Total Pageviews

Thursday 8 March 2012

யூடியூப் வீடியோக்களை பார்த்து ரசிக்க புதிய வழிகள்

 
 


புதிய சுவாரஸ்யமான யூடியூப் வீடியோக்களை அறிமுகம் செய்து கொள்ள எத்தனையோ வழிகள் இருக்கின்றன.இப்போது மேலும் ஒரு வழியாக டியூப்லூப் என்னும் சேவை அறிமுகமாகியுள்ளது.
யூடியூப் வீடியோக்களை தெரிந்து கொள்வதற்கான மிகவும் சுவாரஸ்யமான வழியாக இந்த தளத்தை குறிப்பிடலாம். இணக்கமானதாகவும் தோன்றக்கூடிய சேவை.
காரணம் இந்த தளம் பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளப்படும் யூடியூப் வீடியோக்களை திரட்டி தொகுத்து தருகிறது.
பேஸ்புக்கில் தகவல்களை பகிந்து கொள்வதோடு பலரும் யூடியூப் விடியோக்களையும் தங்கள் நண்பர்கள் வட்டத்தில் பகிர்ந்து கொள்கின்றனர். அவற்றை பார்த்து ரசிக்கும் வீடியோக்களை அவர்கள் தங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்வதுண்டு.
இப்படி பேஸ்புக் வலைப்பின்னலில் பகிர்ந்து கொள்ளப்படும் வீடியோக்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் பார்க்க முடிந்தால் எப்படி இருக்கும்?அதை தான் டியூப் லுப் செய்கிறது.ஒரு சமூக நோக்கிலான சோதனை முயற்சி எனும் வர்ணனையோடு இந்த தளம் துவக்கப்பட்டுள்ளது.
பேஸ்புக்கில் பகிரப்படும் புதிய வீடியோக்களை உடனே கண்டெடுத்து பார்வைக்கு வைக்கும் இந்த தளம் அவற்றை பட்டியலாக்கி மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளவும் வழி செய்கிறது.
பேஸ்புக் பயனாளிகள் தங்களின் பேஸ்புக் கணக்கு மூலமும் பதிவு செய்து கொண்டு இந்த சேவையை பயன்படுத்தலாம்.பொதுவாகவும் பயன்படுத்தலாம்.வழக்கம் போல பிரபலமான் வீடியொ,சமீபத்திய வீடியோ,அதிக பார்க்கப்பட்டவை என பல்வேறு தலைப்புகளின் கீழ் வீடியோகள் தொகுக்கப்பட்டுள்ளன.
பலவிதமாக வீடியோக்களை பார்க்கும் வசதியும் இருக்கிறது.வீடியோக்களை தேடும் வசதி தொடர்புடைய வீடியோக்களை காணும் வசதியும் இருக்கின்றன.
இதே போலவே பிளே எம் தளமும் யூடியூப்பில் பகிரப்படும் வீடியோக்களை பார்த்டு ரசிக்க வழி செய்கிறது.இந்த தளத்தில் உறுப்பினர்கள தங்கள் வலைப்பின்னலில் நண்லர்கள் பகிர்ந்து கொள்லும் வீடியோக்களை ஒரே இடத்தில் திரட்டி வைத்து கொண்டு ரசிக்கலாம்.
இவை இரண்டும் பேஸ்புக் வழியே யூடியூப் வீடியோக்களை பார்த்து ரசிக்க உதவுகின்றன என்றால் டிவிட் டிவி(ட்ரென்டிங் டாபிக்ஸ் டிவி) இணையதளம் குறும்பதிவு சேவையான டிவிட்டர் வழியே யுடியூப் வீடியோக்களை பார்க்க வைக்கிறது.
டிவிட்டரில் பலரால் பகிரப்படும் விஷயங்கள் மேலெழும் தலைப்பாக குறிப்பிட்பபடுவதுண்டு அல்லவா?அதாவது டிவிட்டரில் அதிகமானோரால் விவாதிக்கப்டும் விஷயம் என்று பொருள்.
இப்படி டிவிட்டரில் மேலெழும் தலைப்புகளை தேர்வு செய்து அந்த தலைப்பு தொடர்பான வீடியோக்களை இந்த தளம் ஒளிபரப்புகிறது.அதற்கு முன்பாக இணையவாசிகள் தங்களுக்கான நாட்டை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.அதன் பிறகு அந்த நாடு தொடர்பான டிவிட்டரின் மேலெழும் தலைப்புகள் இடம்பெறுகின்றன.
அவற்றில் எந்த தலைப்பு கவர்கிற்தோ அதை கிளிக் செய்து பார்த்து கொள்ள்லாம்.
டிவிட்டரில் பிரபலமாக இருக்கும் விஷ்யங்கள் தொடர்பான வீடியோக்கள் என்பதால் அவை சுடசுடவும் சுவாரஸ்யமாகவும் இருக்க வாய்ப்புள்ளது.டிவி போன்ற மையப்குதியோடு வீடியோக்கள் ஒலிபரப்பாகின்றன.
யூடியூப் வீடியோக்களை ரசிக்க இன்னும் கூட சிறந்த வழிகள் பல இருக்கின்றன.ஆனால் புதிய வீடீயோக்களை ஓய்வு நேரத்தில் பார்த்து கொள்ளலாம் என நினைப்பவர்களுக்கு ஸ்குரல் சேவை பயனுள்ளதாக இருக்கும்.
அடிப்படையில் இந்த தளத்தை வீடியோக்களுக்கான பிக்மார்கிங் சேவை என்று சொல்லலாம்.கன்ணில் படும் வீடியோக்களை இந்த தளத்தில் குறித்து வைத்து கொண்டு பின்னர் நேரம் கிடைக்கும் போது பார்த்து ரசிக்கலாம்.
யூடியூப் மட்டும் அல்லாமல் பிற வீடியோ பகிர்வு தளங்கலில் உள்ள வீடியோக்களையும் கூரித்து வைத்து கொள்ளலாம்.அவரவர் வசதிக்கு ஏற்ப ஐபேடிலோ,ஐபோனிலோ,கம்ப்யூட்டரிலோ எதில் வேண்டுமானாலும் பார்த்து ரசிக்கலாம்.
வீடியோக்களை புகமார்க் முறையிலும் குறித்து கொள்ளலாம்.டிவிட்டர் வழியே பகிர்ந்து கொண்டும் குறித்து கொள்ளலாம்.இமெயில் முலமும் அனுப்பி வைக்கலாம்.
இப்படி பலரும் சேமித்து வைப்பவற்றில் இருந்து அருமையான புதிய வீடியோக்களையும் அடையாளம் கண்டு ரசிக்கலாம்.
புதிய வீடியோக்கள் மற்றும் டிவி நிகழ்ச்சி தொடர்பான நினைவூட்டலையும் பெறும் வசதி இருக்கிறது.
இணையதள முகவரி;http://tubeloop.com/
www.playem.org
http://trendingtopicstv.com/
http://www.squrl.com/

\
 
ஒருவனுக்கு ஒரு மீனைக் கொடுத்துப் பாருங்கள். அன்று ஒருநாள் அவன் தன் பசியைத் தீர்த்துக் கொள்வான். அவனுக்கு மீன் பிடிப்பது எப்படி என்று கற்றுத் தாருங்கள். அவன் நாள் முழுதும் ஹாயாக படகில் உட்கார்ந்துகொண்டு பீர் குடித்துக் கொண்டிருப்பான்.

0 comments:

Post a Comment

Popular Posts