Total Pageviews

Wednesday 22 February 2012

பிளாக்கரில் அதிரடி மாற்றம்..! அதிருப்தியில் பதிவர்கள்.!

 
 
வணக்கம் அன்பு நண்பர்களே..! நாம் அனைவரும் இலவச சேவையான blogger.com இணைந்துகொண்டு பல வலைப்பூக்களை நடத்திக்கொண்டிருக்கிறோம். இது முற்றிலும் இலவச சேவையாக இருப்பதாலும், பயன்படுத்துவதில் எளிமையாக இருப்பதாலும், கருத்துகளை , கட்டுரைகளை, எண்ணங்களை எழுதிக்கொண்டு இருக்கிறோம்.

இதில் தொழில்நுட்பம்(Technical), கல்வி(Education), சினிமா(Cinema), போன்ற பல துறைகளிலும் தனிப்பட்ட முறையில் எழுதி பிரபலமடைந்தவர்கள் பலர்.

இவ்வாறு சிறப்பானதொரு சேவையைத் தந்திருக்கிற google. தற்போது திடீரென பிளாக்கரின் தனது யூ.ஆர்.எல்.ஐ மாற்றியிருக்கிறது. இதற்கு முன்பே பிளாக்ஸ்பாட் blogspot என்ற பெயரில் மாற்றங்கள் வரலாம் என்ற ஒரு கணிப்பு இருந்தபோதிலும், தற்போது யூ.ஆல்.எல் - பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் .com என்பதை அந்த நாடுகளின் துணைப்பெயரில் முடியும் வண்ணம் மாற்றியிருக்கிறது. இந்தியாவில் இருப்பவர்களுக்கு .in என மாறியிருக்கிறது.



ஏன் இந்த அதிரடி மாற்றம்? எதற்காக இந்த மாற்றம்? இதன் பின்னணி என்ன? என்ற எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமலேயே இதைச் செய்திருக்கிறது கூகுள். இணையத்தில் இலவச சேவையை வழங்கும் எந்த ஒரு நிறுவனமும் திடீரென இத்தகைய மாற்றங்களை செய்யலாம். இலவச சேவையால் இறுதியில் ஏமாந்து போகிறவர்கள் பயனர்கள் மட்டுமே...!!

இந்த அதிரடி மாற்றத்தால் கூகிள் ஃபாலோயர் விட்ஜெட் காணாமல் போயிருக்கிறது. இதை எப்படி மாற்றலாம் என்பதை தமிழ்வாசி பிரகாஷ் ஒரு இடுகையே எழுதியிருக்கிறார். அதில் பார்த்து எளிதாக மாற்றிக்கொள்ளலாம்.

இந்த அதிரடி மாற்றத்தில் பாதிப்படைவது நேரடியாக பிளாக்கரின் டொமைனைப் பயன்படுத்தும் வலைப்பூக்கள் மட்டும். தனியாக டொமைன் வாங்கியவர்களுக்கு எந்த ஒரு மாற்றமும் இல்லை என்பது ஆறுதலான விஷயம். உதாரணமாக வந்தேமாதரம்.காம். தமிழ்வாசி.காம், பனித்துளி சங்கர்.காம் இப்படி தனக்கென ஒரு டொமைனை வாங்கிக்கொண்டவர்களுக்கு எந்த ஒரு மாறுதலும் இல்லாமல் இருக்கிறது.




நீங்களும் இதுபோல புதிய டொமைன் வாங்கி உங்கள் வலைப்பூவை ரீடைரக்ட் செய்வதன் மூலம் எதிர்காலத்தில் இத்தகைய பிரச்னைகள் வந்தாலும் உங்கள் வலைப்பூவை காத்துகொள்ள முடியும். எனவே நீங்கள் உடனடியாக உங்கள் பிளாக் ஸ்பாட்டிலிருந்து உங்களது வலைப்பூவை புதிய டொமைன் பெயர் வாங்குங்கள். உங்கள் பிளாக்கை உங்கள் வசப்படுத்துங்கள். இதன்மூலம் வேறேதேனும் பிரச்னை வந்தாலும் உங்களுடைய பிளாக்கை நீங்கள் இழக்காமல் இருக்கலாம். புதிய ஹாஸ்டிங் வசதியைப் பெற்று அதன்மூலம் உங்களுடைய பிளாக்கை நிர்வகிக்கலாம். இது மிகச்சிறந்த பாதுகாப்பானதும் கூட.. முதலில் டொமைன் நேம் வாங்குவதற்கு பிரத்யேகமாக நான் பரிந்துரைப்பது பிக்ராக்.காம் தான்.
இதில் பல வசதிகள் அடங்கியிருக்கிறது. பிளாக்கரிலிருந்து நேரடியாக டொமைன் வாங்குவதற்குரிய வசதி இருந்தாலும், அதற்கு நாம் பன்னாட்டு அளவில் பயன்படுத்தக்கூடிய Credit Card நிச்சயம் நம்மிடம் இருக்க வேண்டும். அப்படி இல்லாதவர்கள் என்ன செய்ய முடியும்? இதற்கு எளிய வழியை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது இந்நிறுவனம். கிரடிட் கார்ட், டெபிட் கார்ட் இல்லாமலேயே நமக்கு எளிதாக டொமைன் நேம் பெற்றுக்கொள்ள வழி வகை செய்கிறது. அதுவும் off line-லும் பெற்றுக்கொள்ளலாம்.

இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்கில் பணத்தைச் செலுத்தினால் ரூபாய் 99 க்கு .in டொமைனும், ரூபாய் 499 க்கு .com டொமைனையும் அளிக்கிறது. எத்தனையோ வீண் விரயச் செலவுகளை செய்கிறோம். எதிர்பாராத செலவுகள் செய்கிறோம். இதற்காக வருடம் ரூபாய் 99, அல்லது 500 ரூபாயோ செலுத்தி புதிய டொமைனில் இயங்கச் செய்யலாம் அல்லவா?
இந்த டொமைன் மாற்றம் மேற்கூறிய சிக்கல்கள் தவிர்க்க உதவும்.
இதைச் செயல்படுத்த முதலில் கீழிருக்கும் விளம்பரத்தை கிளிக் செய்து பிக்ராக் தளத்தில் நுழைந்துகொள்ளுங்கள். இதற்கு முதலில் இந்த இணைப்பில் சென்று உங்கள் டொமைன் பெயரைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் தேர்ந்தெடுத்த டொமைன் பெயர் இருந்தால் available என்றும், இல்லையெனில் நீங்கள் குறிப்பிட்ட பெயரைச் சார்ந்த வகையில் இருக்கும் பெயர்களை தானாகவே காட்டும். அதில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம். அல்லது நீங்களே வேறு ஒரு பெயரை தேர்வு செய்துகொள்ளலாம்.





உலகத்திலே வந்து இருக்கிறது கொஞ்சகாலம்.
ஈசல் மழைக்கு வந்து மடியறாப்பல.
அந்தப் பொழுதை அடிச்சுக் கோச்சுக் கிட்டுப் போக்கனுமா?
அடிச்சு யாரைத் திருத்த முடியும்?
-முள்முடியில் தி.ஜானகிராமன்

0 comments:

Post a Comment

Popular Posts