சில சமயங்களில் மிகப் பெரிய File களை எப்படி மின்னஞ்சல் மூலம் அனுப்புவது என்று யோசித்துக் கொண்டிருப்போம். ஆனால் மின்னஞ்சல் மூலம் 25MB க்கு மேல் அனுப்ப முடியாது. இதற்கு கண்டிப்பாக வேறு சில தளங்களின் உதவி நமக்கு கட்டாயம் தேவை. அப்படிப் பட்ட தளங்களைப் பற்றிய பதிவு இது.
இதில் எந்த தளங்களிலும் நீங்கள் Register செய்யத் தேவை இல்லை.
1. We Transfer
We Transfer தளம் மிக அருமையாக இந்தப் பணியை செய்து தருகிறது. Add Files பகுதியில் File-ஐ தெரிவு செய்து விட்டு , இமெயில் முகவரி கொடுத்டு விட்டால் போதும். upload ஆகி உங்கள் File குறிப்பிட்ட நபருக்கு சென்று விடும். மிக அதிகம் பயன்படுத்தபடும் தளம் இது எனலாம்.
2. SizableSend
SizableSend தளமும் இந்தப் பணியை நல்ல முறையில் செய்து தருகிறது. இதில் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களுக்கு 2ஜிபி வரை அனுப்ப இயலும். Auto delete files after download என்ற வசதியை தெரிவு செய்தால் அனுப்பபட்ட File Download செய்யப்பட பின் Delete செய்யப்பட்டு விடும்.
இந்தத் தளமும் 2ஜிபி வரை File களை மின்னஞ்சல் செய்ய இயலும். 3 ஸ்டெப்களில் உங்கள் வேலை முடிந்து விடுகிறது.
இதே போல அதிக Size உள்ள File களை அனுப்ப உதவும் மற்ற தளங்கள் சில,
4. LargeFilesASAP - 2ஜிபி வரை ஒருவருக்கு மட்டும் இலவசமாக அனுப்ப
5. Drop Send
இதே முயற்சியை நீங்கள் Team Viewer- File Transfer மூலமாக கூட செய்ய இயலும். ஆனால் குறிப்பிட்ட நபர் உங்களுக்கு நம்பிக்கையானவர் என்ற பட்சத்தில் இதை நீங்கள் செய்யலாம். இல்லை என்றால் என்றால் மேலே கூறிய வழிகளை பின் பற்றவும்.
ஒன்றுக்கும் மேற்பட்ட File கள் என்றால் அவற்றை WinRar கொண்டு Compress செய்து கொள்ளவும். இங்கே File Size குறைக்க செய்யும் முயற்சிகள் தேவை இல்லை. உங்களின் அனைத்து File களும் 2ஜிபிக்குள் என்றால் ஒரே file ஆக அனுப்பவே இதை சொல்கிறேன்.
Thanks for the list! Another great site that I have made my standard for large file transfers is DropSend