Total Pageviews

Wednesday, 15 February 2012

Three More Google Search Tips You Should Know About

|0 comments
 

We've covered a bunch of unpopular Google search tips and tricks before, and this is the next post in the series. Three pretty relatively lesser known Google search tips: one to know your computer's IP address, one that tells you the time anywhere int the world, and one more that alerts you about new books.

Know your IP address

Your IP address identifies your machine when you're connected to the internet. If you ever want to know what your computer's IP address is for some reason, just type [ip] or [what is my ip] or [ip address] into the Google search box.

google-ip-address-search

Google will now display your computer's IP address on top of the search results page, as you can see above.

Know the time anywhere

If you quickly want to know what time is it any part of the world, you don't have to hunt for another site/app. Neither do you have to do calculate it yourself.

time-place

Just type [what time is it in <place>] to know the time there. For instance, see what this query returns for [what time is it in New York].

Get alerts for new books

Google Books lets you search for books by author or publisher. There are two operators that serve the purpose: inauthor and inpublisher. For instance, a search for [inauthor: "seth godin"] returns a list of Seth's books.

book-search-author

A combination of these operators can be used to set up notifications for new books using Google Alerts, as Labnol describes. This will let you keep track new books from your favourite authors.

Got a tip? Share it in the comments. Read our previous articles on unpopular Google search operators here or here.

Post from: Killer Tech Tips

Three More Google Search Tips You Should Know About

No related posts.

Tuesday, 14 February 2012

வேர்ட்டின் போர்மட்டை மாற்றுவதற்கு

|0 comments
 


வேர்ட் டெக்ஸ்ட்டில் சில குறிப்பிட்ட சொற்களை மற்ற சொற்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்ட அழுத்தமாக(Bold), அடிக்கோடு(Underlined), சாய்வு(Italic) மற்றும் வேறு சில போர்மட்களில் அவற்றை அமைத்திருப்போம்.
இவ்வாறு அமைத்த பின்னர் இந்த போர்மட்டிங் தேவை இல்லை என எண்ணினால், இவற்றை மொத்தமாக நீக்க வேண்டுமென்றால் இதனைத் தெரிவு செய்து மெனு பார் சென்று ஒவ்வொரு ஐகானாகக் கிளிக் செய்வோம்.
இதற்குப் பதிலாக இரண்டு ஷார்ட்கட் கீகளைப் பயன்படுத்தலாம். போர்மட்டிங் நீக்கி எளிமையான டெக்ஸ்ட் மட்டுமே தேவைப்படும் சொற்களைத் தெரிவு செய்து கொள்ளுங்கள்.
பின் Ctrl+Shft+Z அழுத்துங்கள். மொத்தமாக போர்மட்டிங் அனைத்தும் நீக்கப்படும். Word உள்ளாக ResetChar என்ற கட்டளையை அமல்படுத்துகிறது. இதனை Ctrl+Space Bar அழுத்தியும் மேற்கொள்ளலாம்.
இதே போல ஏதேனும் பாரா(Para) போர்மட்டிங் செய்திருந்தால், அந்த போர்மட்டினை நீக்க பாராவினை செலக்ட் செய்து Ctrl+Q அழுத்துங்கள்.
டெக்ஸ்ட் ஒன்றுக்கு சாதாரண நார்மல் ஸ்டைல் இருந்தால் போதும் என்று எண்ணினால், உடனே அதனைத் தெரிவு செய்து Ctrl+Shift+N அழுத்தவும்.

Sunday, 12 February 2012

மானிட்டரில் பிரச்சினை ஏற்பட்டால் ?

|0 comments
 


அவசரமாக பணியாற்றிக் கொண்டிருக்கையில் கணணி சரியாக இயங்கினாலும் மொனிட்டர் பிரச்னை செய்தால் பொறுமையிழந்து பதட்டம் ஏற்படும்.
மற்ற துணை சாதனங்களில் பழுது ஏற்பட்டால் அவற்றிற்குப் பதிலாக இன்னொரு சாதனத்தைப் புதிதாகவோ அல்லது கடனாகவோ பெற்று அப்போதைக்கு நம் கணணி பணியை முடிக்கலாம்.

மவுஸ், கீ போர்டு, ஸ்பீக்கர், ஏன் சிடி மற்றும் பிளாப்பி டிரைவ் கூட உபரியாக வைத்துக் கொண்டு பயன்படுத்தலாம் அல்லது பழைய கணணியில் இருந்து கழட்டி வைத்ததைக் கொண்டு இயங்கலாம். ஆனால் மொனிட்டரில் பிரச்னை ஏற்ட்டால் அது இயலாது, உபரியாக ஒன்று வைத்துக் கொள்ளவும் முடியாது.

மற்றவரிடமிருந்து இரவல் வாங்குவதிலும் சிக்கல் ஏற்படும். எனவே மொனிட்டரில் பிரச்னை ஏற்பட்டால் அதனைப் பொறுமையாக, என்ன பிரச்னை என அலசிப் பார்ப்பதே சிறந்தது. அதற்கான சில வழிகளை இங்கு பார்ப்போம்.

உங்கள் கணணி நன்றாக இயங்கி மொனிட்டரில் எந்த சிக்னலும் வரவில்லை என்றால் கீழ்க்கண்டபடி அதனை ஆய்வு செய்யவும். ஆனால் அதில் எங்கு பிரச்னை என்று உங்களுக்குச் சரியாகத் தெரியும் என்றால் நேராக அதனைச் சரி செய்திடும் வழிக்கே சென்று விடலாம்.

1. முதலில் மொனிட்டருக்குச் செல்லும் மின்சாரம் இயக்கப்பட்டிருக்கிறதா என்று பார்க்கவும். மிகவும் பழைய பல ஆண்டுகளுக்கு முந்தைய கணணி மற்றும் மொனிட்டராக இருந்தால் கணணியின் சிபியூவில் இருந்தே மொனிட்டருக்கு பவர் கேபிள் செல்லும். இது சரியாகப் பொருந்தி உள்ளதா என்று பார்க்க வேண்டும்.

எதற்கும் ஒரு முறை எடுத்து மீண்டும் சரியாகப் பொருத்திப் பார்ப்பதே நல்லது. தற்போதைய மொனிட்டர் எனில் அதற்கு தனியே பவர் லைன் பிளக் கார்ட் இருக்கும்.

அது சரியானபடி பவர் பிளக் சாக்கெட்டில் பொருத்தப்பட்டிருக்கிறதா எனப் பார்க்கவும். அந்த பிளக்கிற்குத் தனியான ஸ்விட்ச் இருந்தால் அது ஆன் செய்யப்பட்டிருக்கிறதா என்று பார்க்கவும்.

மொனிட்டருக்கு மின்சாரம் செல்கிறது, அது ஆன் செய்யப்பட்டிருக்கிறது என்பதனை அறிந்து கொள்ள ஒரு சிறிய எல்.இ.டி. லைட் இருக்கும். இது மெலிதான ஆரஞ்ச் நிறத்தில் இருந்தால் மொனிட்டருக்கு மின்சாரம் செல்கிறது ஆனால் கணணியில் சிபியூவிலிருந்து சிக்னல் வரவில்லை என்று பொருள்.

2. அடுத்ததாக உங்கள் மொனிட்டரில் டிவியில் பிரைட்னஸ் மற்றும் காண்ட்ராஸ்ட் அட்ஜஸ்ட் செய்வதற்கான ஸ்விட்ச் கண்ட்ரோல் கொடுத்திருப்பார்ெகள். இதனை அட்ஜஸ்ட் செய்து பார்க்கவும்.

சில வேளைகளில் நாம் இல்லாத போது குழந்தைகள் இந்த கண்ட்ரோல் ஸ்விட்சுகளை அழுத்தி மாற்றி வைத்திருப்பார்கள். எனவே இவற்றை அட்ஜஸ்ட் செய்தால் மொனிட்டர் சரியாகலாம்.

3. அடுத்ததாக மொனிட்டருக்கு வரும் விடியோ கேபிளைச் சரி செய்து பார்க்கவும். அது சரியான முறையில் பொருத்தப்பட்டிருக்கிறதா எனப் பார்த்து மீண்டும் ஒரு முறை கழட்டி மாட்டவும்.

4. இன்னொரு மொனிட்டர் கிடைத்தால் அல்லது வீட்டில் இருந்தால் அதனை இந்த சிபியூவில் மாட்டிப் பார்க்கவும். வீடியோ கேபிள் பழையதையே மாட்டவும். இப்போதும் சரியாகக் காட்சி கிடைக்கவில்லை என்றால் விடியோ கேபிள் சரியில்லை என்று பொருள். இந்த கேபிளை மாற்றிப் பார்க்கலாம்.

5. முடியுமென்றால் சந்தேகத்திற்குரிய மொனிட்டரை இன்னொரு கணணியில் பொருத்திப் பார்க்கவும். அப்படியும் மொனிட்டர் சரியாக இயங்கவில்லை என்றால் மொனிட்டரில் தான் கோளாறு இருக்கிறது என்பது உறுதியாகிறது.

கணணியில் பிரச்னை இல்லை என்றும் தெரிகிறது. இந்நிலையில் உங்கள் மொனிட்டருக்குப் பதிலாகப் புதிய மொனிட்டர் வாங்கிப் பொருத்த வேண்டும் அல்லது நல்ல டெக்னீஷியனாகப் பார்த்து மொனிட்டரை ரிப்பேர் செய்திட வேண்டும்.

6. இன்னும் சில வழிகளில் மொனிட்டர் இயங்காமல் காட்சி அளிக்கும். கணணி பூட் ஆகும் போதும், பின்னர் காட்சி கிடைக்கும் போதும் தெளிவான காட்சி இல்லாமல் இருக்கும். இப்படி குழப்பமான காட்சி இருந்தால் உங்களுடைய டிஸ்பிளே கார்ட் சரியில்லை என்று பொருள்.

இதனை மாற்றிப் பாருங்கள். மாற்றப்பட்ட கார்டுடன் காட்சி தெளிவாக இருந்தால் பழைய டிஸ்பிளே கார்ட் பழுதாகிவிட்டது என்று பொருள். அதனை அப்படியே தூக்கி எறிய வேண்டியதுதான்.

புதிய டிஸ்பிளே கார்டுக்கும் மொனிட்டர் சரிப்பட்டு வரவில்லை என்றால் மொனிட்டரை மாற்றுங்கள் அல்லது ரிப்பேர் செய்திடுங்கள். புதியது வாங்குவது என முடிவு எடுத்துவிட்டால் செகண்ட் ஹேண்ட் மொனிட்டரை வாங்க வேண்டாம்.

அதே போல் புதிய மொனிட்டரை வாங்குகையில் அன்றைய நிலையில் அறிமுகமாகி உள்ள தொழில் நுட்பத்தின் அடிப்படையிலான மொனிட்டரை வாங்குங்கள்.

எடுத்துக்காட்டாக தற்போதெல்லாம் சி.ஆர்.டி எனப்படும் பழைய டிவி போன்ற மொனிட்டர்களை யாரும் வாங்கிப் பயன்படுத்துவது குறைந்து வருகிறது. அவற்றின் இடத்தில் தட்டையான எல்.சி.டி மொனிட்டர்கள், மிகக் குறைவான விலையில் கிடைக்கின்றன. அவற்றில் ஒன்றை வாங்கிப் பயன்படுத்தவும்.

மானிட்டர் பிரச்சனைகள்

|0 comments
 


கம்ப்யூட்டர் சரியாக இயங்கினாலும் மானிட்டர் தகராறு செய்தால் நம் கதி அதோ கதி தான். அவசரமாக பணியாற்ற வேண்டும் என எண்ணுகையில் மானிட்டரில் பிரச்னை ஏற்பட்டால் நமக்கு எரிச்சல் ஏற்படுவதுடன், பொறுமையிழந்து என்ன செய்வது எனத் தெரியாமல் பதட்டமடைவோம்.
மற்ற துணை சாதனங்களில் பழுது ஏற்பட்டால் அவற்றிற்குப் பதிலாக இன்னொரு சாதனத்தைப் புதிதாகவோ அல்லது கடனாகவோ பெற்று அப்போதைக்கு நம் கம்ப்யூட்டர் பணியை முடிக்கலாம்.
மவுஸ், கீ போர்டு, ஸ்பீக்கர், ஏன் சிடி மற்றும் பிளாப்பி டிரைவ் கூட உபரியாக வைத்துக் கொண்டு பயன்படுத்தலாம்; அல்லது பழைய கம்ப்யூட்டரில் இருந்து கழட்டி வைத்ததைக் கொண்டு இயங்கலாம்.
ஆனால் மானிட்டரில் பிரச்னை ஏற்ட்டால் அது இயலாது. உபரியாக ஒன்று வைத்துக் கொள்ளவும் முடியாது; ஏனென்றால் இடம், விலை நமக்குக் கட்டுபடியாகாது.
மற்றவரிடமிருந்து இரவல் வாங்குவதிலும் சிக்கல் ஏற்படும். எனவே மானிட்டரில் பிரச்னை ஏற்பட்டால் அதனைப் பொறுமை யாக, என்ன பிரச்னை என அலசிப் பார்ப்பதே சிறந்தது. அதற்கான சில வழிகளை இங்கு பார்ப்போம்.
உங்கள் கம்ப்யூட்டர் நன்றாக இயங்கி மானிட்டரில் எந்த சிக்னலும் வரவில்லை என்றால் கீழ்க்கண்டபடி அதனை ஆய்வு செய்யவும். ஆனால் அதில் எங்கு பிரச்னை என்று உங்களுக்குச் சரியாகத் தெரியும் என்றால் நேராக அதனைச் சரி செய்திடும் வழிக்கே சென்று விடலாம்.
1. முதலில் மானிட்டருக்குச் செல்லும் மின்சாரம் இயக்கப்பட்டிருக்கிறதா என்று பார்க்கவும். மிகவும் பழைய, பல ஆண்டுகளுக்கு முந்தைய, கம்ப்யூட்டர் மற்றும் மானிட்டராக இருந்தால் கம்ப்யூட்டரின் சிபியூவில் இருந்தே மானிட்டருக்கு பவர் கேபிள் செல்லும்.
இது சரியாகப் பொருந்தி உள்ளதா என்று பார்க்க வேண்டும். எதற்கும் ஒரு முறை எடுத்து மீண்டும் சரியாகப் பொருத்திப் பார்ப்பதே நல்லது. தற்போதைய மானிட்டர் எனில் அதற்கு தனியே பவர் லைன் பிளக் கார்ட் இருக்கும் அது சரியானபடி பவர் பிளக் சாக்கெட்டில் பொருத்தப்பட்டிருக்கிறதா எனப் பார்க்கவும்.
அந்த பிளக்கிற்குத் தனியான ஸ்விட்ச் இருந்தால் அது ஆன் செய்யப்பட்டிருக்கிறதா என்று பார்க்கவும். மானிட்டருக்கு மின்சாரம் செல்கிறது, அது ஆன் செய்யப் பட்டிருக்கிறது என்பதனை அறிந்து கொள்ள ஒரு சிறிய எல்.இ.டி. லைட் இருக்கும்.
இது மெலிதான ஆரஞ்ச் நிறத்தில் இருந்தால் மானிட்டருக்கு மின்சாரம் செல்கிறது ஆனால் கம்ப்யூட்டரின் சிபியூவிலிருந்து சிக்னல் வரவில்லை என்று பொருள்.
2. அடுத்ததாக உங்கள் மானிட்டரில் டிவியில் பிரைட்னஸ் மற்றும் காண்ட்ராஸ்ட் அட்ஜஸ்ட் செய்வதற்கான ஸ்விட்ச் கண்ட்ரோல் கொடுத்திருப்பார் கள். இதனை அட்ஜஸ்ட் செய்து பார்க்கவும். சில வேளைகளில் நாம் இல்லாத போது குழந்தைகள் இந்த கண்ட்ரோல் ஸ்விட்சுகளை அழுத்தி மாற்றி வைத்திருப்பார்கள். எனவே இவற்றை அட்ஜஸ்ட் செய்தால் மானிட்டர் சரியாகலாம்.
3. அடுத்ததாக மானிட்டருக்கு வரும் விடியோ கேபிளைச் சரி செய்து பார்க்கவும். அது சரியான முறையில் பொருத்தப்பட்டிருக்கிறதா எனப் பார்த்து மீண்டும் ஒரு முறை கழட்டி மாட்டவும்.
4. இன்னொரு மானிட்டர் கிடைத்தால் அல்லது வீட்டில் இருந்தால் அதனை இந்த சிபியூவில் மாட்டிப் பார்க்கவும். வீடியோ கேபிள் பழையதையே மாட்டவும். இப்போதும் சரியாகக் காட்சி கிடைக்க வில்லை என்றால் விடியோ கேபிள் சரியில்லை என்று பொருள். இந்த கேபிளை மாற்றிப் பார்க்கலாம்.
5. முடியுமென்றால் சந்தேகத்திற்குரிய மானிட்டரை இன்னொரு கம்ப்யூட்டரில் பொருத்திப் பார்க்கவும். அப்படியும் மானிட்டர் சரியாக இயங்கவில்லை என்றால் மானிட்டரில்தான் கோளாறு இருக்கிறது என்பது உறுதியாகிறது. கம்ப்யூட்டரில் பிரச்னை இல்லை என்றும் தெரிகிறது.
இந்நிலையில் உங்கள் மானிட்டருக்குப் பதிலாகப் புதிய மானிட்டர் வாங்கிப் பொருத்த வேண்டும். அல்லது நல்ல டெக்னீஷியனாகப் பார்த்து மானிட்டரை ரிப்பேர் செய்திட வேண்டும்.
6. இன்னும் சில வழிகளில் மானிட்டர் இயங்காமல் காட்சி அளிக்கும். கம்ப்யூட்டர் பூட் ஆகும் போதும், பின்னர் காட்சி கிடைக்கும் போதும் தெளிவான காட்சி இல்லாமல் கன்னா பின்னா என்று தெரியும்.
இப்படி குழப்பமான காட்சி இருந்தால் உங்களுடைய டிஸ்பிளே கார்ட் சரியில்லை என்று பொருள். இதனை மாற்றிப் பாருங்கள். மாற்றப்பட்ட கார்டுடன் காட்சி தெளிவாக இருந்தால் பழைய டிஸ்பிளே கார்ட் பழுதாகிவிட்டது என்று பொருள். அதனை அப்படியே தூக்கி எறிய வேண்டியதுதான்.
புதிய டிஸ்பிளே கார்டுக்கும் மானிட்டர் சரிப்பட்டு வரவில்லை என்றால் மானிட்டரை மாற்றுங்கள்; அல்லது ரிப்பேர் செய்திடுங்கள். புதியது வாங்குவது என முடிவு எடுத்துவிட்டால் செகண்ட் ஹேண்ட் மானிட்டரை வாங்க வேண்டாம்.
அதே போல் புதிய மானிட்டரை வாங்குகையில் அன்றைய நிலையில் அறிமுகமாகி உள்ள தொழில் நுட்பத்தின் அடிப்படையிலான மானிட்டரை வாங்குங்கள்.
எடுத்துக் காட்டாக இப்போதெல்லாம், சி.ஆர்.டி. எனப்படும் பழைய டிவி போன்ற மானிட்டர்களை யாரும் வாங்கிப் பயன்படுத்துவது குறைந்து வருகிறது.
அவற்றின் இடத்தில் தட்டையான எல்.சி.டி. மானிட்டர்கள், மிகக் குறைவான விலையில் கிடைக் கின்றன. அவற்றில் ஒன்றை வாங்கிப் பயன்படுத்தவும்.

Popular Posts