Total Pageviews

Thursday, 29 September 2011

கூகுள் குரோம் 10 - வசதிகள் !

|0 comments
 


 
 
பல்வேறு புதிய வசதிகளுடனும் மாற்றங்களுடனும் இந்த பதிப்பு வெளியாகியுள்ளது. கடந்த 2008 ஆம்ஆண்டில், குரோம் பிரவுசர் முதல் முறையாக வெளிவந்தது. பலர் இந்த பிரவுசரின் வேகத்தைப் பார்த்து, பயன்படுத்த முனைந்தனர். பின்னர்

பழகிப்போன சில வசதிகளுக்காக, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மற்றும் பயர்பாக்ஸ் பிரவுசரையும்பயன்படுத்தினர். ஆனால் இந்த புதிய குரோம் 10 பயன்படுத்தத் தொடங்கினால், மற்றவற்றை நாடமாட்டார்கள் என்ற பொதுக் கருத்து இப்போது நிலவுகிறது.

கூகுள் நிறுவனத்தின் குரோம் பிரவுசர் தன் பத்தாவது பதிப்பினை அண்மையில் வெளியிட்டுள்ளது. மூன்று வார சோதனைத் தொகுப்பு காலத்திற்குப் பின் இது வெளியாகியுள்ளது. ஆறு வார காலத்திற்குஒருமுறை குரோம் பிரவுசர் புதுப்பிக்கப்படும் என்ற கூகுள் நிறுவனத்தின் உறுதி மொழி மீண்டும்அமல்படுத்தப்பட்டுள்ளது.
 
 
இந்த புதிய குரோம் பிரவுசரின் சிறப்புகளை இங்கு பார்க்கலாம்:-

1.
முதல் அம்சமாக, மீண்டும் அதன் வேகத்தைக் கூறலாம்.

2.
முதல் முதலாக வந்த குரோம் பிரவுசரைக் காட்டிலும் இதன் வேகம் பத்து மடங்கு கூடுதலாகஇருப்பதாக, இதனைச் சோதித்துப் பார்த்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
3. Crankshaft JavaScript இதற்குத் துணை செய்கிறது. குறிப்பிட்ட ஒரு செயல்பாட்டினை மேற்கொண்டபோது, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 பதிப்பு 1,184 மில்லி விநாடிகளில் இணையப் பக்கத்தினை இறக்கிக்காட்டியது. அதே சோதனையை மற்றவற்றில் நடத்திய போது, பயர்பாக்ஸ் (பதிப்பு 3.6.15) 945 மில்லிசெகன்ட்ஸ், ஆப்பிள் சபாரி 422.1 மில்லி செகண்ட்ஸ், பயர்பாக்ஸ் (பதிப்பு 4 பீட்ட 12) - 388 மில்லிசெகண்ட்ஸ், புதிய குரோம் (பதிப்பு 10) 321 மில்லி செகண்ட்ஸ் வேகத்தைக் காட்டின.

இந்த பதிப்பில், குரோம் பிரவுசரின் செட்டிங்ஸ் அனைத்தும் டேப்களில் தரப்பட்டுள்ளன. இதனால், இவற்றைக் கையாள்வது எளிதாகிறது. செட்டிங்ஸ் மாற்ற, வலது மேல் மூலையில் உள்ள பைப் ரென்ச்ஐகானில் கிளிக் செய்தால், முன்பு போல் ஒரு பாப் அப் விண்டோ பெறப்படுவதில்லை. அதற்குப்பதிலாக, செட்டிங்ஸ் டேப்கள் நிறைந்த புதிய பக்கம் திறக்கப்படுகிறது. இதனால், நாம் பார்த்துக்கொண்டிருக்கும் இணையப் பக்கம் நம் கட்டுப்பாட்டிலிருந்து மறைவதில்லை. செட்டிங்ஸ் எப்படி, எங்குஉள்ளது என்று உடனடியாகத் தெரியவில்லை என்றால், அதற்கென ஒரு தேடல் வசதியும்தரப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக Cookies குறித்து ஒரு செட்டிங்ஸ் மாற்ற வேண்டும் என எண்னினால், சர்ச் பாக்ஸில் Cookies என டைப் செய்து என்டர் தட்ட, குக்கீஸ் குறித்த அனைத்து செட்டிங்குகளும்தனியே ஒரு டேப்பில் காட்டப்படும்.

4.
இந்த குரோம் பிரவுசரில் உள்ள புக்மார்க்குகளை, உங்களின் எந்த கம்ப்யூட்டரிலும் இணைத்துச்செயல் படுத்தலாம். லினக்ஸ், மேக் ஓ.எஸ். மற்றும் விண்டோஸ் என எந்தக் கம்ப்யூட்டரிலும் இவைஇணைந்து செயல்படும். இதுவரை எக்ஸ்மார்க்ஸ் ( Xmarks from www.xmarks.com ) என்னும் ஆட் ஆன்புரோகிராம்தான் இவ்வாறு புக்மார்க்ஸ் மற்றும் பாஸ்வேர்ட்களை அனைத்து வகைஇயக்கத்திற்கும்ஏற்ற வகையில் இணைத்து செயல்படும் வகையில் தந்து வந்தது. அந்த செயல்பாடு திறன், இப்போதுகுரோம் பிரவுசரில் தரப்பட்டுள்ளது. ஒரு நாளில் பலவகைக் கம்ப்யூட்டர்களில், பல கம்ப்யூட்டர் களில்மற்றும் லேப் டாப்களில் பணிபுரிவோருக்கு இந்த வசதி மிகவும் பயனுள்ளது.

5.
பொதுவாக கூகுள் தன் சாதனங்களில், பாதுகாப்பினை மிக அருமையாக பலப்படுத்தும். இந்தபிரவுசரில் பிளாஷ் பிளேயர் இணைந்து தரப்படுகிறது. பொதுவாக பிளாஷ் பயன்பாடு மூலம் தான், மால்வேர் மற்றும் வைரஸ்கள் ஊடுருவி பெர்சனல் கம்ப்யூட்டரைக் கெடுக்கின்றன. இதனை மனதில்கொண்டு, கூகுள் தன் சேண்ட் பாக்ஸ் ( Sandbox ) பாதுகாப்பினை, பிளாஷ் பிளேயருள்ளாகஅமைத்துள்ளது. எனவே ஏதேனும் வைரஸ் இந்த வழியைப் பின்பற்றினால், அது இந்த பாதுகாப்புவளையத்திற்குள் சிறைபிடிக்கப்பட்டு, கம்ப்யூட்டருக்குள் ஊடுருவ விடாமல் தடுக்கப்படுகிறது. விண்டோஸ் 7 கம்ப்யூட்டரில், இந்த சாண்ட் பாக்ஸ் தடுப்பை யாரேனும் உடைக்க முடியும் என்றுகாட்டினால், அவர்களுக்கு 20 ஆயிரம் டாலர் தருவதாக கூகுள் தன்னம்பிக்கையுடன் அறிவித்துள்ளது.

6.
மேலும் குரோம் பிரவுசர், ஓப்பன் சோர்ஸ் அடிப்படையில் உருவாக்கப் பட்டுள்ள தால், பாதுகாப்பில்ஏதேனும் சிக்கல் தென்பட்டால், யார் வேண்டு மானாலும் அதற்கு தீர்வு காணலாம்.

இந்த பிரவுசர் எச்.264 ( ஏ.264 ) வீடியோ பார்மட்டினை சப்போர்ட் செய்வதில்லை என்று பலர் குற்றம் சாட்டிஉள்ளனர். பொதுவாகவே, எந்த ஒரு வீடீயோ பார்மட்டிற்கும் பிளாஷ் பிளேயர் ஈடுகொடுப்பதால்,இதனைப் பற்றி கூகுள் அக்கறை கொள்ளவில்லை. மேலும் பாதுகாப்பு மற்றும் வேகம்ஆகிய இரண்டினைத்தான் பொதுவாக அனை வரும் எதிர்பார்க்கின்றனர் என்பதால், இது ஒரு பெரியபிரச்னையாகத் தெரியவில்லை.குரோம் பிரவுசரை இலவசமாக http://www.google.com/chrome என்றமுகவரியில் உள்ள தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
 
 
------------------- நன்றி -------------------
 
இந்த பதிவிற்கு ஓட்டு போட்டுவிட்டிர்களா?


ஸ்லிம் கிளீனர் !

|0 comments
 
 


கம்ப்யூட்டரைப் பராமரிக்கும் சாப்ட்வேர் தொகுப்புகள் பல இணையத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன. அந்த வகையில் அண்மையில் கிடைக்கும் ஒரு தொகுப்பு மிகப் பயனுள்ள வகையில் பல பராமரிப்பு பணிகளை, எளிதாக மேற்கொள்கிறது.

இதனை இயக்க, நமக்கு தொழில் நுட்ப உத்திகள் எதுவும் தெரிந்திருக்க வேண்டியதில்லை. இதன் பெயர் ஸ்லிம் கிளீனர் ( Slim Cleaner ). இதன் சோதனைத் தொகுப்பு தான் இப்போது வந்துள்ளது. இருப்பினும் செயல்பாட்டில் எந்த குறையும் இல்லாமல் இது பயனுள்ள முறையில் இயங்குகிறது.

இந்த வகையில் ஏற்கனவே பலருக்குத் தெரிந்த தொகுப்பான CCleaner போலவே இந்த புரோகிராமும் செயல்படுகிறது. சுத்தப்படுத்துவதற்கென நீக்கப்படும் டேட்டாவினை Windows, Applications மற்றும் Browsers என்ற மூன்று பிரிவுகளில் காட்டுகிறது. இந்த டேப்கள் மேலும் சில பிரிவுகளாக ( Windows History, Productivity மற்றும் FileSharing ) அமைக்கப் படுகின்றன.


ஒவ்வொரு பிரிவிலும் ஒரே புரோகிராமில் உள்ள தேவையற்ற டூப்ளிகேட் டேட்டாக்கள் காட்டப்பட்டு நீக்கப்படுகின்றன. Analyze என்ற பட்டனில் கிளிக் செய்தால், கம்ப்யூட்டர் சிஸ்டம் முழுமையாக ஸ்கேன் செய்யப்படுகிறது. இறுதியில் ஒவ்வொரு புரோகிராம் பிரிவிலும், நீக்கப்பட வேண்டிய டேட்டா காட்டப்படுகிறது.

இப்படி ஒவ்வொரு பிரிவிலும் டேட்டாவினைப் பார்த்திடாமல், நேரடியாகவே அனைத்து வேண்டாத டேட்டாக்களையும் நீக்கும் வழியும் உள்ளது. இதில்Services உள்ள டேப்பில் கிளிக் செய்தால், கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து சேவை வசதிகளும் பட்டியலிடப்பட்டு, அவை அப்போது எந்த நிலையில் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்று காட்டும். புரோகிராமின் restore டேப், நாம் தேவையில்லாமல் ஏற்படுத்திய மாறுதல்களை நீக்கி, அவற்றிற்கு முன் கம்ப்யூட்டர் இருந்த நிலைக்குக் கொண்டு செல்லும்.

இதில் உள்ள uninstaller புரோகிராம், கம்ப்யூட்டரில் பதியப்பட்டுள்ள புரோகிராம்களை, முழுமையாக எந்த மிச்ச பைலும் இன்றி நீக்குகிறது. அதே போல இதில் தரப்படும் file shredder வசதி, ஒரு பைலை, மீண்டும் யாரும் எடுக்க முடியாதவகையில், அழிக்கிறது. Windows Tools என்னும் வசதி, விண்டோஸ் கண்ட்ரோல் பேனல் மற்றும் சிஸ்டம் தரும் வசதிகளைத் தருகிறது. அந்த சிஸ்டம் பிரிவுகளில் பார்க்கும் அனைத்து வேலைகளையும் இதன் மூலமும் மேற்கொள்ளலாம்.

இந்த புரோகிராமினை http://lit.mn/2Mb என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இலவசமாக, டவுண்லோட் செய்திடலாம்.


------------------- நன்றி -------------------

இந்த பதிவிற்கு ஓட்டு போட்டுவிட்டிர்களா?


விண் பெட்ரோல் . . . . .

|0 comments
 
 
 
நம் கம்ப்யூட்டர் இயங்கு கையில், காவல் நாய் போல அதனைக் காக்கும் புரோகிராம் விண் பெட்ரோல். கம்ப்யூட்டரில் இயங்கும் புரோகிராம்கள் அனைத்திலும் ஒரு கண் வைத்துக் கொண்டு, நம் கம்ப்யூட்டரில் ஏதேனும் மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் புரோகிராம்களைக் கண்டறியும் இந்த புரோகிராம் அண்மையில் அப்டேட் செய்யப்பட்டுப் பல புதிய வசதிகளுடன் கிடைக்கிறது. கம்ப்யூட்டர் ஸ்டார்ட் ஆகும் போது, ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் இயங்கத் தொடங்கும் புரோகிராம்களின் பட்டியலை நமக்குத் தருகிறது. எந்த புரோகிராம் குறித்து சந்தேகம் நமக்கு எழுகிறதோ, அதன் மீது கிளிக் செய்தால், அது பற்றிய கூடுதல் தகவல்களை அளிக்கிறது. வேண்டாதவற்றை தொடங்க விடாமல் முடக்கி வைக்கவும் நமக்கு வசதி செய்து தருகிறது.

சில புரோகிராம்களை, கம்ப்யூட்டர் பூட் ஆகிச் சில நிமிடங்கள் கழித்துத் தொடங்கும்படி அமைத்திடலாம். இதனால், கம்ப்யூட்டரை வேகமாக பூட் செய்திடச் செய்து, நமக்கு உடனே தேவையான புரோகிராம்களை மட்டும் நம்மால் இயக்க முடியும்.

மறைவாக இயங்கும் புரோகிராம் களையும் கண்காணிக்க முடியும். குக்கி புரோகிராம்களை வடிகட்டலாம்; அவை எதற்காகக் கம்ப்யூட்டரில் பதியப்பட்டன என்று அறியலாம்.

மொத்தத்தில் கம்ப்யூட்டர் இயக்கத்தினை நம் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் இந்த புரோகிராம் நமக்குத் தேவையான ஒன்றாகும். இதனைப் பெற http://lit.mn/08b என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.


------------------- நன்றி -------------------

இந்த பதிவிற்கு ஓட்டு போட்டுவிட்டிர்களா?


சந்தையில் புதிய மொபைல்கள்

|0 comments
 
 

பட்ஜெட் விலையிலும், உயர்நிலை வசதிகளுடனும் சில மொபைல் போன்கள் சென்ற வாரம் விற்பனைக்கு அறிமுகமாகி யுள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.

1. மைக்ரோமேக்ஸ் எக்ஸ்1 (Micromax X11i): ஒருமுறை சார்ஜ் செய்தால், தொடர்ந்து 17 மணிநேரம் பேசுவதற்கு மின் திறன் தரும் பேட்டரியுடன் அறிமுகமாகியுள்ளது மைக்ரோமேக்ஸ் எக்ஸ் 1.1.ஐ. போன். இதன் அடுத்த சிறப்பு இதன் அதிக பட்ச விலை. ரூ.1,300 எனக் குறிப்பிடப்பட்டு விற்பனை செய்யப்படும் இந்த மொபைல், தொடக்க நிலையில் போன் களை வாங்க திட்ட மிடுபவர்களுக்கு உகந்ததாகும்.

இதன் எடை 95.3 கிராம். பரிமாணங்கள் 48x 15.75 x 113.5 மிமீ. 1.44 அங்குல அகலத்தில் வண்ணத் திரை, 8 ஜிபி வரை மெமரி திறன் அதிகப்படுத்த மைக்ரோ எஸ்.டி. கார்ட் போர்ட், இரண்டு சிம் இயக்கம், எஸ்.எம்.எஸ். அனுப்பும் வசதி, எம்பி3 பிளேயர், எப்.எம். ரேடியோ என அடிப்படை வசதிகள் மட்டுமே இதில் தரப்பட்டுள்ளது. இதில் கேமரா இல்லை. பார் டைப் போனாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. வீடு மற்றும் அலுவலக ஊழியர்களுக்கும், அடிக்கடி போன்களைத் தொலைத்துவிடும் சிறுவர்களுக்கும் வாங்கிக் கொடுக்க ஏற்ற மொபைல் இது. உறுதியான கட்டமைப்பினைக் கொண்டுள்ள இந்த போன் கருப்பு வண்ணத்தில் கிடைக்கிறது.

2.சாம்சங் சி 3322 மெட்ரோ டுயோஸ் (Samsung C3322 Metro Duos): இரண்டு சிம் இயக்கும் வகையில் இந்த போன் உருவாக்கப்பட்டுள்ளது . இதன் திரை 2.2 அங்குல அகலத்தில் உள்ளது. போனில் 46 எம்பி நினைவகம் தரப்படுகிறது. மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் நினைவகத்திறனை 16 ஜிபி வரை அதிகப்படுத்தலாம். வீடியோ இயக்கம் கொண்ட, 2 எக்ஸ் ஸூம் திறனுடன் 2 மெகா பிக்ஸெல் கேமரா, எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இன்ஸ்டண்ட் மெசஞ்சர், இ-மெயில், எம்பி3 பிளேயர், எப்.எம். ரேடியோ, 3.5 மிமீ ஆடியோ ஜாக், புளுடூத் ஆகிய வசதிகள் தரப்பட் டுள்ளன. மெடலிக் கருப்பு வண்ணத்தில் கேண்டி பார் வடிவில் இது வடிவமைக் கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதன் அதிக பட்ச விலை ரூ.3,900.

3. சாம்சங் இ 2222 (Samsung E2222 Chat 222): விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று விளம்பரப்படுத்தப்பட்ட இந்த போன், அண்மையில் விற்பனைக்கு வந்துள்ளது. நான்கு பேண்ட் ஜி.எஸ்.எம். அலைவரிசைகளில் இயங்கும் இந்த மொபைல் போன், 2.2 அங்குல வண்ணத்திரை, டிஜிட்டல் ஸூம் மற்றும் 0.3 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட வி.ஜி.ஏ. கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதன் எடை 90 கிராம். பரிமாணங்கள் 109.5x 61.3 x11.85 மிமீ. தொடர்ந்து 710 நிமிடங்கள் பேசும் அளவிற்கு மின் சக்தி தரும் பேட்டரி இணைக்கப்பட்டுள்ளது. இதன் மெமரி 43 எம்.பி. மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் இதனை 8 ஜிபி வரை அதிகப்படுத்தலாம். இரண்டு ஜி.எஸ்.எம். சிம்களை இயக்குகிறது. வீடியோ திறனுடன் கூடிய டிஜிட்டல் ஸூம் கேமரா, எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இன்ஸ்டண்ட் மெசஞ்சர், இ-மெயில், எம்பி3 பிளேயர், எப்.எம். ரேடியோ, A2DP இணைந்த புளுடூத் ஆகியவற்றுடன் கருப்பு வண்ணத்தில் பார் டைப் போனாக இது கிடைக்கிறது. இதன் அதிக பட்ச விலை ரூ.3,350.

4. எல்.ஜி. ஆப்டிமஸ் பிளாக் (LG Optimus Black P970): பார்த்தவுடன் நம்மைக் கவரும் இதன் சிறப்பு அம்சம், இந்த போனின் திரை தான். 4 அங்குல அகலத்தில் கொடுக்கப்பட்டுள்ள எல்.சி.டி. திரை ரம்மியமாகக் காட்சிகளைத் தருகிறது. மொபைல் போன் திரைகளில், மிகவும் பளிச் எனத் தெளிவாக, எளிதில் படிக்கக் கூடிய வசதி தரும் தொழில் நுட்பத்தில் இந்த திரை அமைக்கப்பட்டுள்ளது. நல்ல வெய்யிலில் கூட தெளிவாகத் திரைக் காட்சிகள் காட்டப் படுவதுடன், உண்மையான வண்ணங்களில், சிறப்பான நல்லதொரு இணைய காட்சிகளையும் தருகிறது. இதன் நினைவகம் 512 எம்.பி.யாக அமைக்கப்பட்டுள்ளது. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 32 ஜிபி வரை அதிகப்படுத்தலாம்.

பார் டைப் வடிவில் உள்ள இந்த போனில் ஒரு ஜி.எஸ்.எம். சிம் மட்டுமே பயன் படுத்தலாம். வழக்கமான கேமரா 5 எம்பி திறனுடன் டிஜிட்டல் ஸூம் வசதியுடன் உள்ளது. முன் பக்க கேமரா 2 எம்.பி. திறனுடன் தரப்பட்டுள்ளது. வீடியோ, 3ஜி வீடியோ அழைப்பு ஆகியவை எளிதாக இயக்கப்படும் தன்மையுடன் உள்ளன. எம்பி3 பிளேயர், ஆர்.டி.எஸ். ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ இசையைத் துல்லிதமாகவும் ரம்மியாகவும் தருகின்றன. எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இன்ஸ்டண்ட் மெசஞ்சர், இ–மெயில் ஆகியவை சிறப்பாக இயங்குகின்றன. நெட்வொர்க் இணைப்பிற்கு A2DP இணைந்த புளுடூத், வை-பி, 3ஜி HSDPA, 7.2 Mbps ஆகிய தொழில் நுட்பங்கள் உதவுகின்றன. இதன் சி.பி.யு. 1 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்குகிறது. ஆண்ட்ராய்ட் OS, v2.2(Froya),upgradable to v2.3 சிஸ்டம் இயக்குகிறது. இதன் மூலம் ஏறத்தாழ 1,50,000 அப்ளிகேஷன்களை இயக்கலாம். இதனால் ஆண்ட்ராய்ட் மல்ட்டி டெஸ்க்டாப் இன்டர்பேஸ் கிடைக்கிறது. மேலும் அக்ஸிலரோமீட்டர் டச் சென்சார் உள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 20,400.



------------------- நன்றி -------------------

இந்த பதிவிற்கு ஓட்டு போட்டுவிட்டிர்களா?
( நீங்கள் போடும் ஓட்டை வைத்து நான் தனிக்கட்சி ஆரம்பித்து சட்டசபை & நாடாளுமன்றம் செல்ல போவதும் இல்லை, பல கோடி ஊழல் செய்ய போவதும் இல்லை. என் தளம் அனைவரிடமும் செல்லவும் ஏதோ 10 காசு சம்பாரிக்கவும் தான் உங்கள் ஒட்டு எனக்கு தேவை, ஆகையால் மறக்காமல் ஒட்டு போடவும். )


குழுவாக இடுக்கை இட உங்களுக்கு விருப்பமா?

|0 comments
 
 
 
ஆம் எனில் இதை படியுங்கள் இந்த வசதியை நம்ம பிளாக்கர் தராங்க, இதுக்கு நீங்க செய்ய வேண்டியது ஒரு சிறிய வேலைதான் உங்க பிளாக்கிள போஸ்டிங் போடுரவுங்களுக்கு ஒரு நோடிவிகேஸன் மெயில் மட்டும் நீங்க அனுப்பினா போதும். அவர்கள் அதை ஏற்றுகொண்டால் பிறகு அவர்களும் உங்கள் பிளாக்கிள் இடுகை இடலாம். உங்களுக்கு இப்போது ஒரு சந்தேகம் வரும் மற்றவர்களை போஸ்டிங்போட வைத்தால் அவர்கள் நமது பிளாக்கின் லேயவுட்,டெம்ப்லேட்,இடுகையை திருத்துவது,போன்ற தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டால் என்ன செய்வது என்றுதானே?கவலை படாதீர்கள் அவர்களால் உங்கள் லேயவுட்,டெம்ப்லேட்,இடுகையை திருத்துவது,போன்ற வேலையை செய்ய முடியாது அவர்கள் இடுகை மட்டுமே இட முடியும்.மேலும் நீங்கள் விருப்பப்ட்டால் லேயவுட்,டெம்ப்லேட்,இடுகையை திருத்துவது,போன்ற வேலைகளை செய்யவும் அனுமதிக்கலாம். அது எப்படி என்று பார்ப்போம்.




1)முதலில் பிளாக்கர் கணக்குக்குள் உள்ஙுழைக
2)பின்வரும் படத்தை பார்க்க "Settings-->Permission"
 
3)"ADD AUTHOUR" என்பதை கிளிக் செய்யவும்.

4)உங்கள் நண்பரின் மின்னஞ்சல் முகவரியை டைப் செய்யவும்.


5) "INVITE" என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

இப்போது உங்கள் நண்பரின் மின்னஞ்சல் முகவரிக்கு நோடிவிகேஸன் மெயில் அனுப்பபட்டுவிடும். அதை அவர் அக்சப்ட் செய்து பிளாக்கர் கணக்குக்குள் தனியாக சென்று இக்டுகை இடலாம்.

6)இதில் இணைபவர்கள் இக்டுகை மட்டுமே இட முடியும்.

7) இவர் இடுகை இட வேண்டாம் என்றால் "REMOVE" என்பதை கிளிக் செய்க


மற்றும், Layout & Template, இடுகையை திருத்துவது,போன்ற வேலைகளை செய்யவும் இங்கு அனுமதிக்கலாம்.பின்வரும் படத்தை பாருங்கள்.


உங்கள் நண்பரின் முகவரிக்கு அருகில் "grand admin privelage" என்பதை கிளிக் செய்தால் போதும்.

மிகவும் நம்பகமானவர்களுக்கு மட்டுமே இதை அளியுங்கள்.




------------------- நன்றி -------------------

இந்த பதிவிற்கு ஓட்டு போட்டுவிட்டிர்களா?


GoogleLabs வழங்கும் - Google Scribe

|0 comments
 
 


வாரந்தோறும் ஏதேனும் ஆரவாரமாகச் செய்து, இணையத்தின் மூலம் அனைவரையும் வளைத்துப் போடும் முயற்சிகளில் கூகுள் ஈடுபட்டு வருவதனை நாம் கண்கூடாகக் காண்கிறோம். அந்த வகையில் கூகுள் லேப்ஸ் மையத்திலிருந்து இன்னொரு வசதி நமக்குக் கிடைத்துள்ளது.

ஆங்கிலத்தில் கடிதம், கட்டுரை என எந்த டெக்ஸ்ட் அமைக்க வேண்டும் என்றாலும், அதற்கான சொற்களை எடுத்துக் கொடுத்து உதவுகிறது. இந்த வசதி தரும் சாப்ட்வேர் சாதனத்திற்கு Google Scribe என்று பெயர் கொடுத்துள்ளது.

இந்த வசதி கிடைக்கும் தளம் செல்ல இங்கு கிளிக் செய்யவும்

இந்த வசதியினைப் பெற நாம் முதலில் இணைய இணைப்பில் இந்த தளத்திற்குச் செல்ல வேண்டும். இதில் நாம் டைப் செய்யத் தொடங்கிய வுடனேயே இந்த சொல் இதுவாக இருக்க வேண்டும் எனப் பல சொற்களைப் பட்டியலிட்டுக் காட்டுகிறது. நாம் தொடர்ந்து டைப் செய்திடலாம்;

அல்லது நாம் டைப் செய்திட விரும்பும் சொல் இருப்பின், கர்சரை நகர்த்தாமல், அதன் எதிரே இருக்கும் எண்ணுக்கான கீயை அழுத்தினால் போதும். அந்த சொல் அமைக்கப்படுகிறது. அடுத்து, அடுத்த சொல் டைப் செய்திடுகையில், நீங்கள் அமைக்க இருக்கும் வாக்கியம் என்னவாக இருக்கும் என்று உணர்ந்து, மீண்டும் அடுத்த சொற்களைத் தருகிறது.

இதனால், நமக்கு எழுத்துப் பிழை இல்லாமல் சொற்கள் கிடைக்கின்றன. அடுத்து ஆங்கிலத்தில் நல்ல சரியான சொற்கள் நம் எண்ணத்திற்கேற்ப தேர்ந்தெடுக்கும் வகையில் தரப்படுகின்றன. இதில் அனைத்து பிரிவு களுக்கும் சொற்கள் கிடைக் கின்றன.

அறிவியல் துறையில் நீங்கள் எழுத வேண்டும் என முயற்சித்தாலும், உங்களுடைய பொருளை உணர்ந்து கொண்டு, அதற்கேற்ற சொற்கள் பட்டியலிடப்படுகின்றன. இது ஆங்கிலத்தில் எழுத விரும்பும் அனைவருக்கும் ஒரு பயனுள்ள தளமாகும்.







------------------- நன்றி -------------------

இந்த பதிவிற்கு ஓட்டு போட்டுவிட்டிர்களா?


இலவச தரவிறக்க மென்பொருள் - ilivid

|0 comments
 
 
 
இணையத்தில் இருந்து ஒரு கோப்பினை பதிவிறக்கம் செய்ய நாம் "தரவிறக்க மென்பொருள்களை" பெரிதும் பயன்படுத்தி வருகிறோம். இந்த தரவிறக்க மென்பொருள்களை நாம் பயன்படுத்த ஓரே காரணம் பதிவிறக்கம் செயும் வேகத்தினை நமக்கு அதிகரித்து தருகின்றன.
 
இன்று இணையத்தில் இலவச தரவிறக்க மென்பொருள்கள் Internet Download Manager, Free Download Manager, Download Accelerator Plus என்று நிறைய உள்ளன. அந்த வரிசையில் தற்போது இடம் பிடித்து இருக்கும் புதிய தரவிறக்க மென்பொருள்கள் "ilivid" ஆகும்.
 
இந்த புதிய "ilivid" மென்பொருளில் நமக்கு நிறைய வசதிகள் கிடைக்கின்றன. அவைகள்
 
video link checker

Instant play

Play video links instantly while downloading:
Watch your video only few seconds after download starts.
video link checker

Link availability checker

Check video links availability while browsing any web page, no need to guess if the links are dead anymore!
Supports Rapidshare, Hotfile and more to come.
More...
rar video links support

Works with all types of Rar archives


Rar video links, multi-volume Rar archives and password protected Rar files are fully supported.
File hosting support

One-Click File Hosting downloads

One of the outstanding abilities of Internet Live Video Player is the ability to watch any video file hosted on remote hosting service over the internet.
Ilivid player fully Supports Rapidshare.com, Megaupload.com, Hotfile.com & many more.
Rapidshare premium

Rapidshare full support

Ilivid player is fully compatible with instant playback of videos hosted on rapidshare.com, for both premium and non-premium user downloads!
Free users support

Non premium users

Ilivid player is supporting not only users with a premium account but also users who don't pay!
Powered by VLC player

Powered by VLC player

Internet Live Video Player is bundled with the powerful VLC player, with additional features and abilities.
For a full feature list of VLC player please visit http://www.videolan.org/vlc/features.html
download vlc player here
All video formats are supported

Watch Any Video

All common Video Format are fully supported.
Input formats supported by bundled VLC: MPEG (ES,PS,TS,PVA,MP3),AVI,ASF / WMV / WMA,MP4 / MOV / 3GP,OGG / OGM / Annodex,Matroska (MKV),Real,WAV (incuding DTS),Raw Audio: DTS, AAC, AC3/A52,Raw DV,FLAC,FLV (Flash),MXF,Nut,Standard MIDI / SMF,Creative™ Voice.
Web page toolbar link grabber

Link Grabber

ilivid toolbar automatically grabs all video links in a web page and starts playing the video just seconds after download of the very first link begins.
 
இந்த புதிய "இலவச தரவிறக்க மென்பொருள்" முழுக்க முழுக்க Open Source ஆகும்.இதனால் இந்த மென்பொருளை நாம் விலை கொடுத்து வாங்க தேவை இல்லை. Premium மென்பொருளாக நமக்கு இது கிடைக்கிறது.
 
மேலும்,இந்த மென்பொருள் Hotfile.com & Megaupload.com & Rapidshare.com & Fileserve.com & Filefactory.com etc.... தளங்களில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்ய நமக்கு Support செய்கிறது. ( Internet Download Manager, Free Download Manager, Download Accelerator Plus இவைகள் இந்த தளங்களில் Support செய்வது இல்லை ) .
 
ஆகையால் நீங்களும் இந்த "ilivid" இலவச தரவிறக்க மென்பொருளை பயன்படுத்தி பயன்பெறுங்கள்.
 
 
 
------------------- நன்றி -------------------

இந்த பதிவிற்கு ஓட்டு போட்டுவிட்டிர்களா?

( நீங்கள் போடும் ஓட்டை வைத்து நான் தனிக்கட்சி ஆரம்பித்து சட்டசபை & நாடாளுமன்றம் செல்ல போவதும் இல்லை, பல கோடி ஊழல் செய்ய போவதும் இல்லை. என் தளம் அனைவரிடமும் செல்லவும் ஏதோ 10 காசு சம்பாரிக்கவும் தான் உங்கள் ஒட்டு எனக்கு தேவை, ஆகையால் மறக்காமல் ஒட்டு போடவும். )
 
 


என்ன Electronic Pick Pocket ? - புதுசால்ல இருக்கு !

|0 comments
 
 
 
தொழில்நுட்பம் வளர வளர ஒவ்வொரு துறையிளும் அவர் அவர்கள் தனது துறை சார்ந்த புதிய தொழில்நுட்பத்திற்கு தங்களை Update செய்து கொள்கின்றனர்.
 
இன்று நாம் பலவகை திருட்டுகளை பார்த்துவருகிறோம் அதிலும் இந்த "Electronic Pick Pocket" ய் யோசிச்சாவே கண்ணை கட்டுது. இன்று நாம் அனைவரும் Credit Card & Debit Card வைத்துள்ளோம். இந்த கார்டுகளை எப்பொழுதும் நாம் பாக்கெட்டில் வைத்து கொண்டு எங்கு வேணும்னாலும் செல்வோம். இனி இப்படி சென்றால் நம் பணத்தை Easyயாக திருடி சென்றுவிடுவார்கள்.

புரியவில்லையா? நம் கார்டுகளில் உள்ள விவரங்களை இந்த Electronic கருவி சேகரித்து வைத்து கொள்ளும் பின்பு கணிப்பொறியுடன் இந்த கருவியை இணைத்து அந்த தகவல்களை நாம் அறிந்து கொள்ள முடியும். இதனால் திருடர்களுக்கு எவ்வளவு வேலை மிச்சம் பார்த்திர்களா? நம் பணத்தை எளிதாக திருடிக்கொள்ள முடியும்.

ஒருவேளை நீங்கள் பாக்கெட்டில் Passport வைத்திருந்தால் அந்த Pasportடையும் சேர்த்து அதுல உள்ள விவரங்கள , களவாடும்கரது தான் இந்த Machine ஓட விசேசம் .




------------------- நன்றி -------------------

இந்த பதிவிற்கு ஓட்டு போட்டுவிட்டிர்களா?
 


Popular Posts