மைக்ரோமேக்ஸ் நிறுவனம் முதன் முதலாக ஓர் உயர்நிலை ஸ்மார்ட் போன் ஒன்றை தீபாவளிப் பண்டிகையை ஒட்டி அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ.19,000 என்ற அளவில் இருக்கலாம். இது ஒரு 3ஜி போன். ஏ-ஜிபிஎஸ், புளுடூத், ஸ்டீரியோ சவுண்ட் சிஸ்டம் கொண்ட எப்.எம். ரேடியோ ஆகிய வசதிகளையும் கொண்டிருக்கும். இதில் தரப்பட்டுள்ள எம்பி3 மற்றும் எம்பி4 பிளேயர்கள் பெரும்பாலான ஆடியோ மற்றும் வீடியோ பார்மட்களையும் இயக்கும் திறன் கொண்டதாக அமைக்கப்பட் டுள்ளன. இவற்றுடன் வீடியோ எடிட்டர், பி.டி.எப். ரீடர், டாகுமெண்ட் ரீடர் மற்றும் எடிட்டர் வசதிகள் தரப்படுகின்றன. கூகுள் சர்ச், ஜிமெயில், ஜிடாக், காலண்டர், பிகாஸா ஆகியவை இணைந்து இயங்குகின்றன.
இந்த போனை அசைத்து சில மாற்றங்களை ஏற்படுத்தி கட்டளைகளைப் பிறப்பிக்கலாம். நம் கை அசைவுகளை வைத்தே இதன் மெனுவினை இயக்கலாம். இதற்கென முன்பக்கமாக ஒரு விஜிஏ கேமரா தரப்படுகிறது. பின்புறம் அமையவிருக்கும் கேமரா 5 எம்பி திறனுடன் ஆட்டோ போகஸ் வசதியுடன் இருக்கும். வீடியோவைப் பொறுத்தவரை 720p ஹை டெபனிஷன் வீடியோக்களை உருவாக்கலாம். இதில் ஆண்ட்ராய்ட் 2.3 ஜிஞ்சர் ப்ரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தரப்படுகிறது. இதன் திரை 4 அங்குல அகலத்தில் கெபாசிடிவ் திரையாக 480 x 800 பிக்ஸெல்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. போனை இயக்கும் ப்ராசசர் Nvidia Tegra T20 dual core ஆகும். இதன் செயல் வேகம் 1 கிகா ஹெர்ட்ஸ். இதன் ராம் மெமரி 512 எம்பி. இதில் ஸ்டோரேஜ் நினைவகம் 8 ஜிபி கொள்ளளவு திறனுடன் கூடியதாக உள்ளது. இதனை 32 ஜிபி வரை மைக்ரோ எஸ்.டி. கார்டுடன் உயர்த்திக் கொள்ளலாம். மிக அதிகத் திறன் கொண்ட 1650 mAh பேட்டரி இதில் பயன்படுத்தப்படுகிறது.
ஏற்கனவே மைக்ரோமேக்ஸ் நிறுவனம் Andro A60 மற்றும் A70 ஆகிய போன்களை ஆண்ட்ராய்ட் சிஸ்டத்துடன் அறிமுகப்படுத்திய போது, மக்களிடையே அதிக வரவேற்பு இருந்ததால், தற்போது இந்த ஸ்மார்ட் போனை அறிமுகப் படுத்துகிறது.
------------------ நன்றி -------------------
இந்த பதிவிற்கு ஓட்டு போட்டுவிட்டிர்களா? உங்கள் ஓட்டால் இந்த தகவல் அனைவருக்கும் சென்றடையும் ! ! !
0 comments:
Post a Comment