Total Pageviews

Thursday, 1 March 2012

விண்டோஸ் 8ன் சோதனை பதிப்பு வெளியீடு!!

|0 comments
 
 
பல்வேறு புதிய அம்சங்களுடன் கூடிய விண்டோஸ் 8ன் சோதனை பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
 
மைக்ரோசொப்ட் நிறுவனமானது விண்டோஸ் 8ன் சோதனை பதிப்பை Desktop Version, Mobile Version என இரண்டு விதங்களில் வெளியிட்டுள்ளது.
 
இதனால் மைக்ரோசொப்டின் பொருட்கள் பயனாளர்களை அதிகளவு கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இதன் சிறப்பு அம்சமாக க்ளவுட் தரவு பரிமாற்ற முறை, தொடுதிரை, வேகம் என்பனவற்றை மைக்ரோசொப்ட் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
 
விண்டோஸ் 8ன் பீட்டா பதிப்பு வெளியிடப்பட்டு 3 மில்லியன் பயனாளர்கள் தரவிறக்கம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
 

மைக்ரோசொப்ட்டின் விண்டோஸ் 8 இன் பரிசோதனை பதிப்பு வெளிவந்துவிட்டது Windows-8-review

|0 comments

புதிய புதிய தொழில் நுட்பத்தினை கொடுக்கும் நிறுவனங்களிடம் இருந்து வாடிக்கையாளர்கள் தொடர்ந்து சிறந்த தொழில் நுட்பத்தினை எதிர் பார்க்கின்றனர். மைக்ரோசாஃப்டு நிறுவனம் விண்டோஸ்-8 என்ற புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை வெளியிட்டுள்ளது. பிரத்தியேகமான வசதிகளை கொடுக்கும் இந்த ஓஎஸ் மூலம் நிச்சயம் சிறப்பான நவீன வசதிகளை பெற முடியும்.

இந்த விண்டோஸ்-8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் எக்ஸ்-86 சிப் பொருத்தப்பட்டுள்ளது. இந்த தொழில் நுட்ப வசதி இன்டல் கார்ப் நிறுவனத்தின் மூலம் டெஸ்க்டாப் மற்றும் லேப்டாப் போன்றவற்றுக்காக பிரத்தியேகமான முறையில் தயாரிக்கப்பட்ட ஒன்று. அது மட்டும் அல்லாது இந்த விண்டோஸ்-8 இயங்குதளத்தில், புதிய வெர்ஷன் ஏஆர்எம் மைக்ரோ பிராசஸரும் உருவாக்கப்பட்டுள்ளது.

விண்டோஸ்-8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் வாடிக்கையாளர்களுக்கு புதிய பிரவுசிங் அனுபவத்தையும் வழங்கும். இந்த புதிய இயங்குதளத்தை விண்டோஸ் இணையதளத்தில் இருந்து எளிதாக டவுன்லோட் செய்யலாம்.

பரிசோதனை பதிப்பு தரவிறக்கம் செய்வதற்கு இந்த இணைப்பில்

http://windows.microsoft.com/en-US/windows-8/consumer-preview

Popular Posts