Total Pageviews

Tuesday, 28 February 2012

இணைய உலகில் அசத்தப்போகும் புதிய ரோபோக்கள்

|0 comments

நாளுக்கு நாள் முன்னேறி வரும் இணையமானது இன்று ரோபோக்களையும் இணைத்து செயற்பட தயாராகவுள்ளது.

அன்ரோயிட் இயங்கு தளத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட EMIEW 2 என்ற ரோபோக்களை ஹிட்டாச்சி நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த ரோபோக்கள் புலனாகும்(visual) தகவல் பரிமாற்றங்களுக்கு பயன்படுத்தப்பட இருப்பதால் விஷேட கமெராவும் பொருத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Click here to view the embedded video.

புகைப்படங்களை ஐகான்களாக மாற்றும் பயனுள்ள இணையத்தளம்!!

|0 comments
 
 
பல்வேறு போர்மட்டுகளில்(PNG, JPG, GIF, BMP) உள்ள புகைப்படங்களை ICO என்ற ஐகான் போர்மட்டுகளாக மாற்றுவதற்கு ஒரு இணையத்தளம் உதவி புரிகிறது.
 
கீழே தரப்பட்டுள்ள லிங்கில் சென்று தளத்தை ஓபன் செய்து கொள்ளவும். அதன் பின் தோன்றும் விண்டோவில் உங்களுக்கு தேவையான புகைப்படத்தை Browse என்பதை கிளிக் செய்து உங்கள் கணணியில் இருந்தோ அல்லது இணையத்தில் தேடியோ பதிவேற்றம் செய்து கொள்ளவும்.
 
பின் Convert Now என்பதை கிளிக் செய்தால் உங்களது புகைப்படம் ஐகானாக மாற்றப்பட்டு விடும்.
 
இந்த தளம் விண்டோஸ் 7 இற்கு ஏற்ற ஐகான்களாக மாற்றவும், ஏற்கனவே ஐகான்களாக இருப்பவற்றை புகைப்படங்களாக மாற்றிவிடவும் உதவி புரிகிறது.

Saturday, 25 February 2012

விண்டோசில் கோப்பறைகளை பல்வேறு வண்ணத்தில் மாற்றுவதற்கு

|0 comments
 
 
விண்டோசில் உள்ள கோப்பறைகளை எளிதில் அடையாளம் கண்டறியும் வகையில் பல்வேறு விதமான வண்ணங்களில் மாற்றலாம்.
 
இதற்கு முதலில் Folder Colorizer என்ற லிங்கில் கிளிக் செய்து 1.28MB அளவுடையை சிறிய மென்பொருளை உங்கள் கணணியில் தரவிறக்கம் செய்து நிறுவிக் கொள்ளவும்.
 
இதன் பிறகு Free Activation என்ற விண்டோ வந்தால் உங்கள் மின்னஞ்சலை கொடுத்து Register செய்து கொள்ளவும். அங்கு உள்ள டிக் மார்க் எடுத்து விடவும்.
 
இதன் பிறகு நீங்கள் கொடுத்த மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு Verification Link அனுப்புவார்கள், அதை கிளிக் செய்து இந்த மென்பொருளை இலவசமாக ஆக்டிவேட் செய்து கொள்ளுங்கள். ஆக்டிவேட் செய்யாவிட்டாலும் இந்த மென்பொருளை உபயோகிக்க முடியும்.
 
கோப்பறைகளை வெவ்வேறு நிறங்களில் மாற்ற:
 
நீங்கள் நிறத்தை மாற்ற விரும்பும் கோப்பறை மீது ரைட் கிளிக் செய்து Colorize என்பதில் உங்களுக்கு தேவையான நிறத்தை கிளிக் செய்தால் போதும் சில வினாடிகளில் உங்களுடைய கோப்பறை அந்த நிறத்திற்கு மாறிவிடும்.
 
இதிலுள்ள நிறங்கள் உங்களுக்கு பிடிக்கவில்லை எனில் Colors என்பதை கிளிக் செய்து உங்களுக்கு வேண்டிய நிறத்தை நீங்களே உருவாக்கி கொள்ளலாம்.
 
இது போன்று உங்களுக்கு தேவையான நிறத்தை தெரிவு செய்து கோப்பறையில் வைத்து அழகாக மாற்றலாம்.
 
விண்டோசில் நிறத்தை மாற்றிய கோப்பறைகளை மீண்டும் பழைய வடிவில் கொண்டு வர அந்த கோப்பறை மீது ரைட் கிளிக் செய்து Colorize! ==> Restore Original Color என்பதை கொடுத்தால் பழைய நிறம் திரும்பவும் வந்துவிடும்.

Friday, 24 February 2012

உலகின் மிகச் சிறந்த இலவச வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் Avast 7 டவுன்லோட்

|0 comments
 
 
சமீப காலமாக வைரஸ் எதிர்ப்பு மென்பொருட்களில் ஒரு சிறந்த இடத்தை பெற்று வருகிறது Avast Antivirus மென்பொருள் .
 
பணம் கொடுத்து வாங்கும் சில மென்பொருட்களை விட இம்மென்பொருளின் இலவச பதிப்பு சிறப்பாக செயல் படுகிறது .
 
இதன் அண்மைய பதிப்பான Version 7 தற்போது வெளியிடப்பட்டுள்ளது .தேவைப் படுவோர் தரவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளுங்கள் .
 
தரவிறக்க இங்கே கிளிக் செய்யவும் .

Popular Posts