ப்பங்களும் ஏற்படலாம்.
அதற்கு FocalFilter என்ற மென்பொருள் பெரிதும் பயனுள்ளதாக காணப்படுகின்றது. இந்த மென்பொருளை நிறுவி உங்கள் கணினியில் நிறுவி கீழ்வரும் படிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் நீங்கள் விரும்பிய இணையத்தளங்களை குறிப்பிட்ட நேரத்திற்கு முடக்க முடியும்.
 
இங்குள்ள இணைப்பிற்கு (http://www.focalfilter.com/) சென்று FocalFilter மென்பொருளை தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவிக்கொள்க. இந்த மென்பொருள் இயங்குவதற்கு Microsoft's .NET Framework கணினியில் நிறுவப்பட்டிருத்தல் அவசியமாகும்.
1. FocalFilterஐ செயற்படுத்தி அதில் காணப்படும் Edit my Site List என்பதை அழுத்தவும்.
2.அதன்பின் தோன்றும் விண்டோவில் முடக்குவதற்கு விரும்பும் இணையத்தளங்களின் முகரிகளை கொடுத்து Save செய்யவும்.
3.பின்னர் தோன்றும் விண்டோவில் Block for என்பதற்கு அருகில் காணப்படும் பொப்பப் மெனுவை அழுத்தி நேரத்தை தெரிவு செய்து Block my Site List என்பதை அழுத்தவும்.

எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை.

1GB கொள்ளவு கொண்ட கோப்பை 10MB ஆக குறைக்க இலவச மென்பொருள்!!

|0 comments
 
பொதுவாக நாம் அதிககொள்ளவு கொண்டகோப்புகளை WinZip, 7-Zip போன்றமென்பொருட்களின்துணையுடன் தான் கோப்புகளைCompress செய்துபயன்படுத்துவோம்.
 
இந்த மென்பொருளானது மேற்கண்ட மென்பொருட்களைக் காட்டிலும் பத்து மடங்குகுறைவான கொள்ளவு கொண்ட கோப்புகளாக மாற்றித்(compression) தருகிறது.
 
மென்பொருளின் பெயர்: KGB Archiver
 
இம்மென்பொருளானது நம்முடைய கோப்புகளை மிகவிரைவாக,குறைவான அளவுள்ள கோப்புகளாக மாற்றித் தருகிறது. 1GB அளவுள்ள கோப்புகளை வெறும் 10MB அளவாக மாற்றித்தருகிறது.
 
இவ்வாறு குறைந்த அளவாக compress செய்து தருவதால் அதிககொள்ளவுகொண்ட Fileகளையும் நாம் எளிதாக பரிமாற்றம்செய்துகொள்ள முடிகிறது. இது விண்டோஸ் மற்றும் லினக்ஸ் இயங்குதளங்களை ஆதரிக்கிறது.
 
compression அளவுகளை உங்கள் விருப்படி Very Weak, Low, Normal, Maximum, Highஎன்னும் வகையில் நாம் அமைத்துக்கொள்ளலாம். இம்மென்பொருள் நிறுவஉங்கள் கணினியில் 1.5 GHz Processer, குறைந்த பட்சம் 256 MB Ram நிச்சயம்இருக்க வேண்டும்.
 
குறிப்பு: இம்மென்பொருளைக் கொண்டு compression செய்த File-களை இதேமென்பொருளைக்கொண்டுதான் விரிக்க முடியும். எனவே இம்மென்பொருளானதுஉங்கள் நண்பர்களிடத்தும் நிச்சயம் இருக்க வேண்டும். இம்மென்பொருளின் மூலம் வீடியோ கோப்புகளை compress செய்யமுடியாது.
 
மற்ற வகைக் கோப்புகளை எளிதாக Compression செய்து தருகிறது. மற்ற Compression Software-களைக் காட்டிலும், கோப்புகளை குறைந்த அளவிற்கு சுருக்கித் தருவதால்இம்மென்பொருள் உண்மையிலேயே அதிக பயன்தரக்கூடிய ஒன்று.
 
அடிக்கடி அதிக கொள்ளவு கொண்ட கோப்புகளை பரிமாற்றம செய்து கொள்ளும்நண்பர்களுக்கு இம்மென்பொருள் உதவும் என்பதில் சந்தேகமில்லை.
 
வீடியோ மின்னஞ்சல் அனுப்ப ஆசையா..?

|0 comments
 
நீங்கள் சொல்ல நினைக்கும் தகவலை வீடியோ வடிவில் பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் உங்களுக்கு விருப்பமான நபர்களுக்கு அனுப்பலாம். இதற்கு உங்கள் கணணியில் வெப் கமெரா வசதி இருந்தால் மட்டுமே போதுமானது. ஆனால் குறைந்தது 60 வினாடிகள் மட்டுமே பேச முடியும். இவ்வாறு வீடியோ வடிவில் நண்பர்களை தொடர்பு கொள்வது புதுமையாக இருப்பதுடன், நேரில் சந்திப்பது போன்ற ஒரு நினைவை ஏற்படுத்தும்.
இந்த சேவையில் உள்ள மற்றும் ஒரு சிறப்பம்சம் மின்னஞ்சல் போன்றே, இதிலும் கோப்புகளை இணைத்து அனுப்பலாம். ஆகையால் நாம் அனுப்பும் கோப்புகளுக்கான அறிமுக உரை அல்லது விளக்க உரையாக வீடியோ மின்னஞ்சலை பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் இணைப்புகளின் சாரம்சத்தை எளிதாக புரிய வைக்கலாம்.
வாழ வைப்பவன் இறைவன், வாழத் தெரிந்தவன் மனிதன், விழ வைப்பவன் துரோகி, தூக்கி விடுபவன் நண்பன்.

கணினியில் அடுத்தவர்களின் செயற்பாடுகளை கண்காணிப்பதற்கான அசத்தலான மென்பொருள்

|0 comments
 
நீங்கள் எல்லோரும் விக்ரமின் "கந்தசாமி" திரைப்படம் பார்த்திருப்பீர்கள். அதில் ஒரு கட்டத்தில் விக்ரமின் லேப்டாப்பில் ஸ்ரேயா வங்கி கணக்கின் கடவுச்சொல்லை ரைப் பண்ணுவார். அவரிடம் இருந்து லேப்டாப்பை வாங்கும் விக்ரம், ஸ்ரேயா ரைப் பண்ணிய கடவுச்சொல்லை எடுத்துவிடுவார். இது எப்படி என்று யோசித்து இருக்கிறீர்களா?

வேறு ஒன்றுமில்லை. Key logger மென்பொருள்களை உபயோகித்துத்தான். கணினியில் நடக்கும் செயற்பாடுகளை கண்காணிப்பதற்கு சிறந்த மென்பொருள்கள் என்று சொன்னால் அவை Key logger மென்பொருள்கள்தான். கணினியில் ஒருவர் என்னென்ன செய்கிறாரோ எல்லாவற்றையும் கண்காணிப்பதற்கு இந்த மென்பொருள்கள் உதவுகின்றன. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் செயற்பாடுகளை, இணையத்தில் அவர்கள் என்னென்ன செய்கிறார்கள் என்பதை கண்காணிப்பதற்கு இந்த மென்பொருள்கள் பெரிதும் உதவுகின்றன.

இந்த வகை மென்பொருள்களை உங்கள் பிள்ளைகள் பாவிக்கும் கணினியில் நிறுவிவிட்டு நீங்கள் உங்கள் வேலைகளை கவனிக்கலாம். பின்னர் நேரம் கிடைக்கும்போது பிள்ளைகளின் செயற்பாடுகளை கவனிக்கலாம். key logger மென்பொருள் குறிப்பிட்ட நேரத்துக்கொரு தடவை கணினியின் செயற்பாடுகளை Screen Shot எடுத்து வைத்திருக்கும். அதோடு Chat History, History Log File என்பவற்றையும் சேமித்து வைக்கிறது. இந்த முறையில் திருட்டுத்தனமாக இன்னொருவரின் செயற்பாடுகளை கூட கவனிக்கலாம்

எச்சரிக்கை : பெரும்பாலான இன்ரெர்நெற் கபே களில் திருட்டுத்தனமாக இந்த Key Logger மென்பொருட்களை நிறுவி வைத்திருப்பார்கள். ஆகவே இன்ரெர்நெற் கபேயில் இணையத்தை உபயோகிக்கும்போது அவதானமாக இருங்கள்.

Max keylogger எனப்படும் மென்பொருள் key logger மென்பொருட்களுக்குள் சிறந்ததும் பல சிறப்பான வசதிகளை கொண்டுள்ளதுமாகும்.
இதன் சிறப்பம்சங்கள்:
  • Record Each Keystroke : கீ போர்டில் அழுத்தப்படும் அத்தனை எழுத்துக்களையும் பதிவு செய்து வைக்கிறது. (கடவுச்சொல், பயனர் பெயர் போன்றவற்றை இப்படித்தான் இன்ரெர்நெற் கபேகளில் திருடுகிறார்கள்)
  • Instant Chat Messages Recording : பேஸ்புக், Google Talk, Yahoo Messenger போன்றவற்றில் நீங்கள் சாட் பண்ணுபவற்றை அப்படியே பதிவு செய்கிறது.
  • Track Emails : கணினியில் இருந்து அனுப்பப்படும், பெறப்படும் மின்னஞ்சல்களை கண்காணிக்கிறது
  • Monitor Websites : கணினியில் இருந்து உலவும் இணையத்தளங்களை கண்காணித்து பதிவு செய்து வைக்கிறது
  • Review Every Downloaded File : தரவிறக்கம் செய்யும் ஒவ்வொரு File பற்றிய தகவல்களையும் பதிவு செய்கிறது.
இந்த மென்பொருளை தரவிறக்க Max Keylogger
இதில் உள்ள இன்னொரு சிறப்பம்சம், இதை நிறுவி கடவுச்சொல்லையும் கொடுத்துவிட்டால் உங்களை தவிர வேறு யாராலும் இதை கணினியில் இருந்து அகற்ற முடியாது.
இந்த மென்பொருளை தீய நோக்கங்களுக்காக யாரும் பயன்படுத்தவேண்டாம்

உரிமை கொண்டாடும் உறவை விட, உறவைக் கொண்டாடும் நட்பே சிறந்தது.

Popular Posts