Total Pageviews

Thursday, 29 September 2011

விண் பெட்ரோல் . . . . .

 
 
 
நம் கம்ப்யூட்டர் இயங்கு கையில், காவல் நாய் போல அதனைக் காக்கும் புரோகிராம் விண் பெட்ரோல். கம்ப்யூட்டரில் இயங்கும் புரோகிராம்கள் அனைத்திலும் ஒரு கண் வைத்துக் கொண்டு, நம் கம்ப்யூட்டரில் ஏதேனும் மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் புரோகிராம்களைக் கண்டறியும் இந்த புரோகிராம் அண்மையில் அப்டேட் செய்யப்பட்டுப் பல புதிய வசதிகளுடன் கிடைக்கிறது. கம்ப்யூட்டர் ஸ்டார்ட் ஆகும் போது, ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் இயங்கத் தொடங்கும் புரோகிராம்களின் பட்டியலை நமக்குத் தருகிறது. எந்த புரோகிராம் குறித்து சந்தேகம் நமக்கு எழுகிறதோ, அதன் மீது கிளிக் செய்தால், அது பற்றிய கூடுதல் தகவல்களை அளிக்கிறது. வேண்டாதவற்றை தொடங்க விடாமல் முடக்கி வைக்கவும் நமக்கு வசதி செய்து தருகிறது.

சில புரோகிராம்களை, கம்ப்யூட்டர் பூட் ஆகிச் சில நிமிடங்கள் கழித்துத் தொடங்கும்படி அமைத்திடலாம். இதனால், கம்ப்யூட்டரை வேகமாக பூட் செய்திடச் செய்து, நமக்கு உடனே தேவையான புரோகிராம்களை மட்டும் நம்மால் இயக்க முடியும்.

மறைவாக இயங்கும் புரோகிராம் களையும் கண்காணிக்க முடியும். குக்கி புரோகிராம்களை வடிகட்டலாம்; அவை எதற்காகக் கம்ப்யூட்டரில் பதியப்பட்டன என்று அறியலாம்.

மொத்தத்தில் கம்ப்யூட்டர் இயக்கத்தினை நம் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் இந்த புரோகிராம் நமக்குத் தேவையான ஒன்றாகும். இதனைப் பெற http://lit.mn/08b என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.


------------------- நன்றி -------------------

இந்த பதிவிற்கு ஓட்டு போட்டுவிட்டிர்களா?


0 comments:

Post a Comment

Popular Posts