Total Pageviews

Thursday, 29 March 2012

அழகான ASCII எழுத்துகளை டெர்மினலில் உருவாக்க

|0 comments
 
 
 
நம்முடைய மொபைலில் ascii smsகளை பார்த்து பிறருக்கும் அனுப்பி மகிழ்ந்திருப்போம். வெறும் எழுத்துகளை வைத்துகொண்டு படங்களை உருவாக்குவது மிகவும் கடினமான காரியம்.
குனு/லினக்ஸில் சில டூல்கள் இது போல அழகான ASCII எழுத்துகளையும்,
படங்களையும் உருவாக்க நமக்கு உதவுகிறது.


FIGLET இதனை உபுண்டுவில் நிறுவ


$ sudo apt-get install figlet


என கொடுத்து நிறுவி கொள்ளவும்.


உங்கள் பெயரினை ascii யில் பார்க்க டெர்மினலில்


$ figlet 'hello'


என கொடுத்து பாருங்கள்.


_ _ _
| |__ ___| | | ___
| '_ \ / _ \ | |/ _ \
| | | | __/ | | (_) |
|_| |_|\___|_|_|\___/




எப்புடி.??


அடுத்து சில படங்களை ascii யாக மாற்றுவது என பார்போம்.


இதற்கு பல டூல்கள் இருக்கின்றது. உதாரணத்திற்கு aview, jp2a


jp2a நிறுவ


$ sudo apt-get install jp2a


எதாவது ஒரு இமேஜை மாற்ற( இமேஜ் jpg பார்மட்டில் இருக்க வேண்டும்)


$ jp2a sample.jpg


இப்போது asciiஇல் தெரியும்.


ஜிமெயிலில் முகவரியை நீக்குவது எப்படி?

|0 comments


மின்னஞ்சல் பயன்படுத்துவோர் அனைவரையும் வசியப்படுத்தி வைத்திருப்பது ஜிமெயில். அடிக்கடி தரப்படும் புதிய வசதிகள், அதிக அளவிலான ஸ்டோரேஜ், அனுப்பும் பைல் களின் அதிகப்படியான கொள்ளளவு என அனைத்து பிரிவுகளிலும் வாடிக்கையாளர் களின் விருப்பங்களின் அடிப்படையில் புதிய வசதிகளை வடிவமைத்துத் தருவது இதன் சிறப்பு.


ஒருமுறை மட்டுமே கூடப் பயன்படுத்தும் மின்னஞ்சல் முகவரிகளை ஜிமெயில் தன் நினைவகத்தில் வைத்துக் கொண்டு, அடுத்த முறை அந்த முகவரியின் முதல் சில எழுத்துக்களை டைப் செய்தவுடனேயே, முழு முகவரியினைக் காட்டும்.


இரு வகையான முகவரிகளை ஜிமெயில் நினைவில் கொள்கிறது. முதலில் நாம் இதன் முகவரி ஏட்டில் பதிந்து வைத்திடும் முகவரிகள் -- தனி நபர்கள், நிறுவனங்கள், மையங்கள், வலைத்தளங்கள் போன்றவை. இவை எல்லாம் நமக்கு எப்போதும் தேவை இருக்கும் என நாம் நம்முடைய முகவரி ஏட்டில் பதிந்து வைக்கிறோம்.


மற்றவை எல்லாம் நாம் மின்னஞ்சல் அனுப்பும் முகவரிகள். இவற்றை நாம் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி பின்னர் பயன் படுத்தாமலேயே விட்டுவிடுவோம். ஆனால் ஜிமெயில் இதனை நினைவில் வைத்து, அதற்கான எழுத்துக்களை டைப் செய்த வுடன் நமக்கு நினைவூட்டும்.


பலவழிகளில் சிந்தித்தால் இது நல்லதொரு உதவியாகவே தெரியும். ஆனால் சில வேளைகளில் இது நமக்கு எரிச்சலையும் தரும். எடுத்துக்காட்டாக, முகவரி ஏட்டில் நாம் பதிந்து வைத்து, நாம் அடிக்கடி மின்னஞ்சல் அனுப்பும் ஒருவரின் முகவரி யில் உள்ள முதல் இரு எழுத்துக்களில், இன்னொருவரின் முகவரியும் தொடங்கி இருக்கும்.


இந்த இரண்டாவது நபர் நமக்குத் தேவை இல்லாதவர். என்றோ ஒருநாள் இவருக்கு அஞ்சல் அனுப்பி இருக்கலாம். அப்படி இருக்கையில், முதலாவதாகக் குறிப்பிட்ட நம் நண்பருக்கு அஞ்சல் அனுப்ப முயற்சிக்கையில், இதனையும் சேர்த்து, அல்லது இரண்டாவது நபரின் முகவரியை, ஜிமெயில் காட்டும்.


அவசரத்தில் அதனைத் தேர்ந்தெடுத்து நம் நண்பருக்கு அனுப்ப வேண்டிய அஞ்சலை அனுப்பி விடுவோம். இதனைத் தவிர்க்க, அந்த இரண்டாவது முகவரியை நீக்க எண்ணுவோம். ஆனால், எப்படி நீக்குவது? தெரிந்து கொள்வோமா!


ஜிமெயில் இணைய தளத்தில், மேல் இடது மூலையில் Gmail என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் கீழ் விரி மெனுவில், Contacts என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது சர்ச் (search) கட்டத்தில் நீங்கள் நீக்க விரும்பும் முகவரியை டைப் செய்திடத் தொடங்கவும்.


தேவையற்ற அந்த முகவரி தென்பட்டவுடன், அதனைத் தேர்ந் தெடுக்கவும். இப்போது, அந்த முகவரியை உங்கள் தொடர்பு முகவரி ஏட்டில் பதியக் கூடிய அல்லது திருத்தங்களை மேற்கொள்ளக் கூடிய பக்கம் கிடைக்கும். இங்கு நீங்கள் பெயரினை இணைக்கலாம், மாற்றலாம், முகவரியைத் தரலாம், பிறந்த நாளினைக் குறிக்கலாம், ஏன், போட்டோவினைக் கூட போட்டு வைக்கலாம்.


ஆனால், இங்கு நம் நோக்கம் அது இல்லையே. மொத்தமாக நீக்க அல்லவா முயற்சிக்கிறோம். விண்டோவின் மேலாக உள்ள More மெனுவினைக் கீழாக இழுக்கவும். இங்கு கிடைக்கும் Delete contact என்பதில் கிளிக் செய்திடவும். முகவரி நீக்கப்படும். சில நிமிடங்களுக்குப் பின்னர், முகவரிக்கான எழுத்தினை டைப் செய்தால், முகவரி தரப்பட மாட்டாது.


முகவரியில் பதிந்து வைத்திருப்பதனை நீக்க வேண்டும் எனில், Delete Contact என்பதனைத் தேர்ந்தெடுக்க வேண்டாம். தேவையற்ற அந்த முகவரியில் பெயர் உள்ள கட்டத்தினுள் கிளிக் செய்திடவும். அடுத்து CTRLA கிளிக் செய்திடவும். முகவரி முழுவதும் தேர்ந்தெடுக்கப்படும். இப்போது Delete அழுத்தவும். முகவரி நீக்கப்படும்.



Read more: http://therinjikko.blogspot.com/2012/03/blog-post_27.html#ixzz1qNyz9Uez

Monday, 26 March 2012

போட்டோஷாப் புதிய பதிப்பு CS6 Beta டவுன்லோட் செய்ய

|0 comments
 
 
cs6

No 1 போட்டோ எடிட்டிங் சாப்ட்வேரான போட்டோஷாப் தற்போது அதன் புதிய பதிப்பான CS6 Beta வை வெளியிட்டுள்ளது. கிழே உள்ள லிங்கில் டவுன்லோட் செய்து கொள்ளவும்.


Photoshop CS6 - Beta

cs6


$999 மதிப்புள்ள போட்டோஷாப் CS5 இலவசமாக டவுன்லோட் செய்ய

Adobe Photoshop CS5 - Full Version இலவசமாக


Saturday, 24 March 2012

Far cry ஒரு அட்டகாசமான ஆக்‌ஷன் கேம்

|0 comments
 
 



ஆக்‌ஷன் வீடியோ கேம் பிரியர்களை மிகவும் கவர்ந்த விளையாட்டு என்றால் அது Far Cry தான். System requirements மிகவும் குறைவாக உள்ள அதேவேளை அதி உச்ச கிராபிக்ஸ் நுட்பத்தையும் கொண்டது இந்த கேம்.

ஜாக் என பெயர் கொண்ட மாலுமி ஒருவன் ஊடகத்தை சேர்ந்த பெண் ஒருவரை தென் பசுபிக் இல் அமைந்துள்ள Micronesia என்னும் தீவுக்கு அழைத்து செல்கிறான். அந்த தீவின் அருகே தரித்து நிற்கும்போது அங்குள்ள ஆயுதக்குழுவினரால் அவனது படகு தாக்கி அழிக்கப்படுகிறது. ஊடகத்தை சேர்ந்த பெண் அக்குழுவினரால் கைது செய்யப்படுகிறாள். அதில் இருந்து தப்பும் ஜாக், அந்த தீவினுள் நுழைந்து அந்த பெண்ணை தேட ஆரம்பிக்கிறான்.
அதன் பின்னர் அந்த ஆயுதக்குழுவினருக்கும் ஜாக்கிற்கும் இடையில் நடக்கும் மோதலே இந்த Game இன் கதை.
2004 ஆம் ஆண்டு வெளியாகிய இந்த Game இல் வரும் கிராபிக்ஸ் காட்சிகள் எல்லாமே மிகச்சிறந்தவை. பசுபிக் பிரதேசத்தில் உள்ள காடுகள் மூடிய தீவின் இயற்கை காட்சிகள், வித்தியாசமான குரங்குகள், காடுகளுக்குள் இடம்பெறும் மோதல்கள், படகு மோதல்கள், திடீர் திடீர் என பாய்ந்துவரும் சிறிய குரங்குகள், கைகளில் பாரிய ஆயுதங்களை தாங்கிய குரங்கு போன்ற விகாரமடைந்த மனிதர்கள் என ஏனைய ஆக்‌ஷன் Game களில் இருந்து இது முற்றிலும் மாறுபட்டிருந்தது.

இந்த Game 2004 ஆம் ஆண்டு Crytek நிறுவனத்தினரால் வடிவமைக்கப்பட்டு Ubisoft இனால் வெளியிடப்பட்டிருந்தது. வெளியிட்டு 4 மாதங்களுக்குள் 730,000 பிரதிகளை விற்பனை செய்து சாதனை படைத்திருந்தது. இந்த Game இன் கதை 2008 ஆம் ஆண்டு திரைப்படமாக எடுக்கப்பட்டிருந்தது. ஆனால் எதிர்பார்த்தளவு ஓடவில்லை.

அதன் பின்னர் இதன் இரண்டாம் பாகம் Far Cry 2 2008 ஆம் ஆண்டு Ubisoft நிறுவனத்தினரால் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டிருந்தது. ஆனால் முன்னைய பாகத்தை போல் இரண்டாம் பாகம் சிறப்பாக அமையவில்லை. இருந்த போதிலும் 2009 ஆண்டு முடிவின் போது 2.9 மில்லியன் பிரதிகள் விற்பனையாகியிருந்தது.

இதன் அடுத்த பாகமான Far Cry 3 இந்த வருடத்தில் வெளியாகியுள்ளது. ஏற்கனவே வெளியாகியிருந்த ட்ரெயிலரும், ஸ்கிரீன் சாட் களும் எதிர்பார்ப்பை எகிற வைத்திருந்தது. இன்னும் எங்கள் நாட்டிற்கு இதன் பிரதிகள் விற்பனைக்கு வரவில்லை. ஏற்கனவே 2011 ஆம் ஆண்டு வெளியாகியிருந்த டெமோ வின் படி இதன் கதை, தீவு ஒன்றிற்கு சுற்றுலா வரும் ஜேசன் மற்றும் அவரது காதலியும் உள்ளூர் மோதலால் பிரிக்கப்படுகிறார்கள். இவ்வாறு பிரிக்கப்பட்ட ஜேசன் தன் காதலியை தேடிச்செல்கிறார். இங்கு Players ஜேசன் இன் காதாபாத்திரத்தை ஏற்று விளையாடுகிறார்கள்..

எங்கள் நாட்டிற்கு இன்னமும் இதன் பிரதிகள் வரவில்லை. டொரன்ரில் கூட பெற்றுக்கொள்ளமுடியவில்லை.

Far Cry தளம் செல்ல Far Cry
பேஸ்புக் பக்கம் Far Cry

கூகுள் தேடுபொறியின் அடுத்த பரிணாமம்

|0 comments



எத்தனை தேடுபொறிகள் வந்தாலும் முதலிடத்தை எப்போதும் தக்கவைத்துக் கொள்வது கூகுள் தளம். அதற்கு காரணம் தனது தேடல் முடிவுகளில் புதுப்புது நுட்பங்களை அறிமுகப்படுத்துவது தான். தேடல் முடிவுகளில் பதிவுகளை தனித்துக் காட்டும் Rich Snippets மூலம் அடுத்த பரிணாமத்தை எட்டியுள்ளது கூகுள் தளம்.
Snippets:


நாம் தேடுபொறியில் ஏதாவது ஒன்றை தேடும் போது அது தொடர்புடைய முடிவுகள் வரும் அல்லவா? அப்படி வரும் பதிவின் கீழே உள்ள விளக்கம்(Description) தான் Snippets எனப்படும்.
Rich Snippets:

Recipes Snippet

கடந்த 2009-ஆம் ஆண்டு தேடல் முடிவுகளில் Rich Snippets என்னும் முறையைக் கொண்டு வந்தது கூகுள். பதிவின் உள்ளடக்கத்தை தேடுபவர்களுக்கு முன்னிலைப்படுத்திக் காட்டுவது தான் Rich Snippets ஆகும். மேலே உள்ள படத்தில் உள்ளது "சிக்கன் பிரியாணி" பற்றிய கூகுள் தேடலில் வந்த சமையல்(???) முடிவாகும். அதில் "பிரியாணியின் படம், சமையல் செய்ய ஆகும் நேரம், உணவில் உள்ள கலோரி" ஆகியவற்றை முன்னிலைப்படுத்திக் காட்டுகிறது. இது Recipes Snippet ஆகும்.

எப்படி சமைப்பது? கூகிளில் தேடலாம்! என்ற பதிவில் பார்த்ததும் இந்த Recipes Rich Snippets முறை தான்.
Rich Snippets வகைகள்:

Rich Snippets முறையில் கீழ்வரும் பதிவுகளை கூகுள் எடுத்துக் கொள்கிறது.
  • Reviews
  • People
  • Products
  • Businesses and organizations
  • Recipes
  • Events
  • Music
  • Video
  • Application

நம்முடைய பதிவுகள் இது போன்ற Rich Snippets முறையில் தானாக வராது. அதற்காக சில நிரல்களை சேர்க்க வேண்டும். இதற்கென்று சில நிரல் முறைகள் உள்ளன. அவைகள்,

இதனால் என்ன பயன்?

கூகிளில் நமது முடிவுகள் வரும் போது இது போல் தனித்து தெரிந்தால் அதிக நபர்கள் அதனை க்ளிக் செய்வார்கள். இதனால் தேடுபொறிகள் மூலம் அதிக வாசகர்கள் கிடைப்பார்கள்.

இந்த முறை Google.com முகவரியில் மட்டுமே வரும். மற்ற கூகுள் முகவரிகளில் வராது.

இறைவன் நாடினால், இந்த Rich Snippets-ஐ நமது பதிவில் எப்படி சேர்ப்பது? என்பது பற்றி அடுத்தடுத்து பார்ப்போம்.

அதுவரை சிக்கன் பிரியாணி செய்வது எப்படி? என்று தெரிந்துக் கொண்டு உங்கள் நண்பர்களையும், உறவினர்களையும் சமைத்து அசத்துங்கள்!!!

தேவையில்லாத மின்னஞ்சல்களை தடை செய்வதற்கு

|0 comments
 
 
email ,lockerஇணையத்தில் உலாவுகையில் மின்னஞ்சல் முகவரியை பகிர்ந்து கொள்ளும் விடயத்தில் கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
 
இதன் மூலம் ஸ்பேம் என்று சொல்லப்படும் தேவையில்லாத மின்னஞ்சல்களை தவிர்க்கலாம்.
 
ஆனால் இணையத்தில் உலாவும் போது ஏதாவது ஒரு காரணத்திற்காக மின்னஞ்சல் முகவரியை சம்ர்பிப்பது தவிர்க்க இயலாததாக இருக்கிறது.
 
இது போன்ற நேரங்களில் தயக்கமில்லாமல் பயன்படுத்துவதற்காக என்றே தற்காலிக மின்னஞ்சல் சேவைகளும் உருவாக்கப்பட்டுள்ளன.
 
டட்மெயில், நாட் ஷேரிங் மை இன்போ என்று பல இணையத்தளங்கள் வேண்டாத மின்னஞ்சல்களில் இருந்தும், விளம்பர மின்னஞ்சல்களில் இருந்தும் பாதுகாப்பு அளிக்கின்றன.
 
இந்த வரிசையில் பவுன்சர் என்ற தளம் புதிதாக அறிமுகமாகி உள்ளது. மின்னஞ்சல்களை தடை செய்வதில் இது கொஞ்சம் புதுமையான வழியை பின்பற்றுகிற‌து.
 
பவுன்சர் புதிதாக ஒரு மாற்று மின்னஞ்சலை உருவாக்கித் தாராமல் உங்கள் மின்னஞ்சல் முகவரியையே மாற்றித் தருகிறது. அதாவது பிட்.லே போன்ற மின்னஞ்சல் சுருக்க சேவையை போல இதுவும் மின்னஞ்சல் முகவ‌ரியை சுருக்கி தருகிற‌து.
 
இதற்காக இந்த தளத்தில் மின்னஞ்சல் முகவ‌ரியை சமர்பித்தவுடன் அதனை அழகாக சுருக்கி தருகிறது. தேவைப்பட்டால் இந்த முகவரியை விருப்பத்திற்கு ஏற்ப மாற்றிக் கொள்ளலாம்.
 
அதன் பிறகு எந்த தளத்தில் மின்னஞ்சல் முகவரியை சம‌ர்பிக்க வேண்டியிருந்தாலும் இந்த சுருக்கமான முகவரியை அளித்தால் போதும்.
 
பதில் மின்னஞ்சல்கள் பவுன்சர் முகவரி வழியே உங்கள் இன்பாக்சை வந்தடைந்து விடும். ஆனால் உங்கள் உண்மையான மின்னஞ்சல் முகவரி யாருக்கும் தெரியாது. பாதுகாப்பாகவே இருக்கும்.
 
இந்த தளம் சுருக்கப்பட்ட மின்னஞ்சல் முகவ‌ரியை அதிலிருந்தே டிவிட்டர் அல்லது பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளலாம். பவுன்சர் முகவரியை எப்போது வேண்டுமானாலும் ரத்து செய்து விடலாம்.அதே போல எத்தனை முகவரிகளை வேண்டுமானாலும் உருவாக்கி கொள்ளலாம்.
 

Friday, 23 March 2012

Chrome outshines Internet Explorer

|0 comments
 
Google Inc's Chrome web browser overtook Microsoft Corp's Internet Explorer last sunday to become market leader globally for the first time, according to web analytics firm StatCounter report which I obtained today.While it is only one day, this is a milestone. The firm report shows that on weekends, when people are free to choose what browser to use, many of them are selecting Chrome in preference to IE. StatCounter statistics are based on aggregate data from more than three million websites with a sample of more than 15 billion pageviews per month.
 
On last sunday, Chrome was used for 32.7% of all browsing, while IE had a 32.5% share. When people returned to their offices the next day - on Monday - the IE share rose to 35% and Chrome 's slipped to 30%.Whether Chrome can take the lead in the browser wars in the long term remains to be seen, however the trend towards Chrome usage on weekends is undeniable.On a monthly basis, Chrome 's market share has surged to 31% so far in March from 17% a year ago, while IE has slipped to 35% from 45% a year earlier.The market share of Firefox, which is popular in Europe, is globally around 25%.Apple Inc's Safari is a distant No 4 with a 7% share of all browsing, with Opera at No 5 on 2%.

மிக எளிதாக தமிழில் டைப் செய்வது எப்படி?

|0 comments

இணையத்தில் இருக்கும் பல நண்பர்கள் இன்னமும் எப்படி தமிழில் தட்டச்சு செய்வது என்று கேட்கிறார்கள். தமிழ் மொழி பயன்படுத்துதலில் புதியவர்களுக்கு மிக எளிதாக தட்டச்சு செய்யும் வசதி தருவது Google Tamil Transliteration. இதனை எப்படி பயன்படுத்துவது என்று இந்தப் பதிவின் மூலம் அறியலாம்.

1.முதலில் இங்கே சென்று தட்டச்சு மென்பொருளை தரவிறக்கம் செய்யவும். இதில் தமிழ் மொழியை தெரிவு செய்த பின் 32Bit/64Bit என்பதை தெரிவு செய்து தரவிறக்கம் செய்து கொள்ளவும். எது என்று தெரியாதவர்கள் 32Bit தெரிவு செய்யவும்.

2.Windows 7/Vista/XP பயன்படுத்தும் அன்பர்கள் இதை பயன்படுத்த இயலும்.

3.இதை இப்போது இன்ஸ்டால் செய்யவும்.

4.இன்ஸ்டால் செய்து முடித்தவுடன் Desktop -Task Bar இல் Right Click செய்து Toolbars -> Language bar என்பதை தெரிவு செய்யவும்.



இதில் இந்த வசதி வராத நண்பர்கள் கீழே உள்ளதை பின் பற்றவும்.

5. Windows 7/Vista பயனாளிகள்
  • Control Panel ->Date, Time, Language, and Regional Options--> Regional and Language Options -> Keyboard and Languages என்பதற்கு செல்லவும்.
  • Change keyboards... என்பதை கிளிக் செய்து Text services and input languages என்பதை ஓபன் செய்யவும்.
  • Language Bar க்கு வரவும்.
  • Language Bar -ல் உள்ள Docked in the taskbar என்ற ரேடியோ பட்டனை Enable செய்ய வேண்டும்.
  • இப்போது Apply கொடுக்கவும். இப்போது நீங்கள் மேலே கூறி உள்ள Step-4 ஐ செய்யவும்.
6.Windows XP பயனாளிகள்
  • Control Panel -> Regional and Language Options -> Languages tab -> Text services and input languages (Details) -> Advanced Tab என்பதற்கு செல்லவும்.
  • முதலில் System configuration, என்பதில் Turn off advanced text services என்பது கிளிக் செய்யப்படாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ளவும்.

  • Regional and Language Options -> Languages tab -> Text services and input languages (Details) -> Advanced Tab என்பதற்கு மீண்டும் செல்லவும்.
  • இப்போது Settings>Language Bar ஐ கிளிக் செய்து அதில் Details >Language barஎன்பதை தெரிவு செய்து வருவதில் Show the Language bar on the desktop என்பதை கிளிக் செய்து விடவும்.
  • இப்போது எல்லாவற்றையும் Apply கொடுத்து விடவும்.

7. இப்போது உங்கள் Tool Bar இல் கீழே உள்ளது போல ஒன்று வந்து சேர்ந்து விடும். இதில் தட்டச்சு செய்யும் போது கிளிக் செய்தால் Tamil என்று வரும்.


8.இது உங்களுக்கு Desktop இல் இவ்வாறு தோற்றம் அளிக்கும்.


9. இப்போது நீங்கள் எளிதாக தட்டச்சு செய்ய முடியும். உதாரணம்:

Amma - அம்மா,
karpom - கற்போம்


இதில் மாற்று வார்த்தைகள் அடுத்தடுத்து வருவதை கவனிக்கவும். இதை Key Board-இல் உள்ள Arrow பட்டன்களை பயன்படுத்தி தெரிவு செய்ய முடியும்.

10.இதில் சரியாக தட்டச்சு செய்தும் உங்களுக்கு சில எழுத்துகள் வரவில்லை என்றால் Ctrl+K என்பதை கொடுத்து குறிப்பிட்ட எழுத்தை இடைச் செருகலாக சேர்க்கலாம். ‌

11. இதில் இருந்து உடனடியாக ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய CTRL+G கொடுக்கவும்.
 

Wednesday, 21 March 2012

Label and Star: ஜிமெயிலின் புதிய வசதி

|0 comments
 
 
உலகம் முழுவதும் பெரும்பாலான நபர்களால் பயன்படுத்தப்படும் மின்னஞ்சல் ஜிமெயில் ஆகும்.
 
எனவே ஜிமெயில் தனது பயனாளர்களுக்கு புதுப்புது வசதிகளை அறிமுகப்படுத்திக் கொண்டே உள்ளது. தற்போது ஜிமெயிலில் ஏதாவது ஒரு மின்னஞ்சலை அனுப்புவதற்கு முன் அந்த மின்னஞ்சலுக்கு label மற்றும் star பொருத்தி கொள்ளலாம்.
 
இந்த புதிய வசதியினால் எத்தனை நாள் கழித்து நீங்கள் மின்னஞ்சலை பார்த்தாலும் எளிதாக அடையாளம் கண்டு கொள்ளலாம்.
 
இதற்கு முதலில் ஜிமெயிலின் Compose பகுதிக்கு செல்லுங்கள்.
 
அங்கு உங்களுடைய செய்தியை டைப் செய்து விட்டு அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரிகளை கொடுத்து விடவும்.
 
அங்கு labels என்ற புதிய பட்டன் ஒன்று இருக்கும், அதில் உங்களுக்கு விருப்பமான label தெரிவு செய்து கொள்ளுங்கள் அல்லது புதிதாகவும் label உருவாக்கில் கொண்டு தெரிவு செய்து கொள்ளுங்கள்.
 
அதன் பின்னர் Send பட்டனை அழுத்தி உங்கள் மின்னஞ்சலை அனுப்பி விடுங்கள்.
 
இனி அந்த மின்னஞ்சலுக்கு பதில் வந்தால் குறிப்பிட்ட லேபிளில் பார்த்தவுடன் சுலபமாக தெரிந்து கொள்ளலாம்.
 
சிறிய வசதி என்றாலும் ஒரே நாளில் நூற்றுக்கும் மேலான மின்னஞ்சல்களை Receive செய்பவர்களுக்கு இந்த வசதி மிக மிக பயனுள்ள வசதி.
 
 

Tuesday, 20 March 2012

Internet Explorer 10 will bring Windows 8 into the enterprise.

|0 comments
 
 
 
Over the weekend, I spent some ample time playing around with Windows 8 developers version and overall I was impressed. There is no doubt in my mind now that Microsoft is sincerely maintaining loyalty to desktop for Internet Explorer.Recently,there were reports claiming that Microsoft is shaking up Internet Explorer 10 for the new Metro tablets. If unaware, Metro is an adaptation of the tile-based user interface Microsoft developed for its Windows 7 Phone, which is designed for use on tablet devices running the forthcoming Windows 8 operating system.

Microsoft has considerably improved the browsing engine for IE10 by including a fully hardware accelerated browsing engine and plug-in free HTML5 support whose features rivals like Chrome,Firefox and Opera have already announced.One Metro IE10 highlight was, instead of the iOS style browser arrow button to return to a previously visited page, IE10 will offer a "side swipe". Similar arrow based browser control features are available on the desktop version of Microsoft's browser.While going through it,
It is clear that Windows 8 Metro could lead the roll-in of Windows 8 desktop into businesses. Interestingly, IE10 on Windows 8 across desktops and Metro devices will also allow users to invoke apps alongside the browser.Corporations, investment banks and analysts had pushed for the introduction of the iPad as a real business tool over the past year but from my evaluation most corporations have only ever implemented half-hearted solutions for iOS. I has seen almost every company allow some use of the iOS device. iPad may be raiding the enterprise, but I think Widows 8 Metro and application compatibility will be a nudge for organizations to implement Windows 8 on the desktop

Monday, 19 March 2012

அதி வேகத்துடன் Download செய்ய - IDMஐ வேகமாக்குவோம்

|0 comments
 
 

இன்று உங்களுடன் பகிரவிருப்பது IDMஐ வேகமாக்ககூடிய வழிமுறை ஒன்றை பற்றியே. இதற்கு பயன்படுத்த போவது IDM Optimizerஎனும் சிறிய மென்பொருள் ஒன்றாகும். இதன் மூலம் Registry Entries சில மாற்றியமைக்கப்படுகின்றது. இதன் மூலம் IDM இன் வேகம் அதிகரிக்கப்படுகின்றது. இதனால் குறைவான நேரத்தில் அதிகமான கோப்புகளை களை அல்லது Data களை தரவிறக்கம் செய்து கொள்ளமுடியும்.

IDM இனை மேலும் வேகமாக்க முடியுமா (எனும் வாசகர்களின் கேள்வி)? ஆம், நம்Internet Connection Speed மற்றும் Max Number Of Connection ஆகியவற்றை அதிகரிப்பதனால் இதனை வேகமாக்கிக் கொள்ள முடியம். இதனை செயற்படுத்துவது எவ்வாறு என்பதை பார்ப்போம்.
முதலில் IDM Optimizer ரை தரப்பட்டுள்ள தரவிறக்க சுட்டியை கிளிக் செய்து தரவிறக்கி கொள்ளுங்கள்.

பின் IDM Optimizer நிறுவுவதற்கு முன் IDMஇனை Exit செய்யுங்கள். (System Trayஇல் உள்ள IDMஇல் Right Click கிளிக் செய்து Exit செய்து கொள்ளலாம்.)

பின்னர் Download செய்த IDM Optimize.exe D/Click செய்யுங்கள். கீழ் காட்டப்பட்டுள்ளதை போன்று தோன்றும்.


அதில் Maximize Now பொத்தானை அழுத்தி பின் OK பொத்தானை அழுத்துங்கள்.


மேலும் அதில் Restore Default பொத்தான் காணப்படும். Maximize Now பொத்தானை கிளிக் செய்து மாற்றிய Registry Entries களை மீண்டும் பழைய நிலைக்கு மாற்ற வேண்டுமாயின் Restore Default பொத்தானை கிளிக் செய்யலாம்.

IDM Optimizer யை நிறுவி Download செய்து பாருங்கள்.

MS Wordக்கு பதிலாக மாற்று மென்பொருள் DevVicky Word 2010

|0 comments
 
 

MS Word அனைவரும் பயன்படுத்தும் ஒன்று.இதற்கு மாற்றாக MS Word வசதிகள் கொண்ட இலவச மென்பொருள் DevVicky Word 2010.இதன் வசதிகளை பார்ப்போம்.



இந்த மென்பொருளின் சிறப்பம்சம் MS Word போலவே அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளது.மேலும் இதில் அனைத்து doc,docx கோப்புகளையும் திறந்து பயன்படுத்தலாம். ஒவ்வொரு doc கோப்பும் தனிதனி windowக்கு பதிலாக Tab வசதியை கொண்டுள்ளது.மேலே படத்தில் பார்க்க.


மேலும் word கோப்புகளை Pdf ஆக மாற்றும் வசதியும் உள்ள.இதன் அளவு 7.13 MB மட்டுமே.மேலும் இதை Windows 7 இல் பயன்படுத்தலாம். ஆனால் MS Word மிக அதிகமாக பயன்படுத்துபவர்களுக்கு இதனை பயன்படுத்த சிரமமாக இருக்கும்.
மற்றபடி doc கோப்புகளை படிக்க மற்றும் சிறிய பயன்பாடுகளுக்கு பயன்படுத்துபவர்கள் இதை பயன்படுத்தலாம்.

இந்த மென்பொருளை Download செய்ய

Popular Posts