Total Pageviews

Thursday, 12 April 2012

facebook “முகநூல்” என்றால் Lady Gaga “பெண் காகா” வா?

 
 


மிழ்ப் பற்று இருக்க வேண்டியது தான் மறுக்கவில்லை அதற்காக சில நேரங்களில் நம்மவர்கள் அநியாயத்துக்கு பற்றாக இருப்பதை நினைத்தால் தான் கலக்கமாக இருக்கிறது. தமிழை வளர்க்க வேண்டும் தமிழிலே பேச வேண்டும் தமிழிலே எழுத வேண்டும் (தமிழுக்கு வந்த கொடுமையைப் பாருங்கள்) என்று பலர் தற்போது கூறி வருகிறார்கள். சந்தேகமில்லாமல் முழு மனதோடு வரவேற்கிறேன். இதோடு சேர்ந்து என்னுடைய சில கருத்துகளையும் கூற விரும்புகிறேன்.
ஆங்கிலச் சொற்களை தமிழ்ப்படுத்துவது மிக நல்ல விஷயம் தான் அதற்காக அனைத்தையுமே பெயர்ச்சொல் உட்பட தமிழ்ப்படுத்துவது எந்த வகையில் சரி என்பது எனக்குத் தெரியவில்லை.
எனக்கு ரொம்ப நாளாக ஒரு விஷயம் உறுத்திக்கொண்டே இருக்கிறது. நம்மவர்கள் தமிழ்ப் "படுத்துகிறேன்" என்று நிறுவனங்களின் பெயர்களை எல்லாம் தமிழ்ப்படுத்தி வருகிறார்கள். தமிழ்ப்படுத்த வேண்டும் என்றால் அது என்ன சேவையோ அதைத் தான் தமிழ்ப் படுத்த வேண்டுமே தவிர அந்த சேவையைத் தரும் நிறுவனத்தின் பெயரை அல்ல.
எடுத்துக்காட்டாக IE (Internet Explorer), Firefox, Chrome என்பது பெயர் (Brand Name). அவர்கள் தரும் அந்தப் பொருளின் அல்லது சேவையின் பெயர் ஆங்கிலத்தில் Browser. இதில் இந்த சேவையின் பெயரை தான் நாம் தமிழில் "உலவி" என்று மாற்ற வேண்டுமே தவிர அந்த நிறுவனங்களின் பெயரை அல்ல "நெருப்பு நரி" போல.
இதே போல தான் facebook Twitter Google + போன்ற நிறுவனங்களின் பெயர்களும். இவர்கள் தரும் சேவைகளுக்கு ஆங்கிலத்தில் Social Networks இதை தமிழில் "சமூகத்தளங்கள்" என்று மொழி மாற்றம் செய்து இருக்கிறார்கள். இதில் சமூகத்தளங்கள் என்பது தான் சரியே தவிர முகப்புத்தம், மூஞ்சிப்புத்தகம், முகநூல் என்று ஃபேஸ்புக்கை அழைப்பது தவறு.
browsers facebook முகநூல் என்றால் Lady Gaga பெண் காகா வா? இதில் பெரிய நகைச்சுவை என்னவென்றால் ஆங்கிலப் பெயரை தமிழ்ப் "படுத்த" முடிந்தால் மட்டுமே மாற்றுகிறார்கள் அதற்கு சரியான தமிழ் வார்த்தை கிடைக்கவில்லை என்றால் அதையே பயன்படுத்துகிறார்கள். பெயர்ச்சொல்லுக்கு அர்த்தம் எப்படி அனைத்திற்கும் கிடைக்கும்? face முகம் book நூல் (புத்தகம்) இதை எளிதாக மாற்றி விட்டீர்கள் Chrome இதை எப்படி மாற்றுவீர்கள்? மாற்ற முடியவில்லை அதனால் அனைவரும் க்ரோம் என்றே அழைத்து வருகிறார்கள். நல்லவேளை மைக்ரோசாஃப்ட் "நுண்மென்" என்று மாற்றம் பெறாமல் தப்பித்துக்கொண்டு இருக்கிறது icon wink facebook முகநூல் என்றால் Lady Gaga பெண் காகா வா? ஆமா! இதை மட்டும் எப்படிப்பா விட்டு வைத்தீங்க!
இதிலிருந்தாவது நீங்கள் செய்யும் தவறு புரிகிறதா? பெயர்ச்சொல்லை நம்மால் அனைத்து நேரங்களிலும் மாற்றம் செய்ய முடியாது Chrome Safari போல ஆனால் சேவைகளை நம்மால் மாற்றம் செய்ய முடியும் உலவி (Browser), இயங்கு தளம் (OS), பின்னூட்டம் (Comment), இடுகை (Post), சமூகத்தளங்கள் (Social Networks), வழங்கி (server) போல காரணம் இவைகளுக்கு அர்த்தம் இருக்கிறது. Windows, Linux என்பது Brand Name, Operating System என்பது பொதுவான வார்த்தை. எனவே Windows ஐ ஜன்னல்கள் என்று மாற்றம் செய்யக்கூடாது ஆனால் Operating System என்பதை இயங்கு தளம் என்று மாற்றம் செய்யலாம்.
சிலருக்கு இவ்வாறு கூற விருப்பம் இல்லை என்றாலும் அனைவரும் இதே போல கூறும் போது நாம் மாற்றிக்கூறினால் நன்றாக இருக்குமா! என்பதற்காகவே வேறு வழியில்லாமல் இது போல கூறுபவர்களும் இருக்கிறார்கள்.
Facebook Like facebook முகநூல் என்றால் Lady Gaga பெண் காகா வா? பிரபல பாப் பாடகி Lady Gaga வை இனி என்ன "பெண் காகா" என்று மாற்றுவீர்களா? நடிகர் செந்தில் ஒரு படத்தில் தனது கண்ணாயிரம் என்கிற பெயரை Eye Thousand என்று கூறித் திரிவது போல இருக்கிறது பெயர்ச்சொற்களை தமிழ்ப் படுத்த நினைப்பது. என்னுடைய பெயர் கிரி இதற்கு விளக்கம் "மலை" அதனால் என்னை ஒரு வெளிநாட்டுக்காரர் Hill என்று அழைத்தால் எப்படி இருக்குமோ அப்படி உள்ளது இவர்கள் செய்வது. என் துறை சார்ந்த பணியை கணிப் பொறியாளர் அல்லது வல்லுநர் என்று மொழி மாற்றம் செய்யலாம் என் பெயரை அல்ல.
தமிழ் மீது பற்றாக இருங்கள் பாராட்டப்பட வேண்டிய ஒன்று அதற்காக இது போல அனைத்தையும் "படுத்த" நினைத்தால்… ஒன்றும் சொல்வதற்கில்லை.
கொசுறு 1
Mustafa facebook முகநூல் என்றால் Lady Gaga பெண் காகா வா? இது சிங்கப்பூர் வாழ் நண்பர்களுக்காக. இது வரை நம்மால் இந்திய தூதரகம் தவிர்த்து இந்தியா விசா, பாஸ்போர்ட் மற்றும் சில தூதரக வேலைகளுக்கு முஸ்தபா சென்டரை அணுகி வந்தோம். நமக்கும் எளிதாக இருந்தது தற்போது இதை வேறு நிறுவனங்களுக்கு ஒப்பந்தத்தை மாற்றி விட்டார்கள். இணைத்துள்ள தகவலைப் படிக்கவும். படம் தகவல் நன்றி நண்பன் சோம்ஸ்.
கொசுறு 2
வரும் 15 தேதி டைட்டானிக் மூழ்கி 100 ஆண்டுகள் ஆகப் போகிறது. இதையொட்டி இங்கிலாந்தில் இருந்து டைட்டானிக் கப்பல் சென்ற வழியிலேயே ஒரு சொகுசு கப்பல் செல்லப்போகிறது. இதில் 28 நாடுகளை சேர்ந்தவர்கள் 1000 பேருக்கு மேல் 12 நாட்கள் பயணம் செய்கிறார்கள். இதில் டைட்டானிக் ல் பயணம் செய்தவர்களின் உறவினர்கள் அதிகம் பயணிக்கிறார்கள். அப்போது இருந்த வசதிக்கு ஈடு கொடுக்கும் அளவிற்கு இதிலும் வசதி செய்யப்போகிறார்களாம். 100 வருடங்களுக்கு முன்பு என்ன உடை அலங்காரம் இருந்ததோ அது போல கெட்டப்பில் செல்லப் போகிறார்களாம் icon smile facebook முகநூல் என்றால் Lady Gaga பெண் காகா வா? பார்த்து பத்திரமா போயிட்டு வாங்கப்பா!

0 comments:

Post a Comment

Popular Posts