விண்டோஸ் 7 டாஸ்க்பார் ஹாட் கீ
விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் பலவிதமான ஷார்ட் கட் கீ மற்றும் ஹாட் கீ தொகுப்புகளைத் தந்துள்ளது. கீழே டாஸ்க்பாரில் நாம் இயக்கக் கூடிய ஹாட் கீகளைக் காணலாம்.
டாஸ்க்பாரில் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட அப்ளிகேஷனில் இயங்கும் பைல்கள் மொத்தமாக இருப்பின், அதன் மீது கர்சரைக் கொண்டு சென்று கண்ட்ரோல் + கிளிக் செய்தால், அந்த குரூப்பில் உள்ள பைல்கள் வரிசையாகக் காட்டப்படும்.
டாஸ்க்பாரில் உள்ள ஐட்டம் ஒன்றில், கண்ட்ரோல் + ஷிப்ட்+ கிளிக் செய்தால், அந்த புரோகிராம் அட்மினிஸ்ட்ரேட்டர் திறப்பது போலத் திறக்கப்படும்.
இதே போல டாஸ்க் பார் ஐட்டம் ஒன்றில் ஷிப்ட் + கிளிக் செய்தால், அதற்கான புரோகிராம் இயக்கத்தை இன்னொரு விண்டோவில் திறக்கும்.
டாஸ்க்பார் ஐட்டம் ஒன்றில் ஷிப்ட + ரைட் கிளிக் செய்தால், அந்த புரோகிராமிற்கான விண்டோ மெனு காட்டப்படும்.
நோட்பேட் ஒரு தகவல்
வழக்கமாக நோட்பேடினை நாம் சில கம்ப்யூட்டர் மொழிகளில் புரோகிராம் எழுதப் பயன்படுத்துவோம். சில டெக்ஸ்ட் பைல்களை எழுதப் பயன்படுத்துவோம். அப்படிப் பயன்படுத்துகையில் அதில் உள்ள அனைத்து வசதிகளையும் பயன் படுத்துகிறோமா என்றால் அது தான் இல்லை. நோட்பேட் வேர்ட் மாதிரி பார்மட்டிங் வசதிகள் அவ்வளவாக இல்லாத ஒரு சாப்ட்வேர் தொகுப்பு என்று தானே எண்ணிக் கொண்டிருக் கின்றோம். அதில் உள்ள ஒரு வசதியை இங்கு பார்ப்போம். நோட்பேடில் ஒரு பைலை உருவாக்கியோ அல்லது உருவாக்கிய பைலைத் திறந்து எடிட் செய்திடும்போதோ "Ctrl+g" என்ற கீகளை அழுத்தினால் எந்த வரிக்கு நீங்கள் செல்ல விரும்புகிறீர்கள் என்று ஒரு டயலாக் பாக்ஸ் வரும். அதில் எந்த வரி என்று எண்ணை அடித்தால் அந்த வரிக்கு உங்கள் கர்சர் எடுத்துச் செல்லப்படும். ஆனால் இந்த வசதியைப் பயன்படுத்துமுன் நீங்கள் ஒரு சிறிய காரியம் செய்ய வேண்டும். பார்மட் ("Format") மெனு சென்று அதில் வரும் மெனுவில் Word Wrap என்ற வசதிக்கு முன் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிட வேண்டும்.
இன்டர்நெட் இன்ஸெர்ட்
இன்டர்நெட் தளங்களில் உலா வருகை யில் சில படங்களைப் பார்த்து அவற்றை உங்கள் பவர்பாய்ண்ட் பிரசன்டேஷனில் பயன்படுத்த எண்ணினால் உடனே அப்படியே காப்பி செய்து பிரசன்டேஷன் பைலில் பேஸ்ட் செய்திட வேண்டாம். அதற்குப் பதிலாக காப்பி செய்த படத்தை ஒரு பிக்சர் சாப்ட்வேரில் (பெயிண்ட், அடோப் போட்டோஷாப்) பேஸ்ட் செய்து அதனை உங்கள் வசதிக்கேற்ற பார்மட்டிற்கு மாற்றி பின் Insert, Picture, From File என்ற கட்டளைகளைக் கொடுத்து படத்தை அமைத்திடுங்கள். நேரடியாக இன்டர் நெட்டில் காப்பி செய்து பிரசன்டேஷன் பைலில் ஸ்லைடில் பேஸ்ட் செய்தால் பின் ஒவ்வொரு முறை அந்த ஸ்லைடிற்குச் செல்லும்போதெல்லாம் கம்ப்யூட்டர் உடனே இணையத்தைத் தொடர்பு கொள்ள துடிக்கும். மேலும் இந்த படத்தை நீக்க வேண்டும் என திட்டமிட்டால் அதனை நீக்குவதும் கடினமாகிவிடும்.
எளிதில் சி ட்ரைவ்:
உங்களுடைய சி டிரைவில் என்ன என்ன உள்ளன என்று அறிய ஆவலா? விண்டோஸ் எக்ஸ்புளோரர் சென்று சி டிரைவ் மீது கிளிக் செய்து அறிவது ஒரு வழி. டாஸ் கமாண்ட் பிராம்ப்ட் வரவழைத்து அதில் C:\ என டைப் செய்து என்டர் அழுத்தி அறிவது ஒரு வழி. இன்னொரு வழியும் உள்ளது. எக்ஸ்பி தொகுப்பில் விண்டோஸ் கீ அல்லது ஸ்டார்ட் அழுத்தி அதில் வரும் மெனுவில் Run கிளிக் செய்து அதில் கிடைக்கும் விண்டோவில் C என மட்டும் டைப் செய்து என்டர் அழுத்துங்கள். உடனே விண்டோஸ் எக்ஸ்புளோரர் திறக்கப் பட்டு C டிரைவில் உள்ள போல்டர்கள் மற்றும் பைல்கள் காட்டப்படும். அல்லது \ என்ற பேக்ஸ்லாஷ் அமைத்து என்டர் தட்ட சி டிரைவ் பைல்கள் கிடைக்கும்.
------------------- நன்றி -------------------
இந்த பதிவிற்கு ஓட்டு போட்டுவிட்டிர்களா?
0 comments:
Post a Comment