Total Pageviews

Monday, 3 October 2011

Spywareகளை நீக்கும் இணைய தளங்கள் !

|0 comments
 
 

இணையத்தில் நுழைந்து தளங்களைக் காண்கையில், நம் அனுமதி பெறாமல், ஸ்பைவேர்கள் எனப்படும் வேவு பார்க்கும் நிரல்கள் கம்ப்யூட்டரில் வந்தமர்ந்து கொள்கின்றன. கம்ப்யூட்டரில் உள்ளீடு செய்யப்படும் தகவல்களை, ஸ்பைவேர் தயாரித்து அனுப்பியவர்களுக்கு அனுப்புகின்றன. மைக்ரோசாப்ட் அமைத்திடும் மலிசியஸ் ரிமூவல் டூல் மற்றும் பயர்வால்கள் இவற்றை ஓரளவு தான் தடுக்க முடிகிறது. மற்ற நிறுவனங்கள் தரும், ஆண்ட்டி வைரஸ் மற்றும் ஸ்பைவேர் நீக்கிடும் சாதனங்களும் முழுமையாக இவற்றின் முன் செயல்பட முடிவதில்லை. இதற்குக் காரணம் இத்தகைய பைல்களை தனிமைப்படுத்தி அறிய முடிவதில்லை என்பதுதான். இந்நிலையில் சில இணைய தளங்கள் இவற்றை நீக்கும் சேவையை நமக்குத் தருகின்றன. இவற்றைப் பயன்படுத்திப் பார்ப்பது நமக்கு எளிது தான். ஏனென்றால், இவற்றை டவுண்லோட் செய்து, பின்னர் இன்ஸ்டால் செய்து இயக்க வேண்டிய தில்லை. மேலும் ஆன்லைனில் இயங்கும் இந்த புரோகிராம்கள், தங்களுடைய சர்வர்கள் மூலமாக அவ்வப்போது தொடர்ந்து அப்டேட் செய்யப் படுகின்றன. இவற்றின் செயல்வேகமும் மற்றவற்றைக் காட்டிலும் அதிகம். இவ்வகையில் செயல்படும் சிறந்த ஆன்லைன் ஸ்கேனர் மற்றும் ஸ்பைவேர் நீக்கும் சாதனங்கள் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.

1. எப்--செக்யூர் ஆன்லைன் ஸ்கேனர் (F-Secure Online Scanner):
இந்த ஸ்கேனர் மூன்று வகையான செயல்முறைகளுடன், நமக்கு விருப்பமானதைத் தேர்ந்தெடுக்கும் வகையில் தரப்படுகிறது. அவை quick scan, full scan and my scan. இதன் உதவி பெற, உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள பிரவுசரில் ஜாவா ஸ்கிரிப்ட் இயக்கப்பட்டிருக்க வேண்டும். நீங்கள் அட்மினிஸ்ட் ரேட்டராகக் கம்ப்யூட்டரில் லாக் இன் செய்திருக்க வேண்டும். ஏனென்றால், இதன் மூலம் ஸ்கேனிங் மற்றும் ஸ்பைவேர் நீக்குவதற்கு சில பைல்களை உங்கள் கம்ப்யூட்டருக்கு டவுண்லோட் செய்திட, இந்த தளம் உங்கள் கம்ப்யூட்டரின் அட்மினிஸ்ட் ரேட்டர் அனுமதியினைக் கேட்கும். கம்ப்யூட்டர் முழுவதும் ஸ்கேன் செய்யப்பட்டு, வைரஸ் மற்றும் ஸ்பைவேர் புரோகிராம்கள் அனைத்தும் நீக்கப்படும். ஸ்கேன் செய்திட நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி: http://www.f-secure.com/en_ EMEA-Labs/security-threats/tools/online-scanner

2. பிட் டிபண்டர் ஆன்லைன் ஸ்கேனர்/ குவிக் ஸ்கேன் (Bit defender Online Scanner/Quick Scan): பிட் டிபன்டர் ஆண்ட்டி வைரஸ் சாப்ட்வேர் தொகுப்பில் இயங்கும் அதே தொழில் நுட்பம் தான், இதிலும் இயங்குகிறது. வைரஸ் மற்றும் ஸ்பைவேர் தொகுப்புகளை நீக்குவதில், மிக வேகமாகச் செயல்படும் தன்மை கொண்டது. விண்டோஸ் மற்றும் மேக் இயக்க கம்ப்யூட்டர்களில் செயல் படுகிறது. இத்தளத்தில் நீங்கள் ஸ்கேன் செய்திடச் செல்ல வேண்டிய இணைய முகவரி: http://www.bitdefender.com/scanner/online/free.html

3. சைமாண்டெக் செக்யூரிட்டி செக் (Symantec Security Check): சோதனை செய்யப்படும் கம்ப்யூட்டர், இணையம் வழி வரும் வைரஸ் மற்றும் ஸ்பைவேர் புரோகிராம்களுக்கு வழி விடும் வகையிலான பிழைகளுடன் உள்ளதா என இந்த தளம் சோதனை செய்கிறது. கம்ப்யூட்டருக்குள்ளாகவே இருக்கக் கூடிய ஸ்பைவேர்களின் பயமுறுத்தல்களையும் சோதனை செய்கிறது. இதற்கான தள முகவரி: http://security.symantec.com/sscv6 /WelcomePage.asp

4.ஈசெட் ஆன்லைன் ஸ்கேனர் (ESET Online Scanner): கம்ப்யூட்டர் பாது காப்பில் பயன்படுத்தப்படுகிற Threat Sense இஞ்சின் என்ற தொழில் நுட்பத்தினை இது பயன்படுத்துகிறது. பல நிலைகளில் அடுத்தடுத்து ஸ்கேன் செய்து பாதுகாப்பு அழிக்கும் தொழில் நுட்பம் இது. ஸ்பைவேர் மட்டுமின்றி, மற்ற மால்வேர், வைரஸ்களையும் கண்டறிந்து நீக்குகிறது. கம்ப்யூட்டரின் இயக்க வேகத்தினை மந்தப்படுத்தி, அதனை மற்ற வைரஸ்களின் தாக்குதல் களுக்கு உள்ளாக்கும் ஸ்பைவேர் களையும் பிற மால்வேர்களையும் நீக்கி, தனிமைப்படுத்திப் பின்னர் அழிக்கிறது. இந்த ஸ்கேனர் கிடைக்கும் தள முகவரி: http://go.eset.com/us/online-scanner

5.சி.ஏ. ஆன்லைன் த்ரெட் ஸ்கேனர் (CA Online Threat Scanner):
ஸ்பைவேர் தொகுப்புகளை ஸ்கேன் செய்வதுடன், மால்வேர் மற்றும் வைரஸ்களையும் கண்டறிகிறது. தொடர்ந்து வெளிவரும் ஸ்பைவேர் மற்றும் வைரஸ்களைக் கண்டறிந்து, அவற்றிற்கான சிக்னேச்சர் பைல்களுடன் அடிக்கடி அப்டேட் செய்யப்படுகிறது. மொத்தமாகக் கம்ப்யூட்டரில் உள்ள பைல்கள் அனைத்தையும் ஸ்கேன் செய்வதுடன், சுருக்கிவைக்கப்பட்ட ஸிப் பைல்களில் உள்ள, பைல்களையும் தனித்தனியே இதன் மூலம் ஸ்கேன் செய்திடலாம். ஸ்கேன் செய்து பார்த்திடச் செல்ல வேண்டிய தள முகவரி: http://cainternetsecurity.net/entscanner/

6.பண்டா ஆக்டிவ் ஸ்கேன் 2 (Panda Active Scan 2.0):
இயக்குவதற்கு மிகவும் எளிமையானது. கம்ப்யூட்டரைக் கெடுக்க அனுப்பப்படும் அனைத்து வகையான புரோகிராம்களையும் கண்டறிந்து நீக்குகிறது. இந்த வகையில் அதி நவீன தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்துகிறது. ஸ்கேன் முடிந்தவுடன், கம்ப்யூட்டரின் முழு பாதுகாப்பு நிலை குறித்த அறிக்கை ஒன்று நமக்குக் கிடைக்கிறது. இதற்கான தள முகவரி: http://www.pandasecurity.com/activescan/index/

கிளவுட் கம்ப்யூட்டிங் முறை பிரபலமாகி வரும் இந்நாளில், நவீன தொழில் நுட்பத்துடன் இயங்கும் இத்தகைய ஆன்லைன் ஸ்பைவேர் ஸ்கேனர்கள் மற்றும் வைரஸ் நீக்கி களைப் பயன்படுத்துவது நமக்குப் பாதுகாப்பான, எளிமையான செயல் பாடாக இருக்கும். அனைத்து பிரவுசர் களிலும் இவை செயல்படும் என்றாலும், இவற்றைச் செயல்படுத்த இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் அண்மைக் கால பதிப்பினைப் பயன்படுத்துவது நல்லது. விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்து பவர்கள், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 8 பயன்படுத்தலாம். இவற்றைப் பயன் படுத்துவதனால், கம்ப்யூட்டரில் இன்ஸ் டால் செய்யப்பட்டிருக்கும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களை நீக்க வேண்டாம். தொடர்ந்த பாதுகாப்பிற்கு அவை தேவைப்படும்.





------------------- நன்றி -------------------

இந்த பதிவிற்கு ஓட்டு போட்டுவிட்டிர்களா? உங்கள் ஓட்டால் இந்த தகவல் அனைவருக்கும் சென்றடையும் ! ! !


வேவு நிரல்களை நீக்கும் இணைய தளங்கள்

|0 comments
 

இணையத்தில் நுழைந்து தளங்களைக் காண்கையில், நம் அனுமதி பெறாமல், ஸ்பைவேர்கள் எனப்படும் வேவு பார்க்கும் நிரல்கள் கம்ப்யூட்டரில் வந்தமர்ந்து கொள்கின்றன. கம்ப்யூட்டரில் உள்ளீடு செய்யப்படும் தகவல்களை, ஸ்பைவேர் தயாரித்து அனுப்பியவர்களுக்கு அனுப்புகின்றன. மைக்ரோசாப்ட் அமைத்திடும் மலிசியஸ் ரிமூவல் டூல் மற்றும் பயர்வால்கள் இவற்றை ஓரளவு தான் தடுக்க முடிகிறது. மற்ற நிறுவனங்கள் தரும், ஆண்ட்டி வைரஸ் மற்றும் ஸ்பைவேர் நீக்கிடும் சாதனங்களும் முழுமையாக இவற்றின் முன் செயல்பட முடிவதில்லை. இதற்குக் காரணம் இத்தகைய பைல்களை தனிமைப்படுத்தி அறிய முடிவதில்லை என்பதுதான். இந்நிலையில் சில இணைய தளங்கள் இவற்றை நீக்கும் சேவையை நமக்குத் தருகின்றன. இவற்றைப் பயன்படுத்திப் பார்ப்பது நமக்கு எளிது தான். ஏனென்றால், இவற்றை டவுண்லோட் செய்து, பின்னர் இன்ஸ்டால் செய்து இயக்க வேண்டிய தில்லை. மேலும் ஆன்லைனில் இயங்கும் இந்த புரோகிராம்கள், தங்களுடைய சர்வர்கள் மூலமாக அவ்வப்போது தொடர்ந்து அப்டேட் செய்யப் படுகின்றன. இவற்றின் செயல்வேகமும் மற்றவற்றைக் காட்டிலும் அதிகம். இவ்வகையில் செயல்படும் சிறந்த ஆன்லைன் ஸ்கேனர் மற்றும் ஸ்பைவேர் நீக்கும் சாதனங்கள் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.
1. எப்–செக்யூர் ஆன்லைன் ஸ்கேனர் (F-Secure Online Scanner): இந்த ஸ்கேனர் மூன்று வகையான செயல்முறைகளுடன், நமக்கு விருப்பமானதைத் தேர்ந்தெடுக்கும் வகையில் தரப்படுகிறது. அவை quick scan, full scan and my scan. இதன் உதவி பெற, உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள பிரவுசரில் ஜாவா ஸ்கிரிப்ட் இயக்கப்பட்டிருக்க வேண்டும். நீங்கள் அட்மினிஸ்ட் ரேட்டராகக் கம்ப்யூட்டரில் லாக் இன் செய்திருக்க வேண்டும். ஏனென்றால், இதன் மூலம் ஸ்கேனிங் மற்றும் ஸ்பைவேர் நீக்குவதற்கு சில பைல்களை உங்கள் கம்ப்யூட்டருக்கு டவுண்லோட் செய்திட, இந்த தளம் உங்கள் கம்ப்யூட்டரின் அட்மினிஸ்ட் ரேட்டர் அனுமதியினைக் கேட்கும். கம்ப்யூட்டர் முழுவதும் ஸ்கேன் செய்யப்பட்டு, வைரஸ் மற்றும் ஸ்பைவேர் புரோகிராம்கள் அனைத்தும் நீக்கப்படும். ஸ்கேன் செய்திட நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி: http://www.f-secure.com/en_ EMEA-Labs/security-threats/tools/online-scanner

2. பிட் டிபண்டர் ஆன்லைன் ஸ்கேனர்/ குவிக் ஸ்கேன் (Bit defender Online Scanner/Quick Scan):
பிட் டிபன்டர் ஆண்ட்டி வைரஸ் சாப்ட்வேர் தொகுப்பில் இயங்கும் அதே தொழில் நுட்பம் தான், இதிலும் இயங்குகிறது. வைரஸ் மற்றும் ஸ்பைவேர் தொகுப்புகளை நீக்குவதில், மிக வேகமாகச் செயல்படும் தன்மை கொண்டது. விண்டோஸ் மற்றும் மேக் இயக்க கம்ப்யூட்டர்களில் செயல் படுகிறது. இத்தளத்தில் நீங்கள் ஸ்கேன் செய்திடச் செல்ல வேண்டிய இணைய முகவரி: http://www. bitdefender.com/scanner/ online/free.html

3. சைமாண்டெக் செக்யூரிட்டி செக் (Symantec Security Check): சோதனை செய்யப்படும் கம்ப்யூட்டர், இணையம் வழி வரும் வைரஸ் மற்றும் ஸ்பைவேர் புரோகிராம்களுக்கு வழி விடும் வகையிலான பிழைகளுடன் உள்ளதா என இந்த தளம் சோதனை செய்கிறது. கம்ப்யூட்டருக்குள்ளாகவே இருக்கக் கூடிய ஸ்பைவேர்களின் பயமுறுத்தல்களையும் சோதனை செய்கிறது. இதற்கான தள முகவரி: http://security.symantec.com /sscv6 /WelcomePage.asp

4.ஈசெட் ஆன்லைன் ஸ்கேனர் (ESET Online Scanner): கம்ப்யூட்டர் பாது காப்பில் பயன்படுத்தப்படுகிற Threat Sense இஞ்சின் என்ற தொழில் நுட்பத்தினை இது பயன்படுத்துகிறது. பல நிலைகளில் அடுத்தடுத்து ஸ்கேன் செய்து பாதுகாப்பு அழிக்கும் தொழில் நுட்பம் இது. ஸ்பைவேர் மட்டுமின்றி, மற்ற மால்வேர், வைரஸ்களையும் கண்டறிந்து நீக்குகிறது. கம்ப்யூட்டரின் இயக்க வேகத்தினை மந்தப்படுத்தி, அதனை மற்ற வைரஸ்களின் தாக்குதல் களுக்கு உள்ளாக்கும் ஸ்பைவேர் களையும் பிற மால்வேர்களையும் நீக்கி, தனிமைப்படுத்திப் பின்னர் அழிக்கிறது. இந்த ஸ்கேனர் கிடைக்கும் தள முகவரி: http://go.eset.com/us/online-scanner

5.சி.ஏ. ஆன்லைன் த்ரெட் ஸ்கேனர் (CA Online Threat Scanner): ஸ்பைவேர் தொகுப்புகளை ஸ்கேன் செய்வதுடன், மால்வேர் மற்றும் வைரஸ்களையும் கண்டறிகிறது. தொடர்ந்து வெளிவரும் ஸ்பைவேர் மற்றும் வைரஸ்களைக் கண்டறிந்து, அவற்றிற்கான சிக்னேச்சர் பைல்களுடன் அடிக்கடி அப்டேட் செய்யப்படுகிறது. மொத்தமாகக் கம்ப்யூட்டரில் உள்ள பைல்கள் அனைத்தையும் ஸ்கேன் செய்வதுடன், சுருக்கிவைக்கப்பட்ட ஸிப் பைல்களில் உள்ள, பைல்களையும் தனித்தனியே இதன் மூலம் ஸ்கேன் செய்திடலாம். ஸ்கேன் செய்து பார்த்திடச் செல்ல வேண்டிய தள முகவரி: http://cainternetsecurity.net/entscanner/

6.பண்டா ஆக்டிவ் ஸ்கேன் 2 (Panda Active Scan 2.0): இயக்குவதற்கு மிகவும் எளிமையானது. கம்ப்யூட்டரைக் கெடுக்க அனுப்பப்படும் அனைத்து வகையான புரோகிராம்களையும் கண்டறிந்து நீக்குகிறது. இந்த வகையில் அதி நவீன தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்துகிறது. ஸ்கேன் முடிந்தவுடன், கம்ப்யூட்டரின் முழு பாதுகாப்பு நிலை குறித்த அறிக்கை ஒன்று நமக்குக் கிடைக்கிறது. இதற்கான தள முகவரி: http://www.pandasecurity.com /activescan/index/

கிளவுட் கம்ப்யூட்டிங் முறை பிரபலமாகி வரும் இந்நாளில், நவீன தொழில் நுட்பத்துடன் இயங்கும் இத்தகைய ஆன்லைன் ஸ்பைவேர் ஸ்கேனர்கள் மற்றும் வைரஸ் நீக்கி களைப் பயன்படுத்துவது நமக்குப் பாதுகாப்பான, எளிமையான செயல் பாடாக இருக்கும். அனைத்து பிரவுசர் களிலும் இவை செயல்படும் என்றாலும், இவற்றைச் செயல்படுத்த இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் அண்மைக் கால பதிப்பினைப் பயன்படுத்துவது நல்லது. விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்து பவர்கள், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 8 பயன்படுத்தலாம். இவற்றைப் பயன் படுத்துவதனால், கம்ப்யூட்டரில் இன்ஸ் டால் செய்யப்பட்டிருக்கும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களை நீக்க வேண்டாம். தொடர்ந்த பாதுகாப்பிற்கு அவை தேவைப்படும்.


Thursday, 29 September 2011

கூகுள் குரோம் 10 - வசதிகள் !

|0 comments
 


 
 
பல்வேறு புதிய வசதிகளுடனும் மாற்றங்களுடனும் இந்த பதிப்பு வெளியாகியுள்ளது. கடந்த 2008 ஆம்ஆண்டில், குரோம் பிரவுசர் முதல் முறையாக வெளிவந்தது. பலர் இந்த பிரவுசரின் வேகத்தைப் பார்த்து, பயன்படுத்த முனைந்தனர். பின்னர்

பழகிப்போன சில வசதிகளுக்காக, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மற்றும் பயர்பாக்ஸ் பிரவுசரையும்பயன்படுத்தினர். ஆனால் இந்த புதிய குரோம் 10 பயன்படுத்தத் தொடங்கினால், மற்றவற்றை நாடமாட்டார்கள் என்ற பொதுக் கருத்து இப்போது நிலவுகிறது.

கூகுள் நிறுவனத்தின் குரோம் பிரவுசர் தன் பத்தாவது பதிப்பினை அண்மையில் வெளியிட்டுள்ளது. மூன்று வார சோதனைத் தொகுப்பு காலத்திற்குப் பின் இது வெளியாகியுள்ளது. ஆறு வார காலத்திற்குஒருமுறை குரோம் பிரவுசர் புதுப்பிக்கப்படும் என்ற கூகுள் நிறுவனத்தின் உறுதி மொழி மீண்டும்அமல்படுத்தப்பட்டுள்ளது.
 
 
இந்த புதிய குரோம் பிரவுசரின் சிறப்புகளை இங்கு பார்க்கலாம்:-

1.
முதல் அம்சமாக, மீண்டும் அதன் வேகத்தைக் கூறலாம்.

2.
முதல் முதலாக வந்த குரோம் பிரவுசரைக் காட்டிலும் இதன் வேகம் பத்து மடங்கு கூடுதலாகஇருப்பதாக, இதனைச் சோதித்துப் பார்த்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
3. Crankshaft JavaScript இதற்குத் துணை செய்கிறது. குறிப்பிட்ட ஒரு செயல்பாட்டினை மேற்கொண்டபோது, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 பதிப்பு 1,184 மில்லி விநாடிகளில் இணையப் பக்கத்தினை இறக்கிக்காட்டியது. அதே சோதனையை மற்றவற்றில் நடத்திய போது, பயர்பாக்ஸ் (பதிப்பு 3.6.15) 945 மில்லிசெகன்ட்ஸ், ஆப்பிள் சபாரி 422.1 மில்லி செகண்ட்ஸ், பயர்பாக்ஸ் (பதிப்பு 4 பீட்ட 12) - 388 மில்லிசெகண்ட்ஸ், புதிய குரோம் (பதிப்பு 10) 321 மில்லி செகண்ட்ஸ் வேகத்தைக் காட்டின.

இந்த பதிப்பில், குரோம் பிரவுசரின் செட்டிங்ஸ் அனைத்தும் டேப்களில் தரப்பட்டுள்ளன. இதனால், இவற்றைக் கையாள்வது எளிதாகிறது. செட்டிங்ஸ் மாற்ற, வலது மேல் மூலையில் உள்ள பைப் ரென்ச்ஐகானில் கிளிக் செய்தால், முன்பு போல் ஒரு பாப் அப் விண்டோ பெறப்படுவதில்லை. அதற்குப்பதிலாக, செட்டிங்ஸ் டேப்கள் நிறைந்த புதிய பக்கம் திறக்கப்படுகிறது. இதனால், நாம் பார்த்துக்கொண்டிருக்கும் இணையப் பக்கம் நம் கட்டுப்பாட்டிலிருந்து மறைவதில்லை. செட்டிங்ஸ் எப்படி, எங்குஉள்ளது என்று உடனடியாகத் தெரியவில்லை என்றால், அதற்கென ஒரு தேடல் வசதியும்தரப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக Cookies குறித்து ஒரு செட்டிங்ஸ் மாற்ற வேண்டும் என எண்னினால், சர்ச் பாக்ஸில் Cookies என டைப் செய்து என்டர் தட்ட, குக்கீஸ் குறித்த அனைத்து செட்டிங்குகளும்தனியே ஒரு டேப்பில் காட்டப்படும்.

4.
இந்த குரோம் பிரவுசரில் உள்ள புக்மார்க்குகளை, உங்களின் எந்த கம்ப்யூட்டரிலும் இணைத்துச்செயல் படுத்தலாம். லினக்ஸ், மேக் ஓ.எஸ். மற்றும் விண்டோஸ் என எந்தக் கம்ப்யூட்டரிலும் இவைஇணைந்து செயல்படும். இதுவரை எக்ஸ்மார்க்ஸ் ( Xmarks from www.xmarks.com ) என்னும் ஆட் ஆன்புரோகிராம்தான் இவ்வாறு புக்மார்க்ஸ் மற்றும் பாஸ்வேர்ட்களை அனைத்து வகைஇயக்கத்திற்கும்ஏற்ற வகையில் இணைத்து செயல்படும் வகையில் தந்து வந்தது. அந்த செயல்பாடு திறன், இப்போதுகுரோம் பிரவுசரில் தரப்பட்டுள்ளது. ஒரு நாளில் பலவகைக் கம்ப்யூட்டர்களில், பல கம்ப்யூட்டர் களில்மற்றும் லேப் டாப்களில் பணிபுரிவோருக்கு இந்த வசதி மிகவும் பயனுள்ளது.

5.
பொதுவாக கூகுள் தன் சாதனங்களில், பாதுகாப்பினை மிக அருமையாக பலப்படுத்தும். இந்தபிரவுசரில் பிளாஷ் பிளேயர் இணைந்து தரப்படுகிறது. பொதுவாக பிளாஷ் பயன்பாடு மூலம் தான், மால்வேர் மற்றும் வைரஸ்கள் ஊடுருவி பெர்சனல் கம்ப்யூட்டரைக் கெடுக்கின்றன. இதனை மனதில்கொண்டு, கூகுள் தன் சேண்ட் பாக்ஸ் ( Sandbox ) பாதுகாப்பினை, பிளாஷ் பிளேயருள்ளாகஅமைத்துள்ளது. எனவே ஏதேனும் வைரஸ் இந்த வழியைப் பின்பற்றினால், அது இந்த பாதுகாப்புவளையத்திற்குள் சிறைபிடிக்கப்பட்டு, கம்ப்யூட்டருக்குள் ஊடுருவ விடாமல் தடுக்கப்படுகிறது. விண்டோஸ் 7 கம்ப்யூட்டரில், இந்த சாண்ட் பாக்ஸ் தடுப்பை யாரேனும் உடைக்க முடியும் என்றுகாட்டினால், அவர்களுக்கு 20 ஆயிரம் டாலர் தருவதாக கூகுள் தன்னம்பிக்கையுடன் அறிவித்துள்ளது.

6.
மேலும் குரோம் பிரவுசர், ஓப்பன் சோர்ஸ் அடிப்படையில் உருவாக்கப் பட்டுள்ள தால், பாதுகாப்பில்ஏதேனும் சிக்கல் தென்பட்டால், யார் வேண்டு மானாலும் அதற்கு தீர்வு காணலாம்.

இந்த பிரவுசர் எச்.264 ( ஏ.264 ) வீடியோ பார்மட்டினை சப்போர்ட் செய்வதில்லை என்று பலர் குற்றம் சாட்டிஉள்ளனர். பொதுவாகவே, எந்த ஒரு வீடீயோ பார்மட்டிற்கும் பிளாஷ் பிளேயர் ஈடுகொடுப்பதால்,இதனைப் பற்றி கூகுள் அக்கறை கொள்ளவில்லை. மேலும் பாதுகாப்பு மற்றும் வேகம்ஆகிய இரண்டினைத்தான் பொதுவாக அனை வரும் எதிர்பார்க்கின்றனர் என்பதால், இது ஒரு பெரியபிரச்னையாகத் தெரியவில்லை.குரோம் பிரவுசரை இலவசமாக http://www.google.com/chrome என்றமுகவரியில் உள்ள தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
 
 
------------------- நன்றி -------------------
 
இந்த பதிவிற்கு ஓட்டு போட்டுவிட்டிர்களா?


ஸ்லிம் கிளீனர் !

|0 comments
 
 


கம்ப்யூட்டரைப் பராமரிக்கும் சாப்ட்வேர் தொகுப்புகள் பல இணையத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன. அந்த வகையில் அண்மையில் கிடைக்கும் ஒரு தொகுப்பு மிகப் பயனுள்ள வகையில் பல பராமரிப்பு பணிகளை, எளிதாக மேற்கொள்கிறது.

இதனை இயக்க, நமக்கு தொழில் நுட்ப உத்திகள் எதுவும் தெரிந்திருக்க வேண்டியதில்லை. இதன் பெயர் ஸ்லிம் கிளீனர் ( Slim Cleaner ). இதன் சோதனைத் தொகுப்பு தான் இப்போது வந்துள்ளது. இருப்பினும் செயல்பாட்டில் எந்த குறையும் இல்லாமல் இது பயனுள்ள முறையில் இயங்குகிறது.

இந்த வகையில் ஏற்கனவே பலருக்குத் தெரிந்த தொகுப்பான CCleaner போலவே இந்த புரோகிராமும் செயல்படுகிறது. சுத்தப்படுத்துவதற்கென நீக்கப்படும் டேட்டாவினை Windows, Applications மற்றும் Browsers என்ற மூன்று பிரிவுகளில் காட்டுகிறது. இந்த டேப்கள் மேலும் சில பிரிவுகளாக ( Windows History, Productivity மற்றும் FileSharing ) அமைக்கப் படுகின்றன.


ஒவ்வொரு பிரிவிலும் ஒரே புரோகிராமில் உள்ள தேவையற்ற டூப்ளிகேட் டேட்டாக்கள் காட்டப்பட்டு நீக்கப்படுகின்றன. Analyze என்ற பட்டனில் கிளிக் செய்தால், கம்ப்யூட்டர் சிஸ்டம் முழுமையாக ஸ்கேன் செய்யப்படுகிறது. இறுதியில் ஒவ்வொரு புரோகிராம் பிரிவிலும், நீக்கப்பட வேண்டிய டேட்டா காட்டப்படுகிறது.

இப்படி ஒவ்வொரு பிரிவிலும் டேட்டாவினைப் பார்த்திடாமல், நேரடியாகவே அனைத்து வேண்டாத டேட்டாக்களையும் நீக்கும் வழியும் உள்ளது. இதில்Services உள்ள டேப்பில் கிளிக் செய்தால், கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து சேவை வசதிகளும் பட்டியலிடப்பட்டு, அவை அப்போது எந்த நிலையில் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்று காட்டும். புரோகிராமின் restore டேப், நாம் தேவையில்லாமல் ஏற்படுத்திய மாறுதல்களை நீக்கி, அவற்றிற்கு முன் கம்ப்யூட்டர் இருந்த நிலைக்குக் கொண்டு செல்லும்.

இதில் உள்ள uninstaller புரோகிராம், கம்ப்யூட்டரில் பதியப்பட்டுள்ள புரோகிராம்களை, முழுமையாக எந்த மிச்ச பைலும் இன்றி நீக்குகிறது. அதே போல இதில் தரப்படும் file shredder வசதி, ஒரு பைலை, மீண்டும் யாரும் எடுக்க முடியாதவகையில், அழிக்கிறது. Windows Tools என்னும் வசதி, விண்டோஸ் கண்ட்ரோல் பேனல் மற்றும் சிஸ்டம் தரும் வசதிகளைத் தருகிறது. அந்த சிஸ்டம் பிரிவுகளில் பார்க்கும் அனைத்து வேலைகளையும் இதன் மூலமும் மேற்கொள்ளலாம்.

இந்த புரோகிராமினை http://lit.mn/2Mb என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இலவசமாக, டவுண்லோட் செய்திடலாம்.


------------------- நன்றி -------------------

இந்த பதிவிற்கு ஓட்டு போட்டுவிட்டிர்களா?


Popular Posts