தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வே. பிரபாகரனை பிடித்துக் கொடுப்பதை இலங்கை சம்பந்தப்பட்ட நிகழ்ச்சித் திட்டத்தில் மிக முக்கியமான ஒரு விடயமாக அமெரிக்கா கொண்டு இருந்து உள்ளது.
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து 2009 ஆம் ஆண்டு ஜனவரி 09 ஆம் திகதி அனுப்பப்பட்ட இராஜதந்திர ஆவணம் ஒன்றில் இருந்து விக்கிலீக்ஸ் மூலம் இவ்விடயம் வெளிச்சத்துக்கு வந்து உள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து கிளிநொச்சியை இலங்கை இராணுவம் கைப்பற்றிய பிற்பாடு எழுதப்பட்ட ஆவணம் இது.
இலங்கை விடயத்தில் அமெரிக்கா செய்து கொடுக்க வேண்டிய பிரதான கடமைகள் என்ன? என்பது இதில் தெளிவாக எடுத்துக் கூறப்பட்டு உள்ளது.
பிரபாகரன் எங்கே மறைந்து இருக்கின்றார்? என்று பிடித்தல், கைது செய்தல் மற்றும் இலங்கை அல்லது இந்தியாவிடம் ஒப்படைத்தல் ஆகிய நடவடிக்கைகளுக்கு கட்டாயம் உதவுதல் வேண்டும் என்று இதில் முக்கியமாக அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
http://famousstills.blogspot.com
http://famousstills.blogspot.com
0 comments:
Post a Comment