ஆங்கிலத்தில் w2eஎன சுருக்கமாக அழைக்கபடும் இது ஒரு ஓப்பன் ஆஃபிஸின் விரிவாக்க கருவியாகும் இது தற்போது ஒப்பன்ஆஃபிஸின் சொற்செயலியாக செயல்படுவதற்கான ஒரு சிறந்த கருவியாக விளங்குகின்றது
ஆயினும் இது ஒரு ஆவணத்தை உருமாற்றும் பணியை செய்யாது ஆனால் இது ஒரு கைபேசியில் பயன்படுத்திடகூடிய இபப் ஆவணத்தை கையாளகூடியதாகும் இதனைhttp://extensions.services.openoffice.org/en/download/4618 என்ற தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து நிறுவுக.
பிறகு ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டர் சாளரத்திரையின் மேலே கருவிபட்டியிலிருந்து tools=>Extension Manager=> என்றவாறு கட்டளைகளை செயல்படுத்தியவுடன் தோன்றிடும் Extension Manager என்ற உரையாடல் பெட்டியில் உள்ள இந்த விரிவாக்க கருவியை தெரிவுசெய்து Addஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி இதனை நிறுவிக்கொள்க
உடன் மூன்று பச்சைவண்ண குறும்படத்துடன் கூடிய சிறு கருவிபட்டியொன்று படத்தில் உள்ளவாறு ஓப்பன்ஆஃபிஸ் ரைட்டரின் சாளரத்தில் மேலே வீற்றிருப்பதை காணலாம்
முதல் குறும்படத்தை தெரிவுசெய்து சொடுக்கியவுடன் நடப்பு ஆவணமானது இபப் ஆவணமாக உருவாக்கபட்டு அதே மடிப்பகத்திற்குள் சேமித்து விடும்
இரண்டாவதாக உள்ள நீலவண்ண குறும்படம் தலைப்பு ஆசிரியர் பெயர் போன்றவைகளை சேர்ப்பதற்கும் பதிப்பிக்கவும் பயன்படுகின்றது
மூன்றாவதான சிவப்புவண்ண குறும்படம் ஆவணங்களின் அமைப்பை மாறுதல் செய்ய பயன்படுகின்றது இதனை தற்போது பயன்படுத்திடவேண்டாம்
எச்சரிக்கை இதனால் ஏற்படும் தீங்கிற்கும் இழப்பிற்கும் ஓப்பன் ஆஃபிஸ் பொறுப்பேற்காது நம்முடைய சொந்த பொறுப்பில் வேண்டுமானால் இதனை பயன்படுத்தி கொள்ளலாம்
0 comments:
Post a Comment