இண்டெர்நெட் மூலம் கோப்புகளை பகிர்ந்துகொள்ள உதவும் மெகாஅப்லோடு இணையதளம் வம்பில் மாட்டிக்கொண்டிருப்பது உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.அமெரிக்க நீதிமன்றத்தில் இந்த தளத்திற்கு எதிராக வழக்கு தொடர்ப்பட்டு அதன் உரிமையாளரான டாட்காம் நியூசிலாந்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இணைய சுதந்திரத்தை பறிக்கும் சோபா கருப்பு சட்டத்தை எதிர்த்து மாபெரும் போராட்டம் நடத்தப்பட்டதற்கு அடுத்த நாள் இந்த சம்பவம் நடதிருப்பது தற்செய்லா என்று தெரியவில்லை.
மெகாஅப்லோடு விவகாரம் பற்றி தனி பதிவு எழுத திட்டமிட்டுள்ளேன்.இப்போது மெகாஅப்லோடு போலவே கோப்புகளை பகிர உதவும் புதியதொரு இணையதளமான பைல்பிரண்ட் பற்றி பார்ப்போம்.
கோப்புகளை இமெயில் வாயிலாக அனுப்பி வைக்க முயன்று கொண்டிருந்தது எல்லாம் ஒரு காலம். இப்போதெல்லாம் கோப்புகளை அனுப்ப எங்ககிட்ட வாங்க நாங்க பார்த்துகிறோம் என்று சொல்லும் இணைய சேவைகள் நிறைய இருக்கின்றன.
பைல்பிரண்ட் இந்த பிரிவில் புதிய வரவு.ஆனால் கவனத்தை ஈர்க்ககூடிய வகையில் கூடுதலான அம்சத்தோடு அறிமுகமாகியுள்ளது.
இந்த தளத்தில் கோப்புகளை பகிர்ந்து கொள்ளும் போது அவற்றை பேஸ்புக் டிவிட்டர் போன்ற சமூக வலைப்பின்னல் தொடர்புகளோடும் பகிர்ந்து கொள்ளலாம்.இதன் காரணமாக நீங்கள் பதிவேற்றும் கோப்புகளை உங்கள் நண்பர்களும் பார்க்கலாம்,டவுன்லோடு செய்யலாம்.
பொதுவாக கோப்பு பகிர்வு தளங்களில் குறிப்பிட்ட கோப்பை பகிர்ந்து கொண்டுவிட்டு அதற்கான இணைய முகவரியை அனுப்பி வைத்தால் அந்த முகவரியை கொண்டு உரிய கோப்பை அவர்கள் டவுண்லோடு செய்து கொள்ளலாம்.
பைல் பிரண்ட் தளத்தில் நேரடியாகவே நண்பர்கள் வட்டத்தில் கோப்புகளை பகிர்ந்து கொள்ளலாம்.பைல் பிரண்டில் கோப்புகளை பதிவேற்றுவது மிகவும் சுலமம்.கிளிக் செய்து தளத்திற்குள் ஏற்றிவிடலாம்.அதன் பிறகு பயனாளிகள் தங்களின் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைப்பின்னல் சேவைகளில் அதனை இணைத்துவிடலாம்.
இதன் மூலம் அவர்கள் நட்பு வட்டத்தில் உள்ள அனைவரும் அந்த கோப்பை பெற முடியும்.அவர்களின் நட்பு வட்டத்தில் உள்ளவர்களும் பெற முடியும்.
கோப்புகளை பகிர்டந்து கொள்ளாமல் சேமித்து மட்டும் வைக்கலாம்.அதாவது ஒரு பேக் அப்பாக பயன்ப்டுத்தலாம்.பின்னர் தேவைப்படும் போது அவற்றை தேடி எடுத்து பயன்படுத்தலாம்.
கோப்புகளை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.விரும்பினால் தளத்தின் மற்ற உறுப்பினர்களோடும் பகிர்ந்து கொள்ளலாம்.அதே போல மற்ற உறுப்பினர்கள் பொது பிரிவில் பகிர்ந்து கொள்ளும் கோப்புகளை நாமும் பார்வையிடலாம்.கோப்புகள மூலமே நட்பையும் வளர்த்து கொள்ளலாம்.
மிக எளிமையான வடிவமைப்பு இந்த தளத்தின் சிறப்பம்சம்.இந்த மாத இறுதிக்குள் உறுப்பினராக சேர்ந்தால் ஓராண்டு கட்டணம் கிடையாதாம.
இணையதள முகவரி;http://www.filefriend.com/index.html
0 comments:
Post a Comment