பட்ஜெட் விலையிலும், உயர்நிலை வசதிகளுடனும் சில மொபைல் போன்கள் சென்ற வாரம் விற்பனைக்கு அறிமுகமாகி யுள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.
1. மைக்ரோமேக்ஸ் எக்ஸ்1 (Micromax X11i): ஒருமுறை சார்ஜ் செய்தால், தொடர்ந்து 17 மணிநேரம் பேசுவதற்கு மின் திறன் தரும் பேட்டரியுடன் அறிமுகமாகியுள்ளது மைக்ரோமேக்ஸ் எக்ஸ் 1.1.ஐ. போன். இதன் அடுத்த சிறப்பு இதன் அதிக பட்ச விலை. ரூ.1,300 எனக் குறிப்பிடப்பட்டு விற்பனை செய்யப்படும் இந்த மொபைல், தொடக்க நிலையில் போன் களை வாங்க திட்ட மிடுபவர்களுக்கு உகந்ததாகும்.
இதன் எடை 95.3 கிராம். பரிமாணங்கள் 48x 15.75 x 113.5 மிமீ. 1.44 அங்குல அகலத்தில் வண்ணத் திரை, 8 ஜிபி வரை மெமரி திறன் அதிகப்படுத்த மைக்ரோ எஸ்.டி. கார்ட் போர்ட், இரண்டு சிம் இயக்கம், எஸ்.எம்.எஸ். அனுப்பும் வசதி, எம்பி3 பிளேயர், எப்.எம். ரேடியோ என அடிப்படை வசதிகள் மட்டுமே இதில் தரப்பட்டுள்ளது. இதில் கேமரா இல்லை. பார் டைப் போனாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. வீடு மற்றும் அலுவலக ஊழியர்களுக்கும், அடிக்கடி போன்களைத் தொலைத்துவிடும் சிறுவர்களுக்கும் வாங்கிக் கொடுக்க ஏற்ற மொபைல் இது. உறுதியான கட்டமைப்பினைக் கொண்டுள்ள இந்த போன் கருப்பு வண்ணத்தில் கிடைக்கிறது.
2.சாம்சங் சி 3322 மெட்ரோ டுயோஸ் (Samsung C3322 Metro Duos): இரண்டு சிம் இயக்கும் வகையில் இந்த போன் உருவாக்கப்பட்டுள்ளது . இதன் திரை 2.2 அங்குல அகலத்தில் உள்ளது. போனில் 46 எம்பி நினைவகம் தரப்படுகிறது. மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் நினைவகத்திறனை 16 ஜிபி வரை அதிகப்படுத்தலாம். வீடியோ இயக்கம் கொண்ட, 2 எக்ஸ் ஸூம் திறனுடன் 2 மெகா பிக்ஸெல் கேமரா, எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இன்ஸ்டண்ட் மெசஞ்சர், இ-மெயில், எம்பி3 பிளேயர், எப்.எம். ரேடியோ, 3.5 மிமீ ஆடியோ ஜாக், புளுடூத் ஆகிய வசதிகள் தரப்பட் டுள்ளன. மெடலிக் கருப்பு வண்ணத்தில் கேண்டி பார் வடிவில் இது வடிவமைக் கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதன் அதிக பட்ச விலை ரூ.3,900.
3. சாம்சங் இ 2222 (Samsung E2222 Chat 222): விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று விளம்பரப்படுத்தப்பட்ட இந்த போன், அண்மையில் விற்பனைக்கு வந்துள்ளது. நான்கு பேண்ட் ஜி.எஸ்.எம். அலைவரிசைகளில் இயங்கும் இந்த மொபைல் போன், 2.2 அங்குல வண்ணத்திரை, டிஜிட்டல் ஸூம் மற்றும் 0.3 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட வி.ஜி.ஏ. கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதன் எடை 90 கிராம். பரிமாணங்கள் 109.5x 61.3 x11.85 மிமீ. தொடர்ந்து 710 நிமிடங்கள் பேசும் அளவிற்கு மின் சக்தி தரும் பேட்டரி இணைக்கப்பட்டுள்ளது. இதன் மெமரி 43 எம்.பி. மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் இதனை 8 ஜிபி வரை அதிகப்படுத்தலாம். இரண்டு ஜி.எஸ்.எம். சிம்களை இயக்குகிறது. வீடியோ திறனுடன் கூடிய டிஜிட்டல் ஸூம் கேமரா, எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இன்ஸ்டண்ட் மெசஞ்சர், இ-மெயில், எம்பி3 பிளேயர், எப்.எம். ரேடியோ, A2DP இணைந்த புளுடூத் ஆகியவற்றுடன் கருப்பு வண்ணத்தில் பார் டைப் போனாக இது கிடைக்கிறது. இதன் அதிக பட்ச விலை ரூ.3,350.
4. எல்.ஜி. ஆப்டிமஸ் பிளாக் (LG Optimus Black P970): பார்த்தவுடன் நம்மைக் கவரும் இதன் சிறப்பு அம்சம், இந்த போனின் திரை தான். 4 அங்குல அகலத்தில் கொடுக்கப்பட்டுள்ள எல்.சி.டி. திரை ரம்மியமாகக் காட்சிகளைத் தருகிறது. மொபைல் போன் திரைகளில், மிகவும் பளிச் எனத் தெளிவாக, எளிதில் படிக்கக் கூடிய வசதி தரும் தொழில் நுட்பத்தில் இந்த திரை அமைக்கப்பட்டுள்ளது. நல்ல வெய்யிலில் கூட தெளிவாகத் திரைக் காட்சிகள் காட்டப் படுவதுடன், உண்மையான வண்ணங்களில், சிறப்பான நல்லதொரு இணைய காட்சிகளையும் தருகிறது. இதன் நினைவகம் 512 எம்.பி.யாக அமைக்கப்பட்டுள்ளது. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 32 ஜிபி வரை அதிகப்படுத்தலாம்.
பார் டைப் வடிவில் உள்ள இந்த போனில் ஒரு ஜி.எஸ்.எம். சிம் மட்டுமே பயன் படுத்தலாம். வழக்கமான கேமரா 5 எம்பி திறனுடன் டிஜிட்டல் ஸூம் வசதியுடன் உள்ளது. முன் பக்க கேமரா 2 எம்.பி. திறனுடன் தரப்பட்டுள்ளது. வீடியோ, 3ஜி வீடியோ அழைப்பு ஆகியவை எளிதாக இயக்கப்படும் தன்மையுடன் உள்ளன. எம்பி3 பிளேயர், ஆர்.டி.எஸ். ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ இசையைத் துல்லிதமாகவும் ரம்மியாகவும் தருகின்றன. எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இன்ஸ்டண்ட் மெசஞ்சர், இ–மெயில் ஆகியவை சிறப்பாக இயங்குகின்றன. நெட்வொர்க் இணைப்பிற்கு A2DP இணைந்த புளுடூத், வை-பி, 3ஜி HSDPA, 7.2 Mbps ஆகிய தொழில் நுட்பங்கள் உதவுகின்றன. இதன் சி.பி.யு. 1 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்குகிறது. ஆண்ட்ராய்ட் OS, v2.2(Froya),upgradable to v2.3 சிஸ்டம் இயக்குகிறது. இதன் மூலம் ஏறத்தாழ 1,50,000 அப்ளிகேஷன்களை இயக்கலாம். இதனால் ஆண்ட்ராய்ட் மல்ட்டி டெஸ்க்டாப் இன்டர்பேஸ் கிடைக்கிறது. மேலும் அக்ஸிலரோமீட்டர் டச் சென்சார் உள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 20,400.
------------------- நன்றி -------------------
இந்த பதிவிற்கு ஓட்டு போட்டுவிட்டிர்களா?
( நீங்கள் போடும் ஓட்டை வைத்து நான் தனிக்கட்சி ஆரம்பித்து சட்டசபை & நாடாளுமன்றம் செல்ல போவதும் இல்லை, பல கோடி ஊழல் செய்ய போவதும் இல்லை. என் தளம் அனைவரிடமும் செல்லவும் ஏதோ 10 காசு சம்பாரிக்கவும் தான் உங்கள் ஒட்டு எனக்கு தேவை, ஆகையால் மறக்காமல் ஒட்டு போடவும். )
0 comments:
Post a Comment