Total Pageviews

Thursday, 6 September 2012

எச்சரிக்கை: Win 8 வைரஸ்

எச்சரிக்கை: Win 8 வைரஸ்
விண்டோ - 8 வெளிவர முன்னரே Win 8 Security system என்னும் பெயரில் ஒரு வைரஸை சிலர் உலவ விட்டுள்ளனர் என பிரபல வைரஸ் ஒழிப்பு (ஆன்ரி வைரஸ்) நிறுவனமான MacAfee எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த Win 8 Security system தன்னை ஒரு இலவச வ� ��ரஸ் ஒழிப்பு மென்பொருள் போல இனம் காட்டிக்கொள்கிறது. இதை நீங்கள் உங்கள் கணனிகளில் பதிவேற்றினால் அது உங்களுக்கு சில போலியான எச்சரிக்கைகளை விடுக்கும். அந்த எச்சரிக்கைகளில் சொல்லப்படும் வைரஸ்களை நீக்குவதற்கு உங்களிடம் இருத்து கட்டணம் அறவிடும்.

"The Win 8 Security System is typical rogue, or fake, antivirus software," என்கிறார் நாகநாதன் ஜவாகர் என்னும் கணனி வைரஸ் நிபுணர். அத்துடன் இந்த வைரஸை உங்கள் கணனியி� ��் இருந்து நீக்குவது சிரமம் என்றும் எச்சரிக்கிறார்.

நாகநாதன் ஜவாகரின் பதிவை இந்த இணைப்பில் காணலாம்: http://blogs.mcafee.com/mcafee-labs/win-8-security-system-another-fake-antivirus-malware 

இந்த வைரஸை எப்படி நீக்குவது என்பது பற்றி இந்த இணைப்பில் காணலாம்:
http://www.2-viruses.com/remove-windows-8-security-system

மைக்குறோசொஃப்ர் அறிமுகம் செய்யவிருக்க ும் விண்டோ - 8 இற்கு வைரஸ் ஒழிப்பு மென்பொருள் தேவை இல்லை எனச் சிலர் கொள்கின்றனர். சிலர் இதை ஏற்க மறுக்கின்றனர். நோட்டன் நிறுவனம் தனது மென்பொருள்கள் விண்டோ - 8 இற்கு தயாராகிவிட்டன என்று அறிவித்துள்ளது.

ஒரு பயனுள்ள காணொளி:

0 comments:

Post a Comment

Popular Posts