இணையத்தில் நுழைந்து தளங்களைக் காண்கையில், நம் அனுமதி பெறாமல், ஸ்பைவேர்கள் எனப்படும் வேவு பார்க்கும் நிரல்கள் கம்ப்யூட்டரில் வந்தமர்ந்து கொள்கின்றன. கம்ப்யூட்டரில் உள்ளீடு செய்யப்படும் தகவல்களை, ஸ்பைவேர் தயாரித்து அனுப்பியவர்களுக்கு அனுப்புகின்றன. மைக்ரோசாப்ட் அமைத்திடும் மலிசியஸ் ரிமூவல் டூல் மற்றும் பயர்வால்கள் இவற்றை ஓரளவு தான் தடுக்க முடிகிறது. மற்ற நிறுவனங்கள் தரும், ஆண்ட்டி வைரஸ் மற்றும் ஸ்பைவேர் நீக்கிடும் சாதனங்களும் முழுமையாக இவற்றின் முன் செயல்பட முடிவதில்லை. இதற்குக் காரணம் இத்தகைய பைல்களை தனிமைப்படுத்தி அறிய முடிவதில்லை என்பதுதான். இந்நிலையில் சில இணைய தளங்கள் இவற்றை நீக்கும் சேவையை நமக்குத் தருகின்றன. இவற்றைப் பயன்படுத்திப் பார்ப்பது நமக்கு எளிது தான். ஏனென்றால், இவற்றை டவுண்லோட் செய்து, பின்னர் இன்ஸ்டால் செய்து இயக்க வேண்டிய தில்லை. மேலும் ஆன்லைனில் இயங்கும் இந்த புரோகிராம்கள், தங்களுடைய சர்வர்கள் மூலமாக அவ்வப்போது தொடர்ந்து அப்டேட் செய்யப் படுகின்றன. இவற்றின் செயல்வேகமும் மற்றவற்றைக் காட்டிலும் அதிகம். இவ்வகையில் செயல்படும் சிறந்த ஆன்லைன் ஸ்கேனர் மற்றும் ஸ்பைவேர் நீக்கும் சாதனங்கள் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.
1. எப்--செக்யூர் ஆன்லைன் ஸ்கேனர் (F-Secure Online Scanner): இந்த ஸ்கேனர் மூன்று வகையான செயல்முறைகளுடன், நமக்கு விருப்பமானதைத் தேர்ந்தெடுக்கும் வகையில் தரப்படுகிறது. அவை quick scan, full scan and my scan. இதன் உதவி பெற, உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள பிரவுசரில் ஜாவா ஸ்கிரிப்ட் இயக்கப்பட்டிருக்க வேண்டும். நீங்கள் அட்மினிஸ்ட் ரேட்டராகக் கம்ப்யூட்டரில் லாக் இன் செய்திருக்க வேண்டும். ஏனென்றால், இதன் மூலம் ஸ்கேனிங் மற்றும் ஸ்பைவேர் நீக்குவதற்கு சில பைல்களை உங்கள் கம்ப்யூட்டருக்கு டவுண்லோட் செய்திட, இந்த தளம் உங்கள் கம்ப்யூட்டரின் அட்மினிஸ்ட் ரேட்டர் அனுமதியினைக் கேட்கும். கம்ப்யூட்டர் முழுவதும் ஸ்கேன் செய்யப்பட்டு, வைரஸ் மற்றும் ஸ்பைவேர் புரோகிராம்கள் அனைத்தும் நீக்கப்படும். ஸ்கேன் செய்திட நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி: http://www.f-secure.com/en_ EMEA-Labs/security-threats/tools/online-scanner
2. பிட் டிபண்டர் ஆன்லைன் ஸ்கேனர்/ குவிக் ஸ்கேன் (Bit defender Online Scanner/Quick Scan): பிட் டிபன்டர் ஆண்ட்டி வைரஸ் சாப்ட்வேர் தொகுப்பில் இயங்கும் அதே தொழில் நுட்பம் தான், இதிலும் இயங்குகிறது. வைரஸ் மற்றும் ஸ்பைவேர் தொகுப்புகளை நீக்குவதில், மிக வேகமாகச் செயல்படும் தன்மை கொண்டது. விண்டோஸ் மற்றும் மேக் இயக்க கம்ப்யூட்டர்களில் செயல் படுகிறது. இத்தளத்தில் நீங்கள் ஸ்கேன் செய்திடச் செல்ல வேண்டிய இணைய முகவரி: http://www.bitdefender.com/scanner/online/free.html
3. சைமாண்டெக் செக்யூரிட்டி செக் (Symantec Security Check): சோதனை செய்யப்படும் கம்ப்யூட்டர், இணையம் வழி வரும் வைரஸ் மற்றும் ஸ்பைவேர் புரோகிராம்களுக்கு வழி விடும் வகையிலான பிழைகளுடன் உள்ளதா என இந்த தளம் சோதனை செய்கிறது. கம்ப்யூட்டருக்குள்ளாகவே இருக்கக் கூடிய ஸ்பைவேர்களின் பயமுறுத்தல்களையும் சோதனை செய்கிறது. இதற்கான தள முகவரி: http://security.symantec.com/sscv6 /WelcomePage.asp
4.ஈசெட் ஆன்லைன் ஸ்கேனர் (ESET Online Scanner): கம்ப்யூட்டர் பாது காப்பில் பயன்படுத்தப்படுகிற Threat Sense இஞ்சின் என்ற தொழில் நுட்பத்தினை இது பயன்படுத்துகிறது. பல நிலைகளில் அடுத்தடுத்து ஸ்கேன் செய்து பாதுகாப்பு அழிக்கும் தொழில் நுட்பம் இது. ஸ்பைவேர் மட்டுமின்றி, மற்ற மால்வேர், வைரஸ்களையும் கண்டறிந்து நீக்குகிறது. கம்ப்யூட்டரின் இயக்க வேகத்தினை மந்தப்படுத்தி, அதனை மற்ற வைரஸ்களின் தாக்குதல் களுக்கு உள்ளாக்கும் ஸ்பைவேர் களையும் பிற மால்வேர்களையும் நீக்கி, தனிமைப்படுத்திப் பின்னர் அழிக்கிறது. இந்த ஸ்கேனர் கிடைக்கும் தள முகவரி: http://go.eset.com/us/online-scanner
5.சி.ஏ. ஆன்லைன் த்ரெட் ஸ்கேனர் (CA Online Threat Scanner): ஸ்பைவேர் தொகுப்புகளை ஸ்கேன் செய்வதுடன், மால்வேர் மற்றும் வைரஸ்களையும் கண்டறிகிறது. தொடர்ந்து வெளிவரும் ஸ்பைவேர் மற்றும் வைரஸ்களைக் கண்டறிந்து, அவற்றிற்கான சிக்னேச்சர் பைல்களுடன் அடிக்கடி அப்டேட் செய்யப்படுகிறது. மொத்தமாகக் கம்ப்யூட்டரில் உள்ள பைல்கள் அனைத்தையும் ஸ்கேன் செய்வதுடன், சுருக்கிவைக்கப்பட்ட ஸிப் பைல்களில் உள்ள, பைல்களையும் தனித்தனியே இதன் மூலம் ஸ்கேன் செய்திடலாம். ஸ்கேன் செய்து பார்த்திடச் செல்ல வேண்டிய தள முகவரி: http://cainternetsecurity.net/entscanner/
6.பண்டா ஆக்டிவ் ஸ்கேன் 2 (Panda Active Scan 2.0): இயக்குவதற்கு மிகவும் எளிமையானது. கம்ப்யூட்டரைக் கெடுக்க அனுப்பப்படும் அனைத்து வகையான புரோகிராம்களையும் கண்டறிந்து நீக்குகிறது. இந்த வகையில் அதி நவீன தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்துகிறது. ஸ்கேன் முடிந்தவுடன், கம்ப்யூட்டரின் முழு பாதுகாப்பு நிலை குறித்த அறிக்கை ஒன்று நமக்குக் கிடைக்கிறது. இதற்கான தள முகவரி: http://www.pandasecurity.com/activescan/index/
கிளவுட் கம்ப்யூட்டிங் முறை பிரபலமாகி வரும் இந்நாளில், நவீன தொழில் நுட்பத்துடன் இயங்கும் இத்தகைய ஆன்லைன் ஸ்பைவேர் ஸ்கேனர்கள் மற்றும் வைரஸ் நீக்கி களைப் பயன்படுத்துவது நமக்குப் பாதுகாப்பான, எளிமையான செயல் பாடாக இருக்கும். அனைத்து பிரவுசர் களிலும் இவை செயல்படும் என்றாலும், இவற்றைச் செயல்படுத்த இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் அண்மைக் கால பதிப்பினைப் பயன்படுத்துவது நல்லது. விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்து பவர்கள், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 8 பயன்படுத்தலாம். இவற்றைப் பயன் படுத்துவதனால், கம்ப்யூட்டரில் இன்ஸ் டால் செய்யப்பட்டிருக்கும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களை நீக்க வேண்டாம். தொடர்ந்த பாதுகாப்பிற்கு அவை தேவைப்படும்.
------------------- நன்றி -------------------
இந்த பதிவிற்கு ஓட்டு போட்டுவிட்டிர்களா? உங்கள் ஓட்டால் இந்த தகவல் அனைவருக்கும் சென்றடையும் ! ! !
0 comments:
Post a Comment