தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே. பிரபாகரன் முதலும் கடைசியுமாக கண்ணீர் வடித்து அழுது இருக்கின்ற சந்தர்ப்பத்தை புத்தகத்தில் எழுதி இருக்கின்றார் இந்தியாவின் பிரபல ஊடகவியலாளர்களில் ஒருவரான எம். ஆர். நாராயன் சுவாமி.
இவர் எழுதி இருக்கின்ற புத்தகத்துக்கு பெயர் Inside an Elusive Mind - Prabhakaran: the first profile of the world's most ruthless leader என்பது.
2003 ஆம் ஆண்டு வெளிவந்தது.
சீலன் அல்லது சார்ஸ் அன்ரனி என்கிற போராளி மரணம் அடைந்தபோது பிரபாகரன் கண்ணீர் வடித்து அழுது இருக்கின்றார் என்று இந்நூலில் ஓரிடத்தில் குறிப்பிட்டு இருக்கின்றார் நாராயன்.
இவர் ஆங்கிலத்தில் எழுதி இருக்கின்ற வரிகளை தமிழில் தருகின்றோம்.
-சீலன் ஓடிக் கொண்டு இருக்கின்றார். பொலிஸ் நிலையம் ஒன்றின் மீது முன்பு நடத்தி இருந்த தாக்குதலில் துப்பாக்கி ரவை ஒன்று முழங்கால் மூட்டில் ஏற்படுத்தி இருந்த காயம் பெரிய வேதனையை கொடுக்கின்றமையை சீலன் உணர்கின்றார். தொடர்ந்து ஓட முடியாமல் இருக்கின்றது.
சுட்டுக் கொன்று விடுங்கள் என்று சக போராளி நண்பனிடம் கேட்கின்றார். சீலனின் இக்கோரிக்கை நண்பனுக்கு அதிர்ச்சித் திகைப்பைக் கொடுக்கின்றது. இன்னும் சில நிமிடங்கள் வரை ஓடினால் சில நிமிடங்களில் கிராமம் ஒன்றை அடைந்து மறைவிடத்தில் ஒளித்து விடலாம் என்று இரக்கின்றான் நண்பன்.
ஆனால் நண்பன் சொன்னதை சீலன் பொருட்படுத்துகின்றார் இல்லை. தயவு செய்து சுட்டு விடுங்கள் என்று கண்டிப்பாக சொல்லி விடுகின்றார். நண்பனுக்கு வேறு வழியோ, நேரமோ இல்லை. நண்பனின் கரங்கள் நடுங்குகின்றன. சீலனின் நெற்றையை குறி பார்த்து சுட்டு விடுகின்றார். ............................
பிரபாகரன் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்த போராளி மாத்திரன் அல்லன் சீலன். பிரபாகரனின் மிக நெருங்கிய நண்பனும்கூட.
சீலனின் மரணத்துக்கு பழி வாங்கத் தீர்மானித்து விடுகின்றார் பிரபாகரன். செல்லக்கிளி என்கிற போராளியிடம் இப்பொறுப்பை ஒப்படைக்கின்றார்.
இப்பழிவாங்கல் தாக்குதலில் இராணுவத்தின் 13 சிப்பாய்கள் கொல்லப்பட்டனர். செல்லக்கிளியும் சாவு அடைந்தார்.
சீலன் என்கிற முன்னணிப் போராளியின் இழப்பை சுயம் தேற்றிக் கொள்ள பிரபாகரனால் முடியவில்லை. பிரபாகரன் உடைந்து போனார். சீலனின் மரணத்தை தாங்க முடியாமல் புலம்பினார்.
பிரபாகரன் கண்ணீர் விட்டு அழுதமையை ஏனையவர்கள் பார்த்த முதலாவதும், கடைசியுமான சந்தர்ப்பம் அதுவேதான்.-
http://famousstills.blogspot.com
http://famousstills.blogspot.com
0 comments:
Post a Comment