அவ்வளவு பணத்தை கொட்டி வாங்கிவிட்டு பிரமோஷன் விஷயத்தில் சுணக்கம் காட்ட முடியுமா? கோடம்பாக்கத்தின் முக்கிய இயக்குனர்களை அழைத்து அவரவர் நண்பர்களை பற்றி அலச சொன்னது. நிகழ்ச்சிக்கு விஜய்யும் வந்திருந்தார்.
இதில் கலந்து கொண்ட பிரபல இயக்குனர் ஒருவர் இத்தனை நாட்களாக விஜய் நடித்ததெல்லாம் ஒரு நடிப்பே அல்ல. பறந்து வர்றது. நூறு பேரை அடிக்கறதெல்லாம் எப்படி நடிப்பாகும்? இந்த படத்தில்தான் அவரது நடிப்பு திறமையே வெளிப்படுது என்றாராம்.
நிகழ்ச்சி தொகுப்பாளராவது நிலைமையை புரிந்து கொண்டு பேலன்ஸ் பண்ணியிருக்கலாம். அவர் சட்டென்று மைக்கை விஜய் முன்பு நீட்டி, இதுக்கு நீங்க என்ன சொல்றீங்க என்று கேட்க கடும் கோபத்திற்குள்ளானாராம் விஜய்.
சட்டென்று தன் முன் நீட்டிய மைக்கை பிடுங்கி எறிந்துவிட்டு விறுவிறுவென அரங்கத்தை விட்டு நடையை கட்டிவிட்டாராம்.
டைரக்டர் கேட்டதிலும் தப்பில்லை, விஜய் கோபப்பட்டதிலும் தப்பில்லை. அப்ப எதுதான் தப்பு? அதுதான்ங்க புரிய மாட்டேங்குது!
http://famousstills.blogspot.com
http://famousstills.blogspot.com
0 comments:
Post a Comment