வேர்ட் டெக்ஸ்ட்டில் அடுத்தவர் கவனம் ஈர்க்க அல்லது முக்கிய விஷயங்களைக் காட்டிட புல்லட் அமைப்பது வழக்கம். அல்லது எண்களை அமைப்பது பழக்கம். புல்லட் பட்டன்கள் பலவகைப்படும். அவற்றில் எது உங்களுக்கு பிடித்திருக்கிறதோ அதனைத் தேர்ந்தெடுத்து அமைக்க வேர்ட் உங்களுக்கு வழி தருகிறது. இதற்குப் பதிலாக நீங்கள் விரும்பும் டெக்ஸ்ட்டினை புல்லட் பாய்ண்ட்டிற்குப் பதிலாக அமைக்கலாம். இதற்கு ஏற்கனவே மாறா நிலையில் உள்ள புல்லட் பாய்ண்ட்களை மாற்றி அமைத்திட வேண்டும். இதற்குக் கீழ்க்கண்டபடி செட் செய்திடவும். முதலில் வேர்ட் தொகுப்பினைத் திறந்து ஏதேனும் ஒரு டாகுமென்டைத் திறக்கவும். இனி பார்மட் மெனு செல்லவும். அதில் உள்ள பிரிவுகளில் புல்லட்ஸ் அண்ட் நம்பரிங் என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு "Bullets and Numbering" என்ற தலைப்பில் சிறிய டயலாக் பாக்ஸ் ஒன்று திறக்கப்படும்.
இங்கு நீங்கள் பயன்படுத்தாத ஏதாவது ஒரு வகை நம்பர் பார்மட்டில் கிளிக் செய்திடவும். அதன் பின் Customize என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். நீங்கள் கிளிக் செய்து தேர்ந்தெடுத்த நம்பர் பார்மட் பாக்ஸில் உங்களுக்குப் பிடித்த சொல் ஒன்றை டைப் செய்திடவும். Internet, College, Friend என எதனை வேண்டுமென்றாலும் டைப் செய்திடலாம். இதில் உங்களுக்குப் பிடித்த எழுத்து வகையினையும் பயன்படுத்தலாம். இதில் 30 கேரக்டர்களை என்டர் செய்திடலாம். அதன்பின் ஓகே செய்து வெளியேறினால் பின் டெக்ஸ்ட் அமைக்கும்போது அதில் புல்லட்டுக்குப் பதிலாக இந்த சொல்லை புல்லட் போல பயன்படுத்தலாம்.
0 comments:
Post a Comment