ப்ளூ நிறுவனம் லத்தீன் அமெரிக்க டேப்லெட் சந்தையில் மிகவும் ஆழமாக வேரூன்றிய நிறுவனம் ஆகும். அந்த நிறுவனம் உலக அளவில் ஆன்லைன் சில்லறை வர்த்தகத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்த நிறுவனம் பல டிவைஸ்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இப்போது அந்நிறுவனம் டச்புக் 7.0 என்ற டேப்லெட்டை அறிமுகப்படுத்தி இருக்கிறது.
இந்த ப்ளூ டச்புக் 7.0 டேப்லெட்டின் சிறப்பு அம்சங்களைப் பார்த்தால் அது ஆன்ட்ராய்டு 2.2 ப்ராயோ இயங்கு தளத்தைக் கொண்டிருக்கிறது. அதுபோல் 800 மெகா ஹெர்ட்ஸ் கடிகார வேகம் கொண்ட க்யூவல்காம் எம்எஸ்எம்7227-டி சிப்செட் ப்ராசஸரைக் கொண்டிருக்கிறது.
இந்த டேப்லெட்டின் பொதுவான அம்சங்களைப் பார்த்தால் அது 7.0 இன்ச் அளவில் டிஎப்டி கெப்பாசிட்டிவ் தொடுதிரை கொண்டுள்ளது. இந்த திரை 133 பிபிஐ பிக்சல் அடர்த்தியுடன் கூடிய 480 x 800 பிக்சல் ரிசலூசனைக் கொண்டிருக்கிறது. இதன் ரேம் மெமரி 512 எம்பி ஆகும். அதுபோல் இதன் ரோம் மெமரி 512 எம்பி ஆகும். இந்த மெமரியை மைக்ரோ எஸ்டி கார்டு மூலமாக 32 ஜிபி வரை அதிகரிக்க முடியும்.
இந்த ப்ளூ டேப்லெட்டின் இணைப்பு வசதிகளை எடுத்துக் கொண்டால் இது க்ளாஸ் 12 32-48 கேபிபிஎஸ் ஜிபிஆர்எஸ், எட்ஜ், டபுள்யுலேன், எ2டிபி இணைப்புடன் கூடிய ப்ளூடூத் வி2.1, மைக்ரோ யுஎஸ்பி மற்றும் ஜிபிஎஸ் போன்ற அணைத்து இணைப்பு வசதிகளையும் இதை வாங்குவோருக்கு அளிக்கிறது.
இதன் முக்கிய கேமரா 2048×1536 (3.15 எம்பி) பிக்சல்களைக் கொண்டிருக்கிறது. இதில் வீடியோ பதிவை செய்ய முடியும். அதுபோல் துணையாக விஜிஎ கேமராவும் இதில் உண்டு. மின் திறனிற்காக இந்த ப்ளூ டேப்லெட் 4250 எம்எஎச் அளவு கொண்ட லையன் பேட்டரியைக் கொண்டுள்ளது. இந்த பேட்டரி இந்த டேப்லெட்டுக்கு 500 மணி நேர ஸ்டான்-பை டைமையும், அதே நேரத்தில் 12 மணி நேர இயங்கு நேரத்தையும் அளிக்கிறது.
இந்த டேப்லெட்டின் மொத்த பரப்பு 197மிமீ x 120 மிமீ x 13.2 மிமீ ஆகும். அதுபோல் இதன் எடை 382 கிராம் மட்டுமே.
இந்த டேப்லெட் ஒரு வலிமை வாய்ந்த டிவைஸ் ஆகும். மேலும் இது நீண்ட ஆயுளையும் கொண்டிருக்கும். இது ஸ்டைலாகவும் இருக்கிறது. இதன் முன்பக்கம் 3 தொடு சென்சிட்டிவ் பட்டன்கள் உள்ளன. மேலும் இதன் பின்புறம் மேட் கருப்பு நிறம் உள்ளது. மேலும் இதன் முக்கிய கேமரா இதன் பின்புறம் ஒரு மூலையில் உள்ளது.
இந்த டேப்லெட்டின் விலை ரூ.12,000 ஆகும்.
0 comments:
Post a Comment